ஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் சின்னங்கள் :
திரிசூலம் :
மூன்று இதழ்கள் கொண்ட சூலம் அம்மனோட பிரதான ஆயுதம்.
பெரும்பாலான அசுரர்களை, அம்பிகை சூலத்தால் குத்தி
சம்காரம் செய்ததாகவே புராணங்கள் சொல்கிறது. ஆனால்,
இதனோட உண்மையான கருத்து என்ன தெரியுமா? எந்த ஒரு
தீயவனையும் அம்பிகை தன்னோட கருணையால், அவன் கிட்டே
இருக்கிற ஆசை, காமம், வெகுளிங்கற மும்மலங்களையும்
வேரறுத்து, அவனை நல்லவனாக மாற்றி தன்னடி
சேர்த்துக்கொள்கிறாள். அப்படிங்கறதுதான், மும்மலங்கள்லேயும்
ஒட்டாம பிரிஞ்சு நிக்கறவ அம்பிகைங்கறதை, சூலத்தோட
மூன்று பிரிவுகளும், எல்லாம் சேர்ந்து இணைஞ்ச கைப்பிடியை
அம்பிகை பிடிச்சுகிட்டு இருக்கிறது. இந்த மூன்று தீய குணங்களும்,
என் பக்தர்களை நெருங்க விடாம நான் கட்டுப்படுத்தி வைச்சிருக்கேன்னு அம்மன் சொல்ற விதமாகவும் அமைஞ்சிருக்குன்னு தேவிபுராணம் சொல்கிறது.
கதவுகளில் அவற்றை பொருத்தி வைத்திருப்பதும் வழக்கம்.அதன் முலம் தீய சக்திகளின் தாக்கம் வீடுகளுக்குள் வராமல் காப்பதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.
ஸ்ரீ சக்கரம்:
சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் ஸ்ரீ சக்கர வழிபாடானது, நமது நாட்டின் பல இடங்களில் பிரபலமாக இருந்து வருகிறது. காமாட்சி, துர்க்கை, ராஜராஜேஸ்வரி, லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்வதும், அதை தனிப்பட்ட முறையில் வழிபாடு செய்வதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்கர வழிபாட்டை தகுந்த முறைப்படி,உபதேசம் பெற்று,உரிய நியமங்களுடன் வழிபட்டு வந்தால் பல நல்ல பலன்கள் கிடைக்கும் ஆன்றோர்களுடைய நம்பிக்கையாகும். ஆதி சங்கரர் பல்வேறு தலங்களுக்கு சென்று அங்கு உக்கிரமாக இருக்கும் அம்பிகையின் மூல ஸ்னாத்துக்கு முன்னர் அந்த கோவிலின் உட்புறத்தில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை அந்த தெய்வங்களை சாந்த சொரூபிணியாக மாற்றியுள்ளார்.ஒற்றைகாலில் நின்றபடி அம்பிகை தவம் செய்யும் மாங்காடு தலத்திலும் அர்த்த மேருஅமைப்பில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்ய பட்டு வழிபாடுகள் நடந்தது வருகின்றன.
ஓம்காரம்:
ஓம் என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கப்படுகிறது. ஏனென்றால் அதற்குள் நல்ல அதிர்வுகள் உள்ளார்ந்து அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஷட்கோணம் :
ஆன்மிகத்தில் முக்கோணத்திற்கு தனிப்பட்ட சிறப்பு உண்டு. முக்கோணம் என்பது சத்வம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்களை உணர்த்துகிறது. முக்கோணத்தின் உச்சி கீழ்நோக்கி இருந்தால் அது சக்தியாகிய பெண் அம்சமாகவும், மேல்நோக்கி இருந்தால் சிவமாகிய ஆண் அம்சத்தையும் குறிப்பிடும். இரண்டும் இணைந்த அறுங்கோணமானது சிவசக்தி ஐக்கியத்தையும், உலகத்தின் தோற்றத்தையும் குறிக்கிறது.
பூரண கலச சின்னம்:
மண்ணால் ஆன அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட, நீர் நிறைந்த பாத்திரத்தின் மேல் தேங்காய் வைத்து அதில் மாவிலைகள் செருகி வைக்கப்படும் அமைப்பு கலசம் எனப்படுகிறது. இந்த கலசத்தின் உள்ளிருக்கும் நீர் புனித நதிகளின் நீராகவும், அதில் வாசனை திரவியங்கள் கலக்கப்பட்டதாகவும் இருக்கும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல், பானையின் மேலிருந்து கீழாக நுணுக்கமாக சுற்றப்படும். பானையின் மேல் புறத்தில் அழகான வடிவங்கள் குங்குமத்தால் வரையப்படும். இவ்வாறு சகல அலங்கார அமைப்புடனும் உள்ள பாத்திரம் பூரண கும்பம் என்று அழைக்கப்படுகிறது.
இதைகிரகப்பிரவேசம்,திருமணம்,தினசரி பூஜை கோவில்களின் கும்பாபிஷேகம் மற்றும் இதர ஹோம பூஜைகளுக்கும் இந்த கும்ப அமைப்பு முக்கியமான ஓன்றாக இருக்கும். பூரண கலசமானது உயிருள்ள ஒரு தேவைதையின் வடிவமாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக