நட்சத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய கடவுள்,
செய்ய வேண்டிய தானம்
கீழ்க்கண்ட நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் மகாலட்சுமியோடு அந்தந்த நட்சத்திரத்துக்குரிய கடவுளையும் வணங்கி பூஜை செய்ய நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், நல்ல புகழ், நன் மக்கட்பேறு ஆகிய அனைத்தும் கிடைக்கும். அட்சய திருதியை நாளில் செய்வது கூடுதல் பலன் தரும்.
அஸ்வினி, மகம், மூலம்: விநாயகர்.
பரணி, பூரம், பூராடம்: ஸ்ரீரங்கநாதர்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்: ஆஞ்சனேயர்.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்: சிவன்.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்: துர்க்கை.
திருவாதிரை, சுவாதி, சதயம்: பைரவர்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி: ராகவேந்திரர்.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி: சிவன்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி: பெருமாள்.
அட்சய திருதியை நாளில் ஏழை, எளியவர்களுக்கு தன்னால் இயன்ற அளவு உதவுதல் வேண்டும். அதை முறையாக எந்த நட்சத்திரத்துக்கு உரியவர் எந்த வகை அன்னத்தை தானமாக அளிக்க வேண்டும்; யாருக்கு உதவினால் நமது தீவினை அகலும் என்று தெரிந்து செய்தால் பலன் பல மடங்கு கூடும்.
அஸ்வினி --கதம்ப சாதம் தானம்; ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
பரணி --நெய் சாதம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
கார்த்திகை & சர்க்கரைப் பொங்கல் தானம்; பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.
ரோகிணி-- பால் அல்லது பால் பாயசம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
மிருகசீரிடம் --சாம்பார் சாதம் தானம்; மாற்றுத் திறனாளிகளுக்கு உதவலாம்.
திருவாதிரை -- தயிர் சாதம் தானம்; ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவலாம்.
புனர்பூசம்-- தயிர் சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
பூசம் --மிளகு கலந்த சாதம் தானம்; கால்நடைகளுக்கு எள்ளுப்புண்ணாக்கு கொடுக்கலாம்.
ஆயில்யம்-- வெண்பொங்கல் தானம்; பசுமாட்டுக்கு பச்சைப்பயிறைக் கொடுக்கலாம்.
மகம்-- கதம்ப சாதம் தானம்; கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்.
பூரம் --நெய் சாதம் தானம்; மனநல பாதிப்புள்ளவர்களுக்கு உதவலாம்.
உத்திரம் -- சர்க்கரைப் பொங்கல் தானம்; கால்நடைகளுக்கு கோதுமை அளிக்கலாம்.
ஹஸ்தம் -- பால் பாயசம் தானம்; மனநலம் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவலாம்.
சித்திரை -- துவரம்பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
சுவாதி -- உளுந்து வடை தானம்; வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கித் தரலாம்.
விசாகம் --தயிர்சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
அனுஷம் --மிளகு கலந்த சாதம் தானம், வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு சாதம் கொடுக்கலாம்.
கேட்டை -- வெண்பொங்கல் தானம்; பசு மாட்டுக்கு பச்சைப்பயறு கொடுக்கலாம்.
மூலம் --கதம்ப சாதம் தானம் , ஏழைகளுக்கு உதவலாம்.
பூராடம்-- நெய் சாதம் தானம்; ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
உத்திராடம்--சர்க்கரைப் பொங்கல் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
திருவோணம்-- சர்க்கரை கலந்த பால் தானம், வறுமை யிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
அவிட்டம்-- சாம்பார் சாதம் தானம்; கால்நடைகளுக்கு துவரை வாங்கித் தரலாம்.
சதயம்-- உளுந்துப் பொடி சாதம் தானம்; கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் தரலாம்.
பூரட்டாதி-- தயிர் சாதம் தானம்; பிறருக்கு இயன்ற உதவி செய்யலாம்.
உத்திரட்டாதி --மிளகு சாதம் தானம்; ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.
ரேவதி--வெண் பொங்கல் பிரசாதம் தானம்; பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக