புதன், 28 மார்ச், 2018

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன்




மதுரை தெப்பக்குளம் மாரியம்மன்


துரை தெப்பக்குளம் மாரியம்மன் – இந்தத் திருப்பெயரைக் கேட்டதுமே மதுரைவாழ் பக்தர்களிடம் அப்படியொரு சிலிர்ப்பும் பரவசமும் தொற்றிக்கொள்ளும். அந்த அளவுக்கு அன்பர்களின் மனதில் குடிகொண்டிருக்கிறாள் இந்த மாரியன்னை. திருமலை நாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட மதுரையின் மிகப்பெரிய தெப்பக்குளம், மன்னரின் பெயரில் அழைக்கப்படாமல் மாரியம்மன் பெயரில் ‘மாரியம்மன் தெப்பக்குளம்’ என்றே பிரசித்திப் பெற்றிருக்கிறது.
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் எனும் இந்த குளம் 1646-ம் ஆண்டில் வெட்டுவிக்கப்பட்டிருக்கிறது. திருமலை நாயக்கரால் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்டமான குளம் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இது மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிழக்காக 5 கி.மீ தூரத்தில் உள்ளது. குளத்தின் மையத்தில் விநாயகர் சன்னதி வீற்றிருக்கிறது.
அரண்மனைக் கட்டுமானத்துக்காக தோண்டப் பட்டதால் ஏற்பட்ட பள்ளத்தையே நாயக்க மன்னர் திருக்குளமாக அமைத்தாராம். இங்கே மண் தோண்டப்பட்டபோது கிடைத்த பெரிய விநாயகரையே மதுரை மீனாட்சியம்மன் கோயி லில் முக்குறுணி விநாயகராகத் தரிசிக்கிறோம். இக்குளத்தில் தை மாதம் நிகழும் தெப்போற்ஸவம் விசேஷமானது. இப்படி பெருமைகள் வாய்ந்த இந்தக் குளத்தின் அருகிலேயே மாரியம்மன் கோயில் கொண்டிருப்ப தால் கூடுதல் சிறப்புப் பெற்றுவிட்டது.

மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, அன்னை மீனாட்சிக்கும் பிரியமானவள் இந்த மாரியன்னை என்று சிலாகிக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.  பாண்டிய மன்னர்கள், சேதுபதி மன்னர்கள், நாயக்க மன்னர்கள் அனைவராலும் வணங்கப்பட்ட அன்னை 
மாரி இங்கே கோயில் கொண்ட வரலாறு இதுதான்…    





மன்னர் கூன்பாண்டியன் ஆட்சி காலத்தில் குறும்பர்கள் எனும் இனத்தவர்கள் மகிழ 

மரக் காடுகளாக இருந்த இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து, அப்பகுதி மக்களுக்குப் 
பெரும் தொந்தரவு கொடுத்து அட்டகாசம் செய்து வந்துள்ளனர். மேலும் அங்கிருந்த 
இயற்கை வளங்களையும் அழித்துவந்துள்ளனர். இதுபற்றிய புகார் மன்னர் கூன்பாண்டியன்
 கவனத்துக்குச் சென்றுள்ளது. மக்களைக் காப்பாற்ற அப்பகுதிக்குப் படையுடன்  சென்ற 
மன்னர், ஆக்கிரமிப்பு செய்த குறும்பர் இனத்தவருடன் சண்டையிட்டு அவர்களை விரட்டி 
அடித்துள்ளார். அதன் வெற்றியைத் தொடர்ந்து அங்கிருந்த வைகை ஆற்றில் கிடைத்த 
அம்மனின் சிலையை வைகை ஆற்றின் தெற்குக் கரையில் வைத்து வழிபட்டுள்ளார். 
அதிலிருந்து போருக்குச் செல்லும்முன் அம்மனை வழிபட்டுச்  செல்வதை வழக்கமாகக் 
கொண்டிருந்தார். அதனால் பல வெற்றிகளையும் அடைந்திருக்கிறார்.  தங்களுடைய  
 மன்னரே வணங்கியதால், மக்களும் மாரியம்மனை பக்திபூர்வமாக வழிபட்டு வருகின்றனர்.

தந்தையின் கட்டளையை நிறைவேற்றவேண்டி, தன் தாய் ரேணுகாதேவியின்  தலையைத் 
துண்டித்த பரசுராமர், மறுபடியும் தன் தாயை உயிர்ப்பித்துத் தருமாறு தந்தையைக் 
கேட்டதாகவும், அதன்படி உயிர்த்தெழுந்த ரேணுகாதேவியே இங்கே மாரியம்மனாகக் 
கோயில் கொண்டதாகவும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
வைகை ஆற்றின் வண்டியூர் மேல்மடைக்கு நேரில் இருப்பதால் வண்டியூர் மாரியம்மன் 
கோயில் என்று அழைக்கப்படும் இந்தக் கோயிலில், மகிஷனை வதம் செய்வது போன்ற
 நிலையில் காட்சி தருகிறாள். அந்த வகையில் மாரியம்மனே மகிஷாசுரமர்த்தினியாகவும் 
திகழ்கிறாள் என்பதும் தனிச்சிறப்பு. மேலும் இடக்காலின் மீது வலக்காலைப் போட்டபடி 
இந்த அம்பிகை அமர்ந்திருப்பது அபூர்வ திருக்கோலம். போருக்குச் செல்லும் முன்பு 
வெற்றியை வேண்டி மன்னர்கள் வழிபட்ட மாரியம்மனை, தேர்வுகளிலும் விளையாட்டுப் 
போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டி வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். அரசமர
 விநாயகர், பேச்சியம்மன் ஆகியோரும் இங்கே காட்சி அருள்கின்றனர்.
பிணிகள் தீர்க்கும் தீர்த்தம்!
அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் இந்தத் தீர்த்தம், கோயில் நிர்வாகத்தினரால் 

பித்தளை அல்லது செம்புப் பாத்திரங்களில் சேகரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு 
வழங்கப்படுகிறது. கண் நோய், அம்மை நோய், தோல் நோய் மற்றும் நாள்பட்ட 
வியாதி உள்ளவர்களுக்கு இந்தத் தீர்த்தம், பிணிகள் தீர்க்கும் மருந்தாகத் திகழ்கிறது 
என்பது நம்பிக்கை. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தப் பிரசாதம் 
பெற்றுச் செல்கின்றனர்.தோல் வியாதி உள்ளவர்கள், அம்பிகைக்கு, உப்பு, மிளகு இடுவர்
தொடர்புடைய படம்
 வேண்டுதல் நிறைவேறியவர்கள் வெள்ளிக்கிழமைகளில் கூழ் காய்ச்சி இங்கு வரும்
 பக்தர்களுக்கு கொடுக்கின்றன .


வாரி வழங்கும் கற்பகத் தருவாகத் திகழும் மாரியன்னையின் சந்நிதிக்கு நாமும் 






தேடி வரும் அடியார்களின் வாழ்க்கைச் செழிக்க வரம்

தலம்: மதுரை.

அம்மன்: அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன்.

தலச் சிறப்பு: மாரியம்மனே மகிஷாசுர மர்த்தினி கோல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக