வியாழன், 22 மார்ச், 2018

ஸ்ரீராமர் ஜாதகத்தை பார்த்தல் புண்ணியம் !

ஸ்ரீராமர் ஜாதகத்தை பார்த்தல் புண்ணியம் !தொடர்புடைய படம்
ஸ்ரீ ராமர் ஜாதகத்தை வணங்குதல் புண்ணியத்திலும் புண்ணியம் !! 
மகிமை வாய்ந்த இந்த ராமர் ஜாதகத்தை பூஜை இடத்தில் எழுந்தருளப்பண்ணி தினமும் பக்தி சிரத்தையுடன் ஆராதித்து வரவேண்டும். இந்தப் புனிதமான ராமர் ஜாதகத்தை பூஜிப்பவர்களுக்கும் வைத்திருப்பவர்களுக்கும் ஜாதகரீதியாக இருக்கும் நவக்கிரக தோஷங்கள் விலகுவதுடன் சகலவிதமான பிணிகளும் நீங்கும். மேலும் ஐஸ்வரிய அபிவிருத்தியும் ஆயுள் அபிவிருத்தியும் ரகுகுல நாயகனின் அருளால் உண்டாகும்
கிரக தோஷங்கள் நீக்கும் ஸ்ரீ ராமர் ஜனன ஜாதகம்.இந்த ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜித்தால் கிரக தோஷ பீடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
ராமனும் ராமாயணமும்!
மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் ராம அவதாரம். ராமன் தன் அவதாரம் மூலம், உலகுக்கு உணர்த்தாத பொருளே இல்லை, உரைக்காத உண்மையில்லை. தந்தை சொல் கேட்டல், உடன்பிறப்பு ஒற்றுமை, தாய்க்குச் சிறந்த மகனாக இருத்தல், வாக்குத் தவறாமை, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏகபத்தினி விரதம் - இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம். 
ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என வாழ்ந்து வழிகாட்டியவர் ஸ்ரீராமர்.
ஓர் இல் - ஒரு மனைவி.
ஒரு சொல் - வாக்குத் தவறாமை.
ஒரு வில் - குறி தவறாத ராம சரம்.
அனுமன் ஜாதகத்தை வைத்து பூஜிப்பதால் வளங்களும், நலங்களும் வந்து சேரும்.
ஸ்ரீ ராமர் அஷ்டகம்
வேதவியாசர் அருளியது
பஜே விசேஷ சுந்தரம் ஸமஸ்தபாப கண்டனம்
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்
பொருள்: அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.
ஜடாகலாப சோபிதம் ஸமஸ்தபாப நாஸனம்
ஸ்வபக்த பீதி பஜ்ஜனம் பஜேஹராம மத்வயம்
பொருள் : அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கிறேன். 
நிஜ ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்
பொருள்: ஆன்மாவின் வடிவினை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையிலிருப்பவரும், மங்களத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.
ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்
நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராமமத்வயம்
பொருள்: உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுதுமுள்ளவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன்.
நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்
சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராமமத்வயம்
பொருள்: பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.
பவாப்தி போதரூபகம் ஹ்யசேஷ தேஹ கல்பிதம்
குணாகரம் க்ருபாகரம் பஜேஹ ராம மத்வயம்
பொருள்: சம்சார சாகரத்தினைக் கடக்க உதவும் தோணி போன்றவரும், எல்லோருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக் கடலும் இணையற்றவருமான ஸ்ரீராமனை போற்றுகிறேன். 
மஹாவாக்ய போதகைர் விராஜமான வாக்பதை
பரப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்
பொருள்: மஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாயும், எங்கும் நிறைந்திருப்பவராகவும், இணையற்றவருமாக உள்ள ஸ்ரீராமனை பூஜிக்கிறேன். (பரமசிவன் தேவி பார்வதியிடம் ராம என்ற மகாவாக்கியத்தை மூன்று முறை சொன்னாலே போதும், அது ஆயிரம் திருநாமங்களால் வழிபட்டதற்குச் சமம் என்று கூறியதை நினைவில் கொள்ளலாம்.)
சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம் ப்ரமாபஹம்
விராஜமான தேசிகம் பஜேஹ ராமமத்வயம்
பொருள்: நன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆசார்யனாய் பிரகாசிக்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை துதிக்கிறேன்.
ராமாஷ்டகம் படத்யஸ்ஸுக கரம் ஸீபுண்யம் வ்யாஸேன பாஷித மிதம் ஸ்ருனுதே மனுஷ்ய
வித்யாம் ஸ்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்தி ஸம்ப்ராவ்ய தேஹவிலயே லபதேச மோக்ஷம்
ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்
பொருள்: வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, செல்வம், கலை, அளவற்ற சுகம், சர்வமங்களம் மற்றும் மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக