ஞாயிறு, 25 மார்ச், 2018

ஒவ்வொரு நாளும் சாம்பிராணி தூபம் காட்டுவதால் பலன்

 ஒவ்வொரு நாளும் சாம்பிராணி தூபம் காட்டுவதால் பலன் சாம்பிராணி என்பது ஒரு மரப்பிசின் ஆகும்.அனைத்து மதத்தினரும் சாம்பிராணி தூபம் போடுவதை கடைபிடிக்கின்றனர்.இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் அனைத்துசடங்குகளிலும் மற்றும் வழிபாடுகளிலும் சாம்பிராணி தூபம் போடுவதை கடைபிடிக்கின்றனர்.

சாம்பிராணி போடுவது , ஹோமங்கள் செய்வது போன்றவை நம் சுற்று சூழலில் உள்ள அசுத்தத்தை நீக்கி 
நமக்கு ஒரு நேர்மறையான(positive) சக்தி அளிப்பதற்கே. போபாலில் அக்னிஹோத்ரம் செய்த ஒரு குடும்பம் விஷவாயு தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்ததே இதற்கு சான்றாகும்.


தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் இருக்கும். சாம்பிராணி புகை போடும் பொழுது விஷ ஜந்துக்கள் தொல்லை இருக்காது. இவை வெளியேறிவிடும். எனவே அந்தி சாயும் வேளைகளில் சாம்பிராணி தூபம் போடுவர்.

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் சுமங்கலி பெண்கள்,மங்கல நாட்களான செவ்வாய்,வெள்ளி கிழமைகளில் மாலைவேளையில்,குளித்துவிட்டு  தெய்வபடங்களுக்கு விளக்கேற்றி வைத்து,சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள்,தரித்திரம் அகலும்.லெஷ்மி கடாட்சம் .

Aucun texte alternatif disponible.
 ஒவ்வொரு நாளும் சாம்பிராணி தூபம் காட்டுவதால் பலன் 

ஞாயிறு அன்று சாம்பிராணி  தூபம் காட்டினால் - ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்.
திங்கள் அன்று சாம்பிராணி  தூபம் காட்டினால் – தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.

செவ்வாய் அன்று சாம்பிராணி  தூபம் காட்டினால் – எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள் ,கடன் நிவர்த்தி போன்ற பல நல்ல பலன்கள் கிட்டும்.
புதன் அன்று சாம்பிராணி  தூபம் காட்டினால் – நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல் போன்ற பல நல்ல பலன்கள் கிட்டும்.
வியாழன் அன்று சாம்பிராணி  தூபம் காட்டினால் – சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், அத்துடன் சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும் கிட்டும்.
வெள்ளி அன்று சாம்பிராணி  தூபம் காட்டினால் - லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி போன்ற பல நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும்.
சனி அன்று சாம்பிராணி  தூபம் காட்டினால் – சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் போன்றோரின் அருள் கிட்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக