சித்திரகுப்த வழிபாடும்,பலன்களும்
"சித்திரைப் பாவையே உன்றன் வருகையால்
தரணி செழிக்க வேண்டும்!
செகமே வளம் பெற நன்மழை பெய்தென்றும்
தீமைகள் நீங்க வேண்டும்''
சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் பவுர்ணமியானது எமதர்மனின் கணக்காளரான சித்ரகுப்தருக்கு மிகவும் புனிதமானது"சித்ரகுப்த'' என்ற வடமொழிச் சொல்லுக்கு `மறைந்துள்ள படம்' என்பது பொருள்.சித்திரகுப்தன் நமது பாப புண்ணியங்களைக் கணக்கிடும் ஒரு தேவன்.
சித்ரகுப்தனைத் திருப்தி செய்வதற்காக விரதம் இருந்து சித்ரகுப்தரை வழிபட வேண்டும்.
"சித்திரைப் பாவையே உன்றன் வருகையால்
தரணி செழிக்க வேண்டும்!
செகமே வளம் பெற நன்மழை பெய்தென்றும்
தீமைகள் நீங்க வேண்டும்''
சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் பவுர்ணமியானது எமதர்மனின் கணக்காளரான சித்ரகுப்தருக்கு மிகவும் புனிதமானது"சித்ரகுப்த'' என்ற வடமொழிச் சொல்லுக்கு `மறைந்துள்ள படம்' என்பது பொருள்.சித்திரகுப்தன் நமது பாப புண்ணியங்களைக் கணக்கிடும் ஒரு தேவன்.
சித்திரகுப்த பூஜை செய்ய விரும்புபவர்கள் சித்ராபௌர்ணமி அன்று பூஜை செய்யலாம். அன்று உபவாசமிருந்து பூஜை செய்ய வேண்டும்.
சித்ரகுப்தனைத் திருப்தி செய்வதற்காக விரதம் இருந்து சித்ரகுப்தரை வழிபட வேண்டும்.
சித்ரகுப்தன் படியளப்பு
சித்ரா பவுர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியும் (கொப்பி-பேனா) வைத்து, ஒரு பேப்பரில் "சித்திர குப்தன் படியளப்பு'' என்று எழுதி வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை ஒரு தலை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும்.
சித்திரகுப்தருக்கு பிரியமானவையாக சித்ரான்னம், தயிர் சாதம், தேங்காய் சாதம், உளுந்து வடை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். கோவில்களில் சித்திரகுப்தருக்கென்று தனியாக சிறு சந்நிதி எழுப்பியிருப்பர். உபவாசநாள் அன்று மாலை கோவிலுக்கு சென்று கற்பூர ஆரத்தி காட்டி வணங்கி வழிபாடு செய்வது நலம்.
அன்று பசும்பால், பசுமோர் சாப்பிடக்கூடாது. உப்பில்லாமல் சாப்பிடவும். எருமைப்பாலில் பயத்தம் பருப்பு பாயசம் அல்லது சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.
படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள், தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும். தொடர்ந்து தேங்காய் உடைத்து தீப ஆராதனை காட்டி வழிபட்டு பொங்கலை எல்லோருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும்.
இந்த வழிபாட்டின்போது
"சித்திர குப்தம் மஹா ப்ராக்ஞம்
லேகனிபத்ர தாரிணம்
சித்ர ரத்னாம்பரதரம்
மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்''என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
பலன்கள்
1. சித்திர குப்தரைப் பிரார்த்திப்பதால் அவர் நம் பாவங்களைப் பொருத்தருள்வார்.
2. ஒவ்வொரு வருடத்தின் முதலாவது பவுர்ணமியன்று செய்யப்படும் இந்த வழிபாட்டின் மானசீகமான பலன், இந்த பூவுலகில் நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் இடை விடாமல் கண்காணிக்கும் ஒரு மேலான சக்தி இருக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுவதாகும்.
3. ஒவ்வாருவர் தோளிலும் சித்திரகுப்தர்கள் அமர்ந்திருக் கிறார்கள் என்ற எண்ணம் உருவானதற்கு காரணம் நாம் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்று தூண்டுவதற்காகவேயாகும்.
4. தானம் செய்வதால் இறையருள் கிட்டும்.
5.விநாயகப்பெருமானின் சந்நிதியில் அமர்ந்து சித்ரா பௌர்ணமி அன்று சித்திர குப்தரின் கதை நூலை படித்து பிரார்த்தித்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம் .
சித்திரகுப்தன் என்பவர் எமதர்ம ராஜனின் கணக்குப்பிள்ளையாவார். இவர் பிரம்மதேவனின் உடலிலிருந்து சித்ரா பவுர்ணமி தினத்தில் தோன்றியதால் இவருக்கு சித்ரகுப்தன் என்று பெயர் ஏற்பட்டது. இவர் எமதர்மனின் சபையில் இருந்து சகல ஜீவராசிகளின் பாவ, புண்ணியக் கணக்குகளை எழுதுவதை கடமையாக கொண்டுள்ளார். பிரம்மதேவன் இவருக்கு இப்பணியை வரையறுத்தார். ஜீவனின் மரண காலத்தில் சித்ரகுப்தன் கொடுக்கும் பாவ புண்ணியக் கணக்கின் முடிவை வைத்தே எமதர்மன் ஜீவனுக்கு தண்டனை அளிப்பதும், பிரம்மா அதன் தலையில் எழுதுவதும் அமையும். ஆகவே சித்ரகுப்தரை தொழவேண்டியது மிக, மிக அவசியமாகிறது.சித்திர புத்திர நாயனார் கதை புராணம் ஆகியவற்றை படிப்பார்கள். காலையில் கோவிலுக்கு சென்று பிள்ளையார், நந்தி, சிவபெருமான் மூன்று தெய்வங்களுக்கும் அர்ச்சனை செய்து கொண்டு வருவார்கள். பலன்:-
சித்திரபுத்திர நாயனார் நம் கணக்குகளை வைத்திருக்கும் கணக்குப்பிள்ளை என்பதை முன்பே அறிந்தோம். இவ்விரதத்தால் அவர் மனம் மகிழ்ந்து நம் பாவக்கணக்குகளை குறைப்பார். இதனால் நமக்கு நற்கதி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இது இதிகாச புராணங்களால் வரையறுக்கப்பெற்ற முறையாகும். சித்திரபுத்திர நாயனார் விரதத்தால் நமக்கு பாவம் செய்யும் மனப்பான்மையே மறைந்துவிடும்.மேலும் இவ்விரதம் இருப்பவர்களுக்கு எமபயம் கிடையாது எனக் கூறுகிறார்கள். சித்திரகுப்தனிடம் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திப்பார்கள். மறுமையில் நன்மை வேண்டுபவர்கள், மீண்டும் பிறவாமை வேண்டுபவர்கள், பிறப்பில் துன்பமிலா நற்பிறவி வேண்டும் என்பவர்கள் இந்த விரதத்தை அவசியம் கைக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ புண்ணிய கணக்குகள் சித்ர குப்தனால் எழுதப்படுகிறது. எனவே சித்ரா பவுர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். சித்ரா பவுர்ணமி அன்று காலை விரதத்தை ஆரம்பித்து சித்ரா குப்தாய என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ புண்ணிய கணக்குகள் சித்ர குப்தனால் எழுதப்படுகிறது. எனவே சித்ரா பவுர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். சித்ரா பவுர்ணமி அன்று காலை விரதத்தை ஆரம்பித்து சித்ரா குப்தாய என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பவுர்ணமியிலும் சித்ரகுப்தனுக்கு விரதம் இருந்து அவரை வழிபட்டால் அளவு கடந்த புண்ணியம் கிடைக்கும். வழி படுவோம் பலன் அடைவோம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக