அன்பார்ந்த நண்பர்களே
பக்தி மார்க்கத்தில் தழைத்து இருக்கும் அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் .
நாம் வீட்டில் ,கோவிலில் பூஜை செய்யும் போது வெற்றிலை , பாக்கு ,பழம் வைத்து பூஜை செய்வோம்.அது எதுக்கு? என்று நிறைய பேர்களுக்கு தெரியாது .எது செய்தாலும் ஏன் ,எதுக்கு செய்கிறோம் என்று தெரிஞ்சு செய்தால், நாம் செய்கின்ற காரியம் சரியான முறையில் சென்றடையும் என்பதில் துளி கூட சந்தேகமில்லை .
நம் மூதாதையர் நமக்கு நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள்.நாம்தான் அதை பின்பற்ற மறந்து விடுகிறோம் . இனிமேலாவது அதைக் கடைபிடிப்போம்.
சுவாமிக்கு ஏன் வெற்றிலை ,பாக்கு , பழம் வைத்து பூஜை செய்கிறோம்?
வெற்றிலையும் , பாக்கும் மகாலட்சுமியின் அம்சம் . வெற்றிலையின் நுனியில் லக்ஷ்மியும்,நடுவில்
சரஸ்வதியும்,காம்பில் பார்வதி தேவியும் இருக்கிறார்கள் .வெற்றிலை ,பாக்கு ,பழம் வைத்து
இறைவனை வணங்குவது மரபு. வெற்றிலை,பாக்கு வைத்து வணங்கவில்லையெனில், எந்த ஒரு பூஜையும் நிறைவு பெறாது .
வெற்றிலை ,நோயில்லாமல் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பாக்கு செல்வம் கிடைக்க வழிவகுக்கிறது .பாக்கு வைத்து இறைவனை வணங்கினால் நமக்கு குறைவற்ற செல்வம் கிடைக்கும் .
வாழைப்பழம் பாவ -புண்ணிய விடுதலையை குறிக்கும் .
தேங்காய் அறிவை தரும் .
தேங்காய் ,வெற்றிலை,பாக்கு ,பழம் வைத்து அர்ச்சனை செய்வது நமக்கு அறிவு,ஆரோக்கியம் ,
செல்வம் ,பாவ-புண்ணிய விடுதலை ஆகியவற்றை தர வேண்டும் என்பதால் தான் .
கருணை கடலான இறைவனை பூஜிக்கும் போது இவற்றை வைத்து பூஜிக்க வேண்டும் .
திருமணத்திற்கு அழைக்கும் போது வெற்றிலை , பாக்கு, பழத்துடன் அழைக்க வேண்டும் .அதுதான்
மரியாதைக்குரிய செயல் ஆகும்.
விருந்தினர்களுக்கு சுப காரியத்தின் போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் ஒரு
பொருளோடு வெற்றிலையும்,பாக்கும் சேர்த்து கொடுத்தால் நம் குடும்பம் செழித்தோங்கும் .
மங்கள பொருளான வெற்றிலை,பாக்கை வலது கையால் வாங்க வேண்டும்.
வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது .சீதை , "ராமன் போரில் ராவணனை வென்றான்" என்ற செய்தி கூற வந்த அனுமனிடம் ,"வெற்றி உண்டாகட்டும் "என்று வெற்றிலை மரத்தில் வெற்றிலையை பறித்து ஆசீர்வதித்தாள்.ஆகையால் வெற்றிலை மாலை சார்த்தி ,அஞ்சநேயரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும் என்பது உறுதி .
வெற்றிலையை வாட விடுவது வீட்டிற்கு நல்லதல்ல .
வெற்றிலை ஒரு கர்ப்ப மூலிகை .இதனுடன் சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட தேவையான கால்சியம்
சத்து கிடைக்கும்.
வெற்றிலை நரை ,மூப்பு ,திரை ,சாக்காடு ஆகியவற்றை நீக்கி ,உடலை என்றும் நோயின்றி
வைத்திருக்க பயன்படுகிறது . புற்று நோயை குணப்படுத்துகிறது. இருமல்,வாயு கோளாறு போக்கவல்லது .தீப்புண்ணை ஆற செய்கிறது .
என்னுடைய கருத்துக்கள் உங்களுக்கு நல்ல பயன்களை தரும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும்
எல்லாம் இறைவன் செயல் என்று சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன்.
உங்கள் கருத்தை எழுதினால் எனக்கு ஒரு தூண்டு கோலாக அமையும் .
நன்றி .வணக்கம் .
உங்கள் ஈஸ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக