ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

சித்திரகுப்தன் வழிபாடு

சித்திரகுப்தன் வழிபாடுchitraguptan க்கான பட முடிவு

சித்திரை மாத பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் இல்லங்களிலும் திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன,
சித்ரகுப்தனை போற்றும் வகையில் அன்று சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது. திருக்கயிலையில் வரையப்பட்டிருந்த பிரணவ வடிவமான் ஓவியங்களிலிருந்து கணபதி தோன்றினார் என்கிறது கந்த புராணம். அதுபோல் ஓர் ஓவியத்தைப் பார்த்த பார்வதியும் பரமசிவனும் சித்திர புத்திரனே வருக என்று அழைத்தனர். அப்போது அந்த ஓவியத்திலிருந்து வெளிப்பட்டவனே சித்திரகுப்தன் என்று பெயர் பெற்றான்.சிவன் க்கான பட முடிவு
இறைவனை நினைத்து கசிந்து கண்ணீர் மல்குபவர்கள் சிலர்.  வீணாக  பொழுதைக் கழிப்பவர்கள்  பலர். இவர்கள் அனைவரையும் ஈசன் கவனித்து வருகிறான் அவர்களின் நடவடிக்கைகளை கீழ்கணக்கு என்ற ரகசியமான சுருக்கெழுத்து முறையில் எழுதியும் வருகிறான். சிவபெருமானின் அருளால் தோன்றிய சித்திரகுப்தனும் கணக்கெழுதுவதில் தனித்திறமை பெற்றான். இந்திராணி ஒரு பசுவை வளர்த்து வந்தாள். சித்திரகுப்தன் அடுத்த பிறவியில் இந்திராணி வளர்த்த அந்தப் பசுவின் குமாரனாகத் தோன்றினான். அவன் பிறந்த பொழுதே கையில் ஏடும் எழுத்தாணியும் ஏந்தியவனாகத் தோன்றினான்.சித்திரகுப்தர் பூஜை க்கான பட முடிவு
உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் வாழ்க்கை குறித்த தகவல்கள் அனைத்தையும் துல்லியமாகப் பதிவுசெய்யும் பணியை சிவபெருமான் சித்திரகுப்தனிடம் அளித்தார். சற்றும் தருமம் தவறாத எமதர்மனின் கணக்கனாக இருந்து சித்திரகுப்தன் தன் பணியை செய்து வருகிறான்  சித்திரகுப்தனை பூஜிக்க சித்ராபௌர்ணமி நாளில் இந்திரன் பூவுலகம் வந்து காஞ்சியில் வழிபாடுகள் நடத்துவதாக ஐதீகம்  காஞ்சியில் உள்ள சித்திரகுப்தர் திருக்கோயிலில் அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாலையில் சித்திரகுப்தன் திருமண விழாவும் கொண்டாடப்படுகிறது.

சித்திரகுப்தன் பசுவின் வயிற்றில் பிறந்தவர் என்பதால் அன்றைய தினம் பசும்பாலை அருந்துவதோ பயன்படுத்துவதோ கூடாது என்பது நியதி.


அமராவதி என்ற பெண் பல்வேறு விரதங்களையும் அனுஷ்டித்தாள் எனினும் அவளுக்கு சொர்க்கத்தில் இடம் பிடிக்க இயலவில்லை. அவள் மீண்டும் பூமியில் பிறந்து சித்திரகுப்த விரதத்தை பயபக்தியுடன் மேற்கொண்டாள். அதன் பயனாக அவள் விரும்பிய சொர்க்கப் பதவி கிடைத்ததாக  புராணங்கள் கூறுகின்றன. சித்ராபௌர்ணமி விரதத்தை வீடுகளிலும் கடைபிடிக்கலாம். அன்று விரதம் இருந்து இறைவனை வழிபட்டு தேங்காய்பால் நிவேதனம் செய்து நிவேதனமாகப் பருகுவார்கள். 
சித்ரகுப்த கோலம்images (1)
அன்று சித்ரகுப்த கோலம் போட்டு அதன் அருகில் “மலையளவு பாவம் செய்தாலும் கடுகளவாகவே எழுது” என்று எழுதவேண்டும்.அப்போதுதான் சித்திரகுப்தர் நம்மீது கருணை வைத்து நம் பாவங்களை அகற்றுவார் என்பது நம்பிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக