சங்கர நாராயணன்
தபசு என்றால் தவம் என்று பொருள்.ஆதிசக்தி கோமதியம்மனாக அவதரித்து,சிவனை நோக்கி தவமிருந்த விழாதான் ஆடி தபசு.
ஒரு காரியத்தில் இறங்கும்போது அதிலிருந்து சிறிதும் விலகாமல்,வெற்றி அடைவது மிகப்பெரிய செயல்.
ஏன் பார்வதிதேவி தவம் இருந்தார்கள்?
சங்கரன்,பத்மன் என்ற நாக அரசர்கள் இருந்தனர்.இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே அவர்கள் எலியும்,பூனையுமாக இருந்தனர்.அது என்ன தெரியுமா?அதுதான் சிவன் பெரியவரா?விஷ்ணு பெரியவரா? என்பதுதான்.
அதற்கு காரணம் சங்கரன்--வீர சைவன்
பத்மன் ---பழுத்த வைணவன்
நேராக இதற்கு விடைகாண,உலகாளும் அம்மா இருக்கும் கைலாயத்திற்கு போய் விவரத்தை சொன்னார்கள்.அம்மாள் புகுந்த வீட்டுபக்கம் பரிந்து பேசுவாளா?பிறந்த வீட்டு பக்கம் பரிந்து பேசுவாளா?
ஹரியும்,சிவனும் ஒன்றுதான் என்று எவ்வளவோ அம்மாள் சொல்லிப் பார்த்தாள்.அதிலும் ஹரியைத்தானே முதலில் சொல்றீங்கனு?வம்பு பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.அம்பாள் பாடு திண்டாட்டம் ஆயிருச்சு!
அம்பாளுக்கு இவர்கள் வாயால் சொன்னால் சரிபட்டு வர மாட்டார்கள் என்று சிவனை நோக்கி தபசில் உட்கார்ந்து விட்டாள்.ஒரு கையில் விபூதியும்,ஒரு காலை தூக்கியும் நம் அன்னை தவம் செய்தாள்.
காதல் கணவன் சிவபெருமான் கோமதிஅம்மன் முன் தோன்றினான்.அன்னையும் வரத்தை கேட்டாள்.
அன்னை கேட்ட வரத்தை கேட்டு ஈசன் ஒரு நிமிடம் ஆடி போனார்.அன்னையிடம்,நல்லா யோசித்துதான் இந்த வரத்தைக் கேட்கிறாயா?என்று கேட்டார்.ஆமாம் ஐயனே!நான் கேட்கும் வரத்தை உங்கள் அன்பு மனைவிக்கு தர மாட்டீர்களா?என்றால் அன்னை.
அந்த வரம் என்ன தெரியுமா?இதுதான்.
அன்னை தன்னுடைய இடப்பாகத்தை தன் அண்ணனுக்கு கொடுப்பதுதான்.
விஷ்ணு எங்கும் நிறைந்தவர்.தூணிலும்,துரும்பிலும் இருக்கும் என் அண்ணன் விஷ்ணுவை வாம பாகத்திலும் [இடப்பாகம்] காட்டி அருள வேண்டும் என்று அம்மாள் சிவனிடம் வரம் கேட்டாள்.
தேவி!உடலையும்,ஆத்மாவையும் பிரிக்க முடியுமா?அதுபோல் நானும்,ஹரியும் ஒருவரே! என்ற உண்மையை உலகத்திற்கு விளக்க,சங்கர நாராயணனாக காட்சி அளிக்கிறேன் என்று கூறி, காட்சி கொடுத்தார் சிவபெருமான்.
ஹரி ஓம் நமசிவாய!
ஒரு புறம் சிவன் உருவம்,இடப்பாகம் விஷ்ணு
ஒரு புறம் செம்மேனி,மறுபுறம் நீல மேனி
ஒரு புறம் தலையில் கங்கை --சந்திரன் சடை முடி ,மறுபுறம் வஜ்ர மாணிக்க மகுடம்
ஒரு புறம் புலித்தோல் ,மறுபுறம் பீதாம்பரம்
ஒரு புறம் ருத்திராட்சம்,மறுபுறம் துளசி மாலை
ஆடி பவுர்ணமி அன்று ஆடிதபசு விழா சங்கரன் கோவிலில் கொண்டாடப்படுகிறது.சங்கர நாராயணன் சன்னதியில் விபூதி பிரசாதம்,துளசி தீர்த்தம் உண்டு.வில்வ அர்ச்சனையுடன் துளசி அர்ச்சனையும் செய்யப்படுகிறது.சிவனையும்,விஷ்ணுவையும் இணைக்கும் அம்மாளுக்கு குங்கும அர்ச்சனையும் உண்டு.
அம்மாளுக்கு எந்த குழந்தையிடமும் பேதம் பார்ப்பது இல்லை.சைவ குழந்தையோ,வைணவ குழந்தையோ என்றைக்கும் குழந்தை குழந்தைதான்.அம்மா அம்மா தான்.கோமதி தாய் திருவடியை
வணங்குவோம்.
சங்கரன் கோவில் திருநெல்வேலியில் உள்ளது.இங்கு புற்றுமண் பிரசித்தி பெற்றது.இதை உடலில் பூசி,தங்கள் வயல் ,வீடுகளில் தெளித்து சுகம் பெறுவர்.உடல் நோய்,பூச்சிக்கடி நீங்கும்.
தபஸ் செய்யும் அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும்.வேண்டிய வரத்தை வேண்டியபடி தருவாள்.குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். சுபிஷங்கள் அனைத்தும் தேடி வரும்.
கருணைக்கடலான அம்பாள் நம் மீது கருணை மழை பொழிந்து ,நம்மை எல்லையில்லா ஆனந்த வாழ்க்கைக்கு அழைத்து செல்வாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக