செவ்வாய், 13 செப்டம்பர், 2016

இறைவனை அடைய எளிமையான பக்தி

இறைவனை அடைய எளிமையான பக்தி 

கடவுள் மிக எளிமையானவர்.பக்தியாலேயே அவரை அடைய முடியும்.பக்தியே முக்திக்கு வழி.தவம்,தியானம்,பூசை போன்றவற்றை விட மனதால் பகவானை துதி செய்வது சுலபம். மனதுக்குள்ளேயே இறைவனை வழிபடுவது இன்னும் விசேஷமானது.தூப,தீபம் எதுவும் இல்லாமல் நம் மனதில் மானசீகமாக இறைவனை இருத்தி பாவனையுடன் செய்யும் பூஜை எல்லா பூஜைகளையும் விட சிறந்தது.

பூஜை எவ்வாறு இருக்க வேண்டும்?

ஆடம்பரமான பூஜையை எந்தவொரு தெய்வமும் விரும்புவது இல்லை.பகவானுக்கு ஒரு கூடை நிறைய பூவை போட்டு ஆயிரம் நாமாவால் பூஜை செய்ய வேண்டியதில்லை.ஒரே ஒரு மலரை போட்டு,ஒரு நாமாவை சொன்னாலும் அவன் அதை ஏற்றக் கொள்வான். 

வள்ளலார் எளிய முறையில் பூஜைகள் செய்தார்.அகல் ஜோதியையே கடவுளாக வழிபட்டார்.
தெய்வங்களை ஜோதி வடிவமாக பார்க்கலாம்.கோவிலுக்கு சென்றுதான் வழிபாடு செய்ய வேண்டும் என்பது இல்லை.கோவிலுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்வது நல்லது.அங்கே நேர்மறை சக்தி இருக்கும்.போக வாய்ப்பு இல்லையென்றாலும் நம் வீட்டு பூஜையறையை தினமும் சுத்தப்படுத்தி,ஒரு நெய் அகல் தீபம் அல்லது காமாட்சி விளக்கு,குத்துவிளக்கு ஏற்றி அதில் நம் இஷ்ட தெய்வத்தை அமரச் செய்து ஒரு சில நிமிடங்கள் இறைவனை நினைத்து வணங்க வேண்டும்.அந்நேரத்தில் நம் கவனம் முழுவதும் இறைவன்பால் இருக்க வேண்டும்.


எந்த செயலை செய்வது என்றாலும் அதை ஈடுபாடுடன் செய்தால்தான் அதை சிறப்புற செய்ய முடியும்.நம் தெய்வங்கள்  நல்ல விஷயங்களை நமக்கு உணர்த்தி கொண்டுதான் இருக்கின்றன.அதை நாம்தான் புரிந்து கொள்வது இல்லை. 

யார் எளியமுறையில் பூஜை செய்து வழிபட்டவர்கள்? 

குக்கிராமத்தில் வள்ளலார் ஓட்டு வீட்டில் தவம் செய்து முக்தி பெற்றார்.

 சண்டிகேஸ்வரர் சோழ நாட்டில் செய்ஞ்ஞலூர் எனும் திருத்தலம் உள்ளது.அங்கே சண்டிகேஸ்வர் சிறு வயதில் பசுக்களை மேய்த்து,வெட்ட வெளியில் மண்ணால் லிங்கம் செய்து அதன்மீது,பால் கறக்க விட்டு சிவபெருமானின் அருளால் முக்தி பெற்றார்.
பூசலார் நாயனார் மனதினாலேயே கோவிலை நிர்ணயம் செய்து,சிவபெருமானை வழிபட்டு சிவதரிசனம் பெற்றார்.இப்படி பல சரித்திரங்கள் உள்ளன.

மனிதனுக்கு மட்டுமே பக்தி,பூஜை,வழிபாடு உள்ளது.மற்ற ஜீவராசிகளுக்கு எதுவும் இல்லை.

மனிதன் சுலபமான முறையான தியானத்தின்மூலமே பக்தி செய்து பகவானை அடைய முடியும்.மனதை ஒருநிலைப்படுத்தி கேட்கப்படும் நியாயமான கோரிக்கைகளுக்கு இறைவன் செவி சாய்த்து,எல்லையில்லா இன்பத்தை நமக்கு தருவார்.எளிமையான பக்தி ஆழ்ந்த அமைதிக்கு வழிகாட்டும்.

நாமும் எளிமையான முறையில்,நம் சக்திக்கு என்ன முடியுமோ அதை இறைவனுக்கு படைத்து, அவர் திருப்பாதங்களை பற்றி வழிபடுவோம்.

நன்றி வணக்கம் 












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக