அன்பார்ந்த என் அன்பு தோழிகளுக்கு வணக்கங்கள் பல.என் தோழி உமா இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதால் என்ன நன்மை என்று கேட்டதால்,அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி எனக்கு என்ன தெரியுமோ அதைத்தான் இந்த பதிவில் போட்டுள்ளேன்.இது ஆன்மீகத்தில் இருக்கும் சக தோழிகளுக்கும் பயன்னுள்ளதாக இருக்கும் என்பது என் எண்ணம்.
ஐஸ்வர்யம் தரும் இலுப்பை எண்ணெய்
இந்து ஆலயங்களில் தலவிருட்சம் வைத்து பேணும் மரபு உண்டு.அந்த வகையில் திருஇரும்பை மாகாளம்,திருப்பழமணிப்படிக்கரை,திருக்கொடி மாடச் செங்குன்னூர் ,திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் கொத்து கொத்தான நீண்ட இலைகளையும் கொத்தான வெண்நிற மலர்களையும் முட்டை வடிவ சதைக்கனியையும் நொறுங்கக் கூடிய உரையினால் மூடப் பெற்ற விதையினையும் கொண்டது இலுப்பை மரம்.இதன் சாறு பால் தன்மை கொண்டது.இந்த
இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்யெண்ணை எனப்படுகிறது. இலுப்பை எண்ணெய் சகல தேவர்களுக்கும்,சகல தெய்வங்களுக்கும்,சிவனுக்கும் பிரியமானது.ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது.இந்த எண்ணெயை விளக்கில் ஊற்றி இறைவனை வழிபட காரியங்கள் வெற்றி பெரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
ஐஸ்வர்யம் பெருகும்
பிரம்ம மூகூர்த்த வேளையாக அதிகாலை,மாலை 4.30மணி முதல் 6மணி வரை நேரம் குறிப்பிடப்படுகிறது.அந்நேரமே இறைவன்,இறைவி நம் வீட்டிற்கு வரும் அற்புதமான நேரமாகும்.அவ்வேளைகளில் பஞ்சமுக குத்துவிளக்கு ஏற்றி இலுப்பையெண்ணை ஊற்றி
வெள்ளை திரியிட்டு வணங்கலாம்.இருவேளையும் ஏற்றினால் நல்லது.இந்த காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதால் அவரவருக்கு (காலை அல்லது மாலை )எந்தவேளை முடியுமோ அந்த வேலையில் ஏற்றுவது நல்லது.வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் அஷ்ட லக்ஷ்மிகளின் அருளும்,ஐஸ்வரியமும் குடும்பத்தினருக்கு கிட்டும்.இதேபோல் மஞ்சள் திரியிட்டு தீபம் ஏற்றிவர குபேர அருளும் திருமண பாக்கியமும்,புத்திர பாக்கியமும் உண்டாகும்.
வெள்ளை பஞ்சு திரியில் மஞ்சளை தோய்த்து காயவைத்து மஞ்சள் திரி போடலாம்.சிவப்பு திரியால் தீபமேற்றினால் வறுமை,கடன்,பல்வேறு தோஷங்கள் நீங்கும்.
எந்த எண்ணெய் என்ன பலன் கொடுக்கும் என இனி பார்க்கலாம்.
பசுவின் நெய்விட்டு தீபம் ஏற்றினால் ஏழ்மை,தீயசக்தியை நீக்கி ,நேர்மறை அதிர்வுகள்,ஆரோக்கியம்,செல்வம்,அதிஷ்டம் மற்றும் வளமான வாழ்க்கை உண்டாகும்.
நல்லெண்ணெய் சகல தோஷங்கள்,நாள்பட்ட பிரச்சனை,ஏழரை சனியின் பாதிப்பு போன்றவற்றை நீக்கும்.
வேப்பண்ணெய் குலதெய்வத்தின் ஆசீர்வாதமம்,வீட்டில் செல்வ வளங்களும் அதிகரிக்கும்.
விளக்கெண்ணெயில் குடும்ப சந்தோஷம்,வளர்ச்சி,ஆன்மீக முன்னேற்றம்,உறவுகள்,புகழ் மற்றும் செல்வ வளங்கள் அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெய் விநாயகரின் அருளையும்,குலதெய்வத்தின் அருளையும் பெற்று மகிழ்வுடன் இருக்க வழிவகுக்கும். குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய் ,நெய்,நல்லெண்ணெய் ஊற்றி வழிபாடு செய்வது உகந்தது.
இலுப்பை எண்ணெயில் தீபம் போடுவதால் சிவபெருமானின் அருள் கிடைப்பதுடன் கடன் தொல்லை,உடல்நல கோளாறு நீங்கும்.
பஞ்சதீப எண்ணெய்
அகல், திரி, எண்ணெய், சுடர் இந்த நான்கும் சேர்ந்ததுதான் விளக்கு. இந்த நான்கும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் இணைந்ததுதான் வாழ்க்கை என்று குறிக்கின்றது. வீட்டில் தீபம் ஏற்றினால், மகாலட்சுமி அருள் கிடைக்கும், தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. நமது உடல் மற்றும் ஆன்மா இரண்டும் பஞ்சபூத சக்தியால்தான் ஆட்கொள்ளப்படுகின்றன. நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று இவையனைத்தையும் சமநிலையில் வைத்திருந்தாலே, தொல்லைகள் நீங்கி ஆனந்தம் அடையலாம். பஞ்சபூத சக்தியை சமநிலைப்படுத்த பஞ்சதீப எண்ணெயைப் பயன்படுத்துவதே போதுமானதாகும்.
பஞ்சதீப எண்ணெய் என்றால் என்ன?
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்ததுதான் பஞ்சதீப எண்ணெய். பஞ்சமி திதியன்று, பஞ்சதீப எண்ணெய் ஊற்றி, ஐந்து முக விளக்கேற்றி வழிபட்டால், இறையருள் பரிப்பூரணமாகக் கிடைக்கும். நான்கு முக தீபம் ஏற்றி வழிபட்டால், பசு பூமி போன்ற செல்வங்களைத் தரும். மூன்று முக தீபம் ஏற்றி வழிபட்டால், புத்திர சுகம் கிடைக்கும். இரண்டு முக தீபம் ஏற்ற குடும்ப ஒற்றுமை பெருகும் என்றும், ஒரு முக தீபம் ஏற்றுவதால், மத்திமமான பலன்கள் கிடைக்கும் என்பார்கள். இப்படி அவரவரின் தேவைகளுக்கேற்ப விளக்கை ஏற்றலாம்.
அமாவாசை, பெளர்ணமி அன்றும் செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களிலும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இந்த எண்ணெயில் விளக்கேற்றுவது சிறந்த பலனைத் தரும்.
கடைகளில் கிடைக்கும் பஞ்சதீப எண்ணெய் சுத்தமானதா? என்று பலருக்கும் சந்தேகம் வரலாம். அத்தகையவர்கள், இந்த ஐந்து எண்ணெய்களின் சமமான அளவை எடுத்துக்கொண்டு உதாரணமாக எல்லா எண்ணெய்களிலும் 100 மில்லி என்ற அளவில் எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்கி, தூய்மையான ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
ஆயிரம் பசுநெய் விளக்குகளை ஏற்றி வைப்பதன் பலன் ஒரு இலுப்பெண்ணை விளக்கு ஏற்றி வைப்பதற்கு சமம்.
எல்லா வளங்களும் பெற இறைவனை பிராத்திப்போம்.
வாழ்க வளமுடன்
உங்கள் தோழி
ஈஸ்வரி சரவணன்
Veetuku elupai ennai deepam etralama
பதிலளிநீக்குparigaaram seyya soonnal mattume etraveendum
நீக்குparigaaram seyya soonnal mattume etraveendum
நீக்குUsally we light the deepam daily in home
பதிலளிநீக்கு