கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டுமே என்று ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது.
ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
பரமாச்சார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம்
மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
கஷ்ட நிவாரணி இஷ்ட விதாயினி துஷ்ட விநாசினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குறு கல்யாணம் குஞ்சர ஜனனி காமாக்ஷி
ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
க்ரஹநுத சரணே க்ருஹ சுத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
சிவமுக விநுதே பவசுக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
பக்த சுமானஸ தாப வினாசினி மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
கேனோ பநிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி
பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
==
ஒரு தட்டில் அரிசி பரப்பி அதில் காமாக்ஷி விளக்கை வைத்து,அதற்க்கு சந்தனம்,குங்குமம்,பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.முதலில் தெரிந்த விநாயகர் துதி சொல்ல வேண்டும்.பிறகு விளக்கை ஏற்றி (நெய் விட்டு ஏற்றுதல் சிறப்பு)அதில் தீபலக்ஷ்மியை எழுந்தருளப் பிரார்த்திக்கவும்.பிறகு மேலே உள்ள காமாக்ஷி ஸ்தோத்திரத்தை 7முறை பாராயணம் செய்யவும்.
பிறகு நம்மால் இயன்ற நிவேதனம் (பால்,பழம் ,முடிந்தால் ஏதேனும் இனிப்பு)செய்து,வெற்றிலை,பாக்கு ,பழம் நிவேதித்து கற்பூரம் காட்ட வேண்டும்.இந்தத் தாம்பூலத்தை பூஜை முடிந்த பின் சுமங்கலிகளுக்குத் தருதல் வேண்டும்.
ஏழு முறை ஆத்மபிரதக்ஷிணம்(நின்ற இடத்தில்,நமக்கு நாமே சுற்றுவது)செய்ய வேண்டும்.ஒவ்வொரு பிரதக்ஷிணத்துக்கும் ஒவ்வொரு நமஸ்காரம் வீதம் 7முறை நமஸ்கரிக்க வேண்டும்.
பின்,இரு கரங்களிலும் பூக்கள் எடுத்து விளக்குக்கு சமர்ப்பித்து,மஞ்சள் குங்குமம் கரைத்த ஆரத்தி நீராகி சுற்றிக்காட்டி,பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.இந்த நீரை,கால்படாத இடத்தில் ஊற்ற வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்ட நாட்களுக்கோ (11,21,ஒரு மண்டலம் )ஒரு மண்டலம் என்பது 48நாட்கள் ஆகும்.அல்லது செவ்வாய் ,வெள்ளிக்கிழமைகளிலோ செய்து வர காமாக்ஷி அம்மனின் கிருபையால்,சுபகாரியத் தடை விலகி நலம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக