புதன், 4 ஏப்ரல், 2018

கலப்பு எண்ணெய் தீபம் எவ்வாறு ஏற்ற வேண்டும்?





5vagai deepam க்கான பட முடிவு


support அண்ட் subcribe tamilnattu samayal  in my  you  tube channel கலப்பு எண்ணெய் தீபம் எவ்வாறு ஏற்ற வேண்டும்?

 ஐந்து எண்ணெய், மூன்று எண்ணெய் கூட்டி விளக்கேற்றினால் நல்லது என்று வரும் செய்திகளை நம்பி அப்படியே தவறு செய்யும் அப்பாவி மக்கள் கவனத்திற்கு அறிக 
எப்பொழுதுமே ஒரு எண்ணெய்யுடன் இன்னொரு எண்ணெய் சேர்ந்து தீபம் ஏற்றக்கூடாது.
அதர்வன  மாந்திரிகத்தில் அசுப நிகழ்வுகளை தன் விரோதிக்கு ஏற்படுத்த தந்திரமாக கையாண்ட முறைதான் கூட்டு எண்ணெய் தீப வழிபாடாகும் . அதே போல் தன் குறைதீரவும். கடுமையான பிரச்சினைகள் விலகவும் பல எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றும் வழக்கமும் இருந்தது, இந்த வழக்கம்தான் இன்று தவறாக கையாளப்படுகிறது.

பௌர்ணமி கழித்து வரும் அஷ்டமி தேய்பிறை அஷ்டமி என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த
அஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும் போது பஞ்ச எண்ணெய் தீபம் கால பைரவருக்கு ஏற்ற வேண்டும். 
இதற்கு பஞ்ச (5) தீபம் என்று பெயர். 5 வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும். 5 தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்.ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும்.
இந்த முறை பிரச்சினைகளுக்கான தீர்வு மட்டுமே, பில்லி சூன்யம். வம்பு. வழக்கு. தீரா நோய் இவைகள் அடங்கும்.

 அடுத்து ஒவ்வொரு செவ்வாய்கிழமை காலையும், மாலையும் ஸ்ரீ கால பைரவரை அஷ்டலட்சுமியும் வழிபடுவார்கள்.அந்த நேரத்தில்
கடன் தீரவும். செல்வம் பெருகவும் நாமும் இரு அகலில் தீபம் ஏற்ற வேண்டும்.நெய்தீபம் ஒன்றிலும், நல்லெண்ணெய்  ஒன்றிலும் ஊற்றி சிவப்பு திரி போட்டு தனித்தனியே ஏற்றினால் கஷ்டங்கள் தீரும்.
vinayagar images க்கான பட முடிவு 
நவகிரக தோஷம் விலக அரசடி விநாயகருக்கு சதுர்த்தி திதி அல்லது ஞாயிற்றுக்கிழமை மூன்று அகலில் ஒவ்வொன்றின்  வீதம் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்,பசு நெய் இவைகளை தனித்தனியே ஏற்றி வழிபட கிரக தோஷம் விலகும்.

தொடர்புடைய படம்

அடுத்து
சித்திரை,ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் ராகுகால வேளையில் சிவாலயத்தில் உள்ள அன்னை துர்க்கைக்கு  9அகல் தீபம்  ஒவ்வொன்றிலும் ஒரு கலர் திரி வீதம் போட்டு தீபம் ஏற்றி அன்னையை வழிபட தீரா பிரச்சினையும் தீரும்.

இவ்வாறு பல செயல்களுக்கும் இந்த பல வகை எண்ணெய் தீபம் ஏற்றும் முறை உண்டு, ஆனால் இன்று இந்த நல்முறை அறியாததால் தவறு நடக்கிறது
5 எண்ணெய் கூட்டி தீபம் ஏற்றுங்கள் என அக்காலத்தில் சொன்னது தவறாக செய்தி பரவிவிட்டது, 5 எண்ணெயையும் ஒன்றாக கலந்து தீபம் ஏற்றுவது என தவறாக புரிந்து பாதகத்தை அறியாமலேயே பெருகிறார்கள். 
 ஆக தீபத்திற்கான எண்ணெய் கலப்படமாகாமல் ஏற்றுவதே சிறந்தது .
எதிரியை உறவாடி கெடுக்கும் முறை ஒன்று உண்டு .இது அதர்வன முறையில் நிறையவே உண்டு.சூழ்ச்சி, தந்திரம் இவைகளை எதிரி அறியாமல் செயல்படுத்துவதாகும். மூலிகை, யந்திரம், எண்ணெய், மந்திரம் இவைகளில் ஒன்றுக்கொன்று எதிர்ப்பு எதுவென்று அறிந்து அதை சேர்த்து தன் விரோதிக்கு நல்லது என கொடுத்து பயன்படுத்துவார்கள்.

அது என்னவென்று தெரியாமலேயே பயன்படுத்தும் அப்பாவிகள் அதன் விளைவை சந்திக்க வேண்டியதாகிறது . அக்காலத்தில் இதே முறையில் உறவாடி கெடுத்தவர்கள் ஏராளம். அந்த முறையில் ஒன்றுதான் இந்த கூட்டு எண்ணெய் முறை பயன்படுத்தப்பட்டதாகும் .



அக்காலத்தில் காளி அம்மன் அருளை பெறவும் கடினமான பிரச்சனைக்கு உடனே தீர்வு காணவும் 5 எண்ணெய் கூட்டி புது அகலில் தீபம் தனி அறையில் ஏற்றி அங்கு அண்ணம் தண்ணீர் எதுவுமின்றி மௌனமாய் மூன்று தினம் விரதமிருந்து தீப வெளிச்சத்தை தவிர பிற வெளிச்சமும் காணாமல் அம்மனை மனதிலே பூஜித்திருந்தால் அம்மன் கோரிக்கையை நிறைவேற்றி கொடுப்பாள் விரைவில் தீர்வுகிடைக்கும் . இந்த முறையை இன்றைக்கும் கடைபிடிக்கலாம் . வேறு மார்கத்தில் 5 எண்ணெய் கூட்டி தீபம் ஏற்றினால் பஞ்சமே உண்டாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக