ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

என்ன கோலம் போட்டால் என்ன பலன்

என் அன்பு தோழிகளுக்கு என் இனிய வணக்கங்கள்.இந்த பதிவு பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஒரு குடும்பத்தலைவி அதிகாலையில் எழுந்து கோலம் போட்டு விளக்கேற்றி இறைவனை வழிப்பட்டால் அந்த வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமாக வாழலாம் .சந்தோஷமாக வாழ்வதற்கு கடவுளின் அருள் தேவை.அவர்கள் அருள் பெற ஒரு வழியே கோலம் போடுதல் ஆகும்.கோலம் ஒரு மங்கள நிகழ்வுக்கு போடக்கூடிய ஒன்றாகும்.மங்களத்தின் அடையாளம்.
என்ன கோலம் போட்டால் என்ன பலன்தொடர்புடைய படம்

கோலங்களில் சக்தி வாய்ந்த எந்திரங்கள் மறந்திருக்கின்றான்.நாள்தோறும் போட வேண்டிய கோலம் ,பண்டிகை காலத்தில் போடா வேண்டிய கோலம்,ஹோமம் ,பூஜைகளில் போது போட வேண்டியவை,சுபகாரியங்களில் போட  வேண்டிய கோலங்கள் எனத் தனித்தனி கோலங்கள் உள்ளன.நம் முன்னோர்கள் ஒரு காரியம் தொடங்கும்முன்,அதை நிறைவேற்றித் தரும் தேவதைகளின் அருட்சக்தியை ஈர்த்து நமக்கு தரும் வகையில் அத்தெய்வங்களின் எந்திரங்களை எளிய கோலங்களாக மாற்றி,நமக்கு தந்திருக்கிறார்கள்.ஆகவே,நிகழ்வுக்கு  பொருத்தமான கோலங்கள்,நினைத்த காரியம் கைகூட வழிவகுக்கும்.மேலும் கோலங்கள் தெய்வீக சக்தி கொண்டவை.தினமும் வாசலில் கோலம் போடுவதால் துர்சக்திகள் அண்டாது.

தினமும் வாசலில் போடும் கோலங்கள் 

பொதுவாக வாசலில் இந்துக்கள் அனைவரும் கோலம் போடும் வழக்கம் தென்று தொட்டு வந்துள்ளது. மகாலக்ஷ்மியை  அதிகாலையில் வாசல் தெளித்து கோலம் போட்டு அழைப்பர்.ஸ்டார் கோலம்,ரங்கோலி கோலம் முதலானவை நாம் வாசலில் போட  வேண்டும்.தெய்வங்கள் சார்ந்த கோலங்களை ஒரு போதும் வாசலில் வரையக்கூடாது.கோலத்தை வைத்தே ஒரு பெண்ணின் மனநிலையை அறிந்து கொள்ளலாம்.நம்மிடம் சண்டை போட நினைத்து வருபவர்களையும் அழகான கோலம் மாற்றி விடும்.நமக்கெல்லாம் லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் நம் வீட்டையும்,வீட்டு வாசலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.முதலில் லட்சுமி தேவி வருவதுடன் 8வகை லட்சுமிகளும் நம் வீட்டுக்கு வந்து சகல செளபாக்கியத்தையும் கொடுப்பர்.
தொடர்புடைய படம்    



பூஜையறை கோலங்கள் 

ஸ்ரீபாத கோலம் 
4099e0c41d2b5077ac780a00e67c3846.jpg 720×960 pixels










 இதை வரைந்து,பாதங்களை சுற்றி, மஞ்சள் குங்குமத்தால்,நலங்கு இட்டு,அம்பிகையை பூஜித்தால் எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி உண்டாகும்.


ஐஸ்வர்ய கோலம் 

This Kolam is called "Aishwarya Kolam". 8 - 3 interlaced dots (Idukku Pulli) Kolam - Start with 8 dots in the center, next 7 interlaced d...






ஐஸ்வர்ய கோலம் 





ஐஸ்வர்ய கோலம்,ஹ்ருதயக் கமலம் போடாத வீடுகளே இல்லை.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் அரிசிமாவால் ஒரு பலகையில் ஐஸ்வர்ய கோலம் போட்டு,நடுவில் ஐந்து முகக்குத்து விளக்கு ஏற்றி லலிதா சஹஸ்ரநாமம்,செளந்தர்ய லஹரி பாராயணம் செய்து,சர்க்கரை பொங்கல் அல்லது 
வெல்லப் பாயாசம்  நிவேதனம் செய்து அம்பிகையை வணங்கி வர திருமணம் கைகூடும்.

குறிப்பிட்ட வாரங்களுக்கு இந்த பூஜையை செய்வதாக நேர்ந்து கொண்டு,கடைசி வாரம் 12வயதுக்குட்பட்ட குழந்தைகளை அம்பாளின் அம்சமாக எண்ணி ,நலங்கு   இட்டு,இனிப்பு,உடை,வளையல்,பொட்டு,கண்மை,
மருதாணி  முதலியவற்றை கொடுக்க வேண்டும்.

சுமங்கலிகளுக்கு  (எண்ணிக்கை அவரவர் வசதியை பொறுத்தது)
உணவு,மஞ்சள்,குங்குமம், மஞ்சள் கயிறு ,வெத்தலை பாக்கு வைத்து தாம்பூலம் வழங்க வேண்டும்.சகல செளபாக்கியமும் உண்டாகும்.

ஹ்ருதயக் கமல கோலம் 
Related image

 நம்முடைய வேண்டுதல் நிறைவேற பூஜையறையில் 48நாட்கள் இந்த கோலத்தை தேவியின் படத்திற்கு முன் போட்டு  பக்தியுடன் விளக்கேற்றி வணங்கி  வந்தால், எண்ணிய யாவையும் ஈடேறும். 
Related image
ஒரு சுத்தமான பலகையில் மேலே உள்ள படத்தில் உள்ளதுபோல் 21தாமரை பூ கோலம் போட்டு கனகதாரா ஸ்தோத்திரம் கூறி,1ஸ்லோகத்திற்கு நாணயம் வீதம் (1ரூபாய் அல்லது 5ரூபாய்)ஒவ்வொரு பூவை வைத்து,மஞ்சள் ,குங்குமம், பூ தூவி நம்மால் இயன்ற நிவேதனம் செய்து லட்சுமி தேவியை வேண்டி வந்தால் ,பணக்கஷ்டம் அகலும்.

சஞ்சீவிமலைக்  கோலம் 

Image result for hanuman jayanti kolamசஞ்சீவி  கொலம் க்கான பட முடிவு

கோலத்தின் வால் பகுதியில் மஞ்சள் குங்குமம் இட  வேண்டும்.ஆஞ்சநேயர் அருளால் சனியின் தாக்கம்,ராகுவினால் விளையும் கஷ்டம் அகலும்
navagraha kolangal க்கான பட முடிவுவக்கிரக கோலங்கள்  
ஒவ்வொரு  நாளுக்குரிய  நவக்கிரக கோலங்களை பூஜையறையில்
 போடலாம்.அந்தந்த கிரகங்களின் நிறங்களை போடுவது   சிறப்பு.hayagreeva க்கான பட முடிவு

புதன் கிழமை பச்சை நிறத்தில் புதன் கிரக கோலம் போட்டு,ஹயக்கிரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி ,"ஹயக்கீரிவப் பிண்டி "எனப்படும் கடலைப்பருப்பு பூரணம் நிவேதனம் செய்து,அனைவருக்கும் கொடுத்தால் ஞாபக மறதி அகலும்.குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள்.

குருவின் அருள் வேண்டிவோர்,வியாழக் கிழமை மஞ்சள் நிற கோலமிட்டு,நெய் விளக்கேற்றி கொண்டைக்கடலை சுண்டல்,லட்டு நிவேதனம் செய்து கொடுக்க வேண்டும். 

நவராத்திரி சமயம்,ஒவ்வொரு தினத்திற்கு  உரிய கோலம் போடலாம்.

குபேர கோலம் 
kubera kolam tamil க்கான பட முடிவு





















வெள்ளிக்கிழமை குபேர கோலத்தில் காசு வைத்து,குபேரஸ்துதி,லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி பூஜை செய்து மாதுளம் பழம்,இனிப்பு நிவேதனம் செய்து வர பணக்கஷ்டம் அகலும்.காலை 7மணிக்குள் இப்பூஜையை செய்வது சிறப்பு.
பூஜையறை கோலங்களை கால்மிதி படாத இடத்தில்தான் போட வேண்டும். அரிசி மாவால்தான் கோலம் போட வேண்டும்.வெள்ளிக்கிழமை பூஜை  முடித்தவுடன் நாணயத்தை எடுக்காமல் மறுநாள்  காலையில்தான் நாணயத்தை எடுக்க வேண்டும்.

புள்ளி சிவனின் அம்சம்.கோடுகள் சக்தி ஸ்ரூபமாகும்.செய்வாய்,வெள்ளி கிழமைகளில் காவி இட வேண்டும்.கோலங்கள் போடும் போது  தெரிந்த ஸ்லோகங்களை சொல்லி கொண்டே போட வேண்டும். இது தெய்வீக அலைகளை நமக்கு பெற்றுத் தரும்.கை அல்லது துணி கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும்.
kariya siddhi kolam க்கான பட முடிவு
என் அன்பு தோழிகளுக்கு ஒரு இனிய பதிவை கொடுத்துள்ள திருப்தியில் இந்த பதிவை முடிக்கிறேன்.என்றென்றும் தேவியின் அருள் நமக்கு கிடைக்க நான் அன்னையை பிராத்திக்கின்றேன்.  


நீங்களும் சந்தோஷமாக இருங்கள்.உங்களை சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள்.


நன்றி 

உங்கள் தோழி ஈஸ்வரி சரவணன் 









2 கருத்துகள்:

  1. Our puja service are conducted strictly as per ancient Vedic rituals in our temple, installed in self-owned premises by well-versed learned Karmakandi priests from Shivkashi temple with live streaming facility on Skype.

    பதிலளிநீக்கு