மேன்மை சிறக்க வைக்கும் ஸ்ரீசக்ரமும்,அதன் தலங்களிலும்
சில கோயில்களில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அம்பிகையின் பீடமாகவோ அல்லது அம்பிகைக்கு எதிரிலோ இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீசக்ரம் மிகுந்த சக்தி வாய்ந்தது. ஆதிசங்கரர் போன்ற பரமாசார்யார்களால் நிறுவப்பட்ட இந்த ஸ்ரீசக்ரம் நமக்கு நல்வாழ்வளித்து மேன்மை சிறக்க வைக்கும் வல்லமை வாய்ந்தது. சிவன் சக்தி இருவருக்கும் இருப்பிடமானது ஸ்ரீசக்ரம். ஸ்ரீசக்ரத்தின் நடுவில் பிந்துவும் சுற்றி ஒன்பது முக்கோணங்களும் உள்ளன. இந்த அமைப்பில் மேல் நோக்கிய நான்கு முக்கோணங்கள் சிவனையும் கீழ்நோக்கிய ஐந்து சக்தியையும் குறிக்கும். எல்லையற்ற சக்தி, ஞானம், கல்வி, ஆரோக்கியம், முக்தி என அனைத்தையும் நல்கும் அற்புதச் சக்ரம் இது. பாரத நாட்டில் 180க்கும் மேல் உள்ள தலங்களில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவற்றில் சில தலங்களை நவராத்திரி காலத்தில் தரிசிப்போம்:
* திரு ஆனைக்காவல்: பஞ்சபூத ஸ்தலங்களில் இது அப்பு ஸ்தலம். அம்பாளின் உக்ரத்தைச் சாந்தப்படுத்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர தாடங்கங்களை சாத்தினார். இதில் ஒரு சக்ரம் சிவ சக்ரம் மற்றொன்று சக்தி சக்ரம் எனப்படும் ஸ்ரீசக்ரமாகும். * திருவிடைமருதூர்: இங்குள்ள மூகாம்பிகை சந்நதியில் பஞ்சலோகத்தினால் ஆன 12”x12”x12” என்ற அளவு கொண்ட ஸ்ரீசக்ரம் உள்ளது. அம்பிகையே கிளி வடிவில் தோளில் அமர்ந்த பாக்யம் பெற்ற பாஸ்கரராயர் எனும் தேவி உபாசகரால் பூஜிக்கப்பட்ட சக்ரம் இது என்பது விசேஷ செய்தியாகும். * வேளச்சேரி: சென்னையில் உள்ள வேளச்சேரி தண்டீஸ்வர் ஆலயத்தில் கருணாம்பிகையின் பாதங்களின் அருகில் ஸ்ரீசக்ரம் அமைக்கப்பட்டுள்ளது. * மாங்காடு: மிகப்பெரிய ஸ்ரீசக்ர கோயில். பல்லவர் காலத்தியது. கர்ப்பகிருகத்தில் உள்ள 6 அடி x 6 அடி x 3 அடி என்ற அளவிலான ஸ்ரீசக்ரம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது. ஏராளமான அதிசய ரகசியங்களைக் கொண்ட இந்தக் கோயிலில் இந்த சக்ரம் அர்த்த மேரு வடிவில் அமைந்து பரவசப்படுத்துகிறது. * திருவொற்றியூர்: இங்குள்ள தியாகராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வட்டப்பாறை அம்மன் சந்நதியில் கல்லினால் வட்டவடிவமான மூன்றரை அடி குறுக்களவும், 1½ அடி உயரமும் உள்ள காளியந்திரம் ஆதிசங்கரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. * குற்றாலம்: இங்குள்ள சிவாலயத்தில் தேவிசந்நதியின் அருகில் ஸ்ரீசக்ரத்திற்காகவே தனி சந்நதி உள்ளது. 2’ x 2’ x 1’4” என்ற அளவில் கருங்கல்லினால் ஆன ஸ்ரீசக்ரம் அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது பராசக்தி பீடம் என போற்றப்படுகிறது. * காஞ்சிபுரம்: இந்த நகரமே ஸ்ரீசக்ரவடிவிலானது. இங்கு பரமேஸ்வரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காமகோடி என்னும் பெயர் பெற்ற ஸ்ரீசக்ரத்தில் அம்பாள் காமாக்ஷி நித்ய ஸாந்நித்திய மாக விளங்குகிறாள். இந்த சக்ரத்தைச் சுற்றிலும் திருமியச்சூரில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எழுந்தருளியுள்ளனர். * குஜராத், த்வாரகா நகரில் உள்ள ஆலயத்திலும் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தை நிறுவியுள்ளார். கேரளத்தில் ஸ்ரீசக்ரம் பதிக்கப்பெற்ற ஆலயங்கள் ஏராளம். கொடுங்களூரில் உள்ள பத்ர காளி சிலையின் அடியில் ஐந்து ஸ்ரீசக்ரங்களை ஆதி சங்கரர் ஸ்தாபித்துள்ளார். |
காஞ்சி பெரியவரின் பத்து கட்டளைகளும்,பின்பற்ற வேண்டியவைகளும் ஜனவரி 8, 1994 ஆம் ஆண்டு தான் மகாபெரியவா ஸ்தூல சரீரம் விடுத்து சூட்சும சரீரம் புகுந்தார்.
பெரியவர் தான் ஜீவனுடன் இருந்தபோது நமது நல்வாழ்வுக்கு நாம் பின்பற்றக் கூடிய எளிய விஷயங்களை பத்து கட்டளைகளாக கூறியிருந்தார். இவற்றைப் பின்பற்ற பணம் காசே தேவையில்லை. மனமிருந்தால் போதும்.
மகாபெரியவரின் அந்த பத்து கட்டளைகளை வரிசையாகப் பார்ப்போம்.
1.காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்
2.அன்றைய தினம் நல்ல தினமாக இருக்க கடவுளை வேண்டிக்கொள்
3.அடுத்து புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்ஜீவிகள், சப்த கன்னியர்கள் முதலியவர்களை குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நினை,
4.வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடு
5.உன் பக்கத்தில் வாழ்பவர்களையும், மற்றவர்களையும் நேசி.
6. சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்துவிட்டு பிறகு சாப்பிடு
7.அன்றாடம் குறைந்தபட்சம் சக்திக்கேற்றபடி தர்மம் செய்
8.நெற்றியில் தவறாது திலகம் வைத்துக் கொள்
9.உறங்கச் செல்லுமுன் அன்றைய நாளில் நீ செய்த நல்லது கெட்டதுகளை எண்ணிப் பார்
10.ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு உறங்கு.
இதுதான் அந்த பத்து கட்டளைகள். இதில் எதை நம்மால் பின்பற்ற முடியாது? இதில் எதைப் பின்பற்ற பிறர் தயவை நாம் எதிர்பார்க்க வேண்டும்? மிக மிகச் சுலபமான விஷயம் இது என்றால், இது போதுமா? இந்த பத்தைச் செய்தபடி எதை வேண்டுமானால் செய்து கொண்டு வாழலாமா என்று இடக்காக கேட்கக் கூடாது. இந்த பத்தின் வழி வாழப் பழகிவிட்டால் இடக்கு முடக்கான சிந்தனைகளே முதலில் தோன்றாது. வாழ்க்கை நிறைந்த மன நிம்மதியோடு ஒரு தெளிவுக்கு மாறுவதையும் உணரலாம். இதை வைராக்கியமாகப் பின்பற்ற வேண்டும். அதுதான் இதில் முக்கியம்.
இந்த பத்து கட்டளைகளில் பத்தாவது கட்டளையாக ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு என்று இருக்கிறதல்லவா? அந்த ஆண்டவன் நாமம் எது என்று சிலருக்கு கேட்கத் தோன்றும். ஏன் என்றால் இஷ்டதெய்வம் என்று ஒன்று, குலதெய்வம் என்று ஒன்று, இதுபோக ஒவ்வொருவரும் ‘ரொம்ப சக்தி வாய்ந்த சுவாமி’ என்று அவரவர் உணர்வு நிலைக்கேற்ப சுட்டிக் காட்டும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் நம்மிடையே இருக்கிறதே! இதில் எதை தியானிப்பது என்று கேட்கலாம். இம்மட்டில் அவரவர் மனமும் எந்த தெய்வத்திடம் போய் நிற்கிறதோ அதுதான் அவர்கள் தியானிக்க ஏற்ற நாமமாகும். ஆனாலும், அனைவருக்கும் ஏற்ற ஒரு நாமமும் உள்ளது.
கோவிந்த நாமம்தான் அது! ‘கோவிந்தா… கோவிந்தா… கோவிந்தா…’ – இதுதான் பெரிய
வருக்கே தியான மந்திரம்!
கோவிந்த நாமாவுக்குள்ள அனேக சிறப்புகளில் இன்னொரு சிறப்பு, ஆதிசங்கர பகவத்பாதாளுக்கும் மிகப் பிடித்த நாமம் இதுதான்.
‘பஜகோவிந்தம்’ என்பது, அவருடைய சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி அல்லது ஷட்பதீ ஸ்தோத்திரம் போன்று ஒரு ஸ்வாமியை ஸ்தோத்தரிக்கும் பிரார்த்தனை இல்லை. வைஷ்ணவர், சைவர் என்று பேதமில்லாதபடி சகல ஜனங்களுக்குமானது இது.
இப்படிப்பட்ட க்ரந்தத்தில் ஆசார்யாள் ‘பரமாத் மாவை பஜியுங்கள்’ என்று பொதுவாகச் சொல்லாமல், ‘கோவிந்தனைப் பஜியுங்கள்’ என்று சொல்கிறாரென்றால், அந்தப் பெயர் எத்தனை உயர்ந்ததாக, அவருக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும்?
கோவிந்த நாமத்துக்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது. மகாவிஷ்ணுவுக்கு மிக ப்ரீதியான நாமாக்கள் பன்னிரண்டு. அதில் முதல் மூன்றில் ஒரு முறையாகவும், அதாவது ‘அச்சுத, அனந்த, கோவிந்த’ என்பதில் ஒரு முறையும், பின் கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப, தாமோதர என்பதில் ஒரு தடவையும் என்று இரு தடவை இடம்பெறும் ஒரே நாமம் கோவிந்தாதான்! அதனாலேயே இதை ஆசார்யாளும் ‘பஜகோவிந்தம் பஜ கோவிந்தம் பஜகோவிந்தம்’ என்று மூன்று முறை சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்.
ஒன்றை மூன்று முறை சொல்வது என்பது சத்யப் பிரமாணத்திற்காக என்றால், கோவிந்த நாமமே சத்யப் பிரமாணம் என்றாகிறது. இந்த சத்யப் பிரமாண நாமாவை பகவத் பாதாள் மட்டுமல்ல; ஆண்டாளும் தன் திருப்பாவையில் மூன்று இடங்களில் அழைத்து இந்தப் பிரமாண கதியை உறுதி செய்கிறாள்.
‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்று ஒரு இடத்திலும், ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா’ என்று இன்னொரு இடத்திலும், ‘இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா’ என்று இன்னொரு இடத்திலும் குறிப்பிடுகிறாள்.”
இப்படி கோவிந்த நாமச் சிறப்பை பெரியவர் தகுந்த உதாரணங்களோடு கூறிடும் போதுதான், நமக்கும் அதன் பிரமாண சக்தி புரிய வருகிறது. அதே சமயம் இன்று இத்தனை உயர்ந்த கோவிந்த நாமத்தை, சிலர் மிக மலிவாக ஒருவர் தம்மை ஏமாற்றிவிட்டாலோ இல்லை பெரும் ஏமாற்றங்கள் ஏற்படும்போதோ ‘எல்லாம் போச்சு… கோவிந்தா’ எனச் சொல்வதைப் பார்க்கிறோம். யார் முதலில் இதைச் சொல்லி பின் இது எப்படிப் பரவியது என்றும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
பெரும் ஏமாற்றம் ஏற்பட்ட நிலையில், தன் மனதைத் தட்டி எழுப்பி தான் நிமிர்ந்து நின்றிட கோவிந்த நாமா மட்டுமே உதவும் என்று நம்பியே அவர் ‘கோவிந்தா கோவிந்தா’ என்றிருக்க வேண்டும். ஆனால், அவர் சொன்ன அடிப்படை புரியாமல், ஏமாந்தவர்கள் ஏமாற்றியவர்களைப் பார்த்துச் சொல்லும் ஒன்றாக இது காலப்போக்கில் மாறி விட்டது.