புதன், 25 ஏப்ரல், 2018

ஹிருதயகமல கோலம் போடுவது எப்படி ?

தொடர்புடைய படம்

என் அன்பு தோழிகளுக்கு என் அன்பு வணக்கங்கள்.என்றும் நீங்கா செல்வங்கள் பெற்று வாழ்வதே ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஆசை.அந்த செல்வங்கள் வேண்டுமானால் நாம் தெய்வங்களுக்கு பிடித்தவர்களாக இருக்க வேண்டும்.நம்மால் என்ன செய்து தெய்வங்களை சந்தோஷப்படுத்த  முடியுமோ அதை செய்வது நல்லது.

ஒவ்வொரு குடும்பத்தலைவியும் அதிகாலையில்(பிரம்மமூர்த்த வேளையான 4.30 --6 மணிக்கு) எழுந்து குளித்து வாசலில் லக்ஷ்மியை வரவேற்கும் வகையில், கோலங்கள் போட்டு பூஜையறையில் அம்பாளுக்கு பிடித்த கோலங்களை போட்டு ,சுவாமிக்கு தங்களால் முடிந்த நெய்வேத்தியம் வைத்து (கற்கண்டு,கிஸ்மிஸ் பழம்,காய்ச்சிய பாலில் சர்க்கரை சேர்த்து)பிராத்தனை செய்ய வேண்டும்.ஒரு செம்பில் தண்ணீர் வைக்க வேண்டும்.நம் வீட்டு குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே  அன்றாடம் சுவாமியை வணங்க சொல்லி கொடுக்க வேண்டும்.

நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும் சுவாமிக்கு நாம் 5நிமிடம் ஒதுக்கி வணங்குவது தவறு ஒன்றும் இல்லையே.தினமும் சுவாமியை கோவில்களில்தான் தரிசிக்க வேண்டும் என்பது இல்லை.நம் இல்லத்தை கோவிலாக மாற்றுவது பூஜையறை மட்டுமே.அதை உருவாக்குவது ஒவ்வொரு இல்லத்தலைவிகளால் மட்டுமே முடியும். 

சந்தோஷமாக கோலத்தை போட்டு உங்கள் வீட்டையும் மனதையும் கோவிலாக மாற்றுங்கள். 
pooja room iruthaya kamalam kolam க்கான பட முடிவு



ஹிருதயகமல கோலம் போடுவது எப்படி ?

லக்ஷ்மி கடாட்சம் நம் வீட்டில் இருக்க வேண்டும் என்றால் சகல சௌபாக்கியமும் தரும் கோலங்களை பூஜைறையில் போட்டு லக்ஷ்மி தேவியை வணங்க  வேண்டும்.இறைவனிடம் நம் கோரிக்கைகளை சென்றடைய மந்திரங்கள்,எந்திரங்கள்,கோலங்கள் பெரும் உதவியாக உள்ளன.அதன் வரிசையில் இந்த ஹிருதய கமல கோலமும் ஒன்று.  



செவ்வாய் ,வெள்ளிக்கிழமைகளில் இந்த கோலத்தை போடுவதால் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை .எதை செய்தாலும் நம் தாய் நம்கூடவே இருக்கிறாள்.அவள் நம்மைக் காப்பாள் என்ற நம்பிக்கை இருந்தால் எந்த இடர்கள் வந்தாலும் அதை தாங்கும் உள்ளமும்,முடிவில் வெற்றியும் கிடைக்கும்.ஆதலால் உங்கள் இஷ்ட தெய்வம் யாராக இருந்தாலும் சிறிதும் நம்பிக்கை தாளாமல் முழு நம்பிக்கை வைத்து உங்கள் பிராத்தனையை கடவுள் முன் வையுங்கள்.இந்த ஹிருதய கமல கோலம் போட்டால் நல்லது என தெரிந்து கொண்டு அதை எப்படி போடுவது என நினைக்கும் என் அன்பு தோழிகளுக்காக இந்த பதிவை போடுகிறேன்.

யான் பெற்ற இன்பம் அனைவருக்கும் சென்றடைவதே என் விருப்பம்.

கோலம் போடும் முறை 


முதலில் 7புள்ளி வைக்க வேண்டும்.நடுப்புள்ளியை விட்டு விட்டு சைடில் 3புள்ளிகளை சுற்றிலும் படத்தில் காட்டியபடி வைக்கவும்.மிக சுலபமாக இந்த கோலத்தை போட்டுவிடலாம். 
   தொடர்புடைய படம்


2ம் படத்தில் உள்ளவாறு நடுவில் ஸ்டார் வருமாறு போடவும்.பிறகு எல்லா புள்ளிகளையும் எளிதாக சேர்த்து விடலாம்.சைடில் நமக்கு பிடித்த டிசைனை போடலாம்

hiruthaya kamala kolam க்கான பட முடிவு

 சைடில் நமக்கு பிடித்த டிசைனை போடலாம்.3ம்படத்தில் உள்ளவாறும் போடலாம்.

தொடர்புடைய படம்


இறுதியில் கோலத்திற்கு வண்ணம் போட்டு அசத்தலாம்.
hiruthaya kamala kolam க்கான பட முடிவு

சுலபமாக புள்ளி வைத்து போடும் முறை 

rang1

rang2
rang3
rang4
rang5
rang6
கடவுளுக்கு  முன்பாக  தினமும்  கோலமிடுதல்  வேண்டும்.
நவக்கிரக  கோலங்கள்  போட்டால்  அவற்றினால்  வரும்  தீங்குகள்  விலகும்.  ஸ்ரீசக்ரம்,  ஹிருதய  கமலம்  கோலங்களை  செவ்வாய்,  வெள்ளி  கிழமைகளில்  போடுவதால்  செல்வம்   கிட்டும்.  சங்கு,  சக்கரக்  கோலங்களை  சனிக்கிழமைகளில்  போடுவது  நல்லது. கோலத்தை கால் படாத இடமாக பார்த்து போட வேண்டும்.பூஜை அறையில்  போடுவது சிறந்தது. இவ்வாறு தெய்வீக கோலத்தை போடுவதால் வீடு  வளம் பெறும்..

வாசலில் சூர்யோதயத்திற்கு  முன்பு  கோலமிடல்  வேண்டும்.  இழையை  இடப்புறமாக   இழுக்கக் கூடாது.கோலத்தைக்  காலால்  அழிக்கக்  கூடாது.  வாயிற் படிகளில்  குறுக்குக்  கோடுகள்  போடக்  கூடாது.  நேர்கோடுகளே  போட வேண்டும். இரட்டை  இழைக்  கோலமே போட வேண்டும். விசேஷ நாட்களில்  அரிசி ஊறவைத்து,  அரைத்த  மாவினால்  இழைக்  கோலம்  போடுவது  விசேஷம்.  கண்டிப்பாக  சுற்றிலும்  காவியிடுவதும்  அவசியம். குழந்தை  பிறந்தாலும்,  பெண்கள்  பருவம்  அடைந்தாலும்  அந்த  மகிழ்ச்சியை  தெரிவிக்க  இரவானாலும்  கோலமிட  வேண்டும்.
  
அமாவாசை  மற்றும்  முன்னோர்  காரியங்கள்  செய்யும்  தினங்களில்  மட்டுமே  வாசலில்  கோலம்  போடக்  கூடாது. 
இன்று  ஸ்டிக்கர்  கோலங்களே  பல  வீடுகளுக்கு  முன்  காட்சியளிக்கின்றன. தினமும்  கோலம்  போட   முடியாவிடினும்  விசேஷ   நாட்கள்  மற்றும்  பண்டிகை  நாட்களிலாவது  அழகிய  கோலங்களை  இட்டு   கோலக்கலை  அழியாமல்  காப்பாற்ற  முயற்சிப்போம்.

இந்த கோலத்தை போட்டு பயன் அடையுங்கள்.சந்தோஷமாக வாழுங்கள்.

உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி சரவணன் 















  

























  

1 கருத்து: