வியாழன், 22 மார்ச், 2018

ராமனின் கதையும் ,விரதமும்

நன்மைகள் வழங்கும் ராமநவமி விரதம்











என் அன்பு தோழிகளுக்கு முதலில் என் இனிய ராம நவமி வாழ்த்துக்கள்.நமக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும் பகவானை நினைப்பது,அவர் புகழ் பாடுவது போன்றவற்றில்தான் இன்பம் இருக்கிறது.நமக்கு கொடுத்திருக்கும் உடலில் ஒவ்வொரு உறுப்பும் காரணம் இல்லாமல் சுவாமி படைக்கவில்லை.இந்த உடலை உயிரை கொடுத்த சுவாமியை நாம் அனுதினமும் நினைத்து வழிபட வேண்டும்.அவர் திருவடியை கண்ணால் பார்த்து,வாயால் அவர் நாமாக்களை சொல்லி,இரு கைகளால் கூப்பி சுவாமியை வழிபட வேண்டும்.நாம் கோவிலுக்கு போய்தான் வழிபடவேண்டும் என்பது இல்லை.வீட்டில் வழிபடலாம் அல்லது நம் மனதில் அவரை இருத்தி, மானசமாக பூஜைகள் செய்து,நம் உடலையும் மனதையும் தெய்வீக மணம் வீச செய்யலாம்.

அவர் புகழை பாடி நமக்கு வேண்டிய நியாயமான கோரிக்கைகளை அவர்முன் வைத்து வழிபட வேண்டும்.நம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் இறைவன்.மிக சிறப்பாகத்தான் வழிபட வேண்டும் என்பது இல்லை.கிருஷ்ணர் "எனக்கு தண்ணீரோ,பூவோ வைத்தால் போதும்.நான் அதை ஏற்பேன்"என்கிறார்.ஆதலால் உங்களால் முடிந்தவற்றை வரவிருக்கும் ஸ்ரீராம நவமி அன்று  சுவாமிக்கு செய்து அவர் அருளை பெறுங்கள்.


ராமனின் கதையும் ,விரதமும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக