புதன், 18 ஏப்ரல், 2018

ஐஸ்வர்யக் கோலம் போடுவது எப்படி?


எல்லோருக்கும் வணக்கம்.இந்த பதிவு அவசியம் பெண்களுக்கு பயனுள்ள பதிவு.பார்த்து படித்து போட்டு பயன்பெற வேண்டும் என்பதே என் எண்ணம்.


ஐஸ்வர்யக் கோலம் போடுவது எப்படி?
 இல்லங்களில் ஐஸ்வர்யம் கிடைக்க ஒவ்வொரு வீட்டு பூஜை அறைகளில் இந்த கோலத்தை போடா வேண்டும்.இது லக்ஷ்மிக்கு பிடித்த கோலம்.வற்றாத செல்வம் கிடைக்க வேண்டுமானால் ஒவ்வொரு இல்லத்தலைவியும் போடவேண்டும்.பொதுவாக கோலங்களை நம் வீட்டில் வேலை பார்க்கும் பணியாளர்களைக் கொண்டு போட கூடாது.இல்லத்தலைவியே போடவேண்டும்.போடும் போது  இறை சிந்தனையுடன் மகாலஷ்மி மந்திரத்தை சொல்லி போடுவது நன்மை பயக்கும்.

முதலில் 8புள்ளி வைக்க வேண்டும்.அடுத்து இரண்டு புள்ளிக்கு நடுவில் ஒரு புள்ளி என [இடுக்கு புள்ளி] புள்ளி வைக்கவேண்டும்.7புள்ளி வரும்.மறுபடியும் 8புள்ளி வைக்கவும்.piragu 7,6,3 என இருபுறமும் வைக்கவும்.  படத்தில் உள்ளதுபோல் வைக்கவும்.



படத்தில் உள்ளதுபோல் புள்ளிகளை இணைக்கவும்.


நடுவில் ஸ்டார் வரும்,நடு புள்ளியில் சிறுவட்டம் போடவும்.



இந்த ஐஸ்வர்ய கோலத்தை பச்சரிசி மாவால் கோலம் போடவேண்டும்.
   
இனிமேல் நாம் நினைத்த தினங்களில் மட்டுமில்லாமல் தினமும் கூட ஐஸ்வர்ய கோலத்தை போட்டு மகாலக்ஷ்மியை நம் இல்லத்தில் நிலைத்திருக்க செய்து,16செல்வங்களையும் நாமும் , நம் சந்ததியினரும் பெற்று இனிதே வாழ்வோம். 

உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் பதிவுகளை follow பண்ணுங்கள்.உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.என் குருவாகிய சாய் பாபாவையும்,மகா பெரியவாளையும் வணங்கி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.தொடர்புடைய படம்

பெரியவா பாதம் போற்றிsai baba images க்கான பட முடிவு
ஓம் சாயி நமோ நம! ஜெய் சாயி நமோ நம! 

நன்றி 
உங்கள் தோழி 
ஈஸ்வரி சரவணன் 







2 கருத்துகள்: