புதன், 29 ஜூலை, 2015

ஹயக்ரீவர்

ஹாய் ப்ரண்ட்ஸ் ,


       எல்லோருக்கும்  என் இனிய வணக்கம். கல்விக்கு தலைவி சரஸ்வதி தேவி என்பது அனைவரும்
அறிந்தது .இந்து சமயத்தில் இருப்பவர்கள் நம் கடவுளைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் .
  கல்வி ,கலை  ஞானத்தின் தெய்வங்களுக்கு எல்லாம் குரு  ஹயக்ரீவர் .குழந்தைகளுக்கு கல்வி 
கிடைக்க ஹயக்ரீவரை வணங்க வேண்டும் .

நான் என் பூஜையறையில்  வைத்து தினமும் வணங்கி வருகிறேன் . ஒவ்வொரு கடவுளும் நமக்கு 
ஒவ்வொரு விதத்தில்  பல நன்மைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் . நாம் 
ஒன்றே ஒன்று தான் செய்ய வேண்டும் .அதுதாங்க !கடவுள் நம்முடன்  கூட இருக்கிறார் .அவர் 
எது நடந்தாலும் நம்மை கை தூக்கி விடுவார் என்ற நம்பிக்கையை வையுங்கள்  .தொடர்ந்து சாமி 
கும்பிட்டுடே வாங்க .அவர் காலை விடாதீர்கள் . கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள் .இது எல்லாம் என்  அனுபவத்தால்  சொல்லப்பட்ட உண்மைகள் .


இந்த பதிவை எழுதுவதே" நான் செய்த பாக்கியம் "என்று  நினைக்கிறேன் .

ஹயக்ரீவர் 


  

ஹயக்ரீவர் குதிரை முகமும் ,மனித உடலும் கொண்டவர் .விஷ்ணுவின் வடிவமாக கருதி ,வைணவர்கள் வழிபடுகிறார்கள் .இவர் கல்வி தெய்வம் .




மது ,கைடபன் என்ற இரு அசுரர்கள் .படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்து வேதங்களை பறித்து கொண்டு ,பாதாள உலகத்திற்கு சென்று ஒளிந்து கொண்டனர் .அதனை மீட்டு தரும்படி பிரம்மா ,காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார் . 

அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணு குதிரை முக  அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார் .இதன் ரூபமே ஹயக்ரீவர்.அசுரர்களிடம் வேதத்தை மீட்டு  பிரம்மாவிடம் தந்தார் .


லக்ஷ்மி ஹயக்ரீவர் 



அசுரர்களை  அழித்தப்  பின்னும் ஹயக்ரீவருக்கு கோபம் குறையாததால் ,லக்ஷ்மி தேவியை அவர் 
மடியில் அமர வைத்துள்ளார் .இங்க லக்ஷ்மி ஹயக்ரீவர் அழகாக காட்சி அளிக்கிறார்கள் என்பதை 
பாருங்கள் நண்பர்களே !




இதற்கு லக்ஷ்மி ஹயக்ரீவர் என்று பெயர் .

லக்ஷ்மி கல்வி கருவாக இருந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும்,லக்ஷ்மி உடனிருப்பதால்
செல்வத்திற்கு தெய்வமாகவும் ஹயக்ரீவர் உள்ளார் .

அகத்திய முனிவருக்கு "லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையை எடுத்துரைத்தவர் ஹயக்ரீவர் .இதைக் கேட்டு மகிழ்ந்த அகத்தியர்,எந்த தலத்திற்கு சென்று  இதை அம்மன் முன் சொல்வது ?என்று ஹயக்ரீவரிடம் வேண்டினார்  .அகத்தியரை திருமியச்சூர்  கோவிலுக்கு  சென்று சொல்ல சொன்னார் ஹயக்ரீவர் .அதன்படியே ,அகத்தியரும்,அவர் மனைவியும் திருமியச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து லலிதா சகஸ்ர நாமத்தை சொன்னார்கள்  .

அம்பாள் மகிழ்ந்து  நவரத்தினங்களாக காட்சி தந்தாள் .அப்போது பாடியதுதான்

"நவரத்தின மாலை" 


ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்


"ஞானானந்த மயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம் ஆதாரம்ஸர்வ  வித்யானாம்ஹயக்ரீவம் உபாஸ்மஹே "


பிள்ளைகள் அனைவரும் மன அமைதியுடன் கல்வி கற்று ,சிறப்புடன் தேர்ச்சி அடைய இந்த பாடலை பாடி பயன் பெறுங்கள்.

ஹயக்ரீவருக்கு  வேக வைத்த கடலை பருப்பில் வெல்லம் ,தேங்காய் கலந்து நெய்வேத்தியம் செய்து வழிபட்டால், குறைவற்ற கல்வியை அள்ளி தருவார் .

என்ன நண்பர்களே !உங்கள்  குழந்தைகள் நன்றாகப் படிக்க ஹயக்ரீவரை வணங்குவீர்கள்! என்று நினைக்கிறேன் .

 நன்றி .மீண்டும் நாளை சந்திப்போம் .


உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக