கருமாரி அம்மன்
கருமாரி என்பதில் நான்கு தெய்வங்கள் அடங்கியுள்ளன.
க --- கலைமகள்
ரு --ருத்ரி
மா --திருமகள்
ரீ --ரீங்காரி --ரீங்கார பீடத்தில் உறையும் சக்தி
கலைமகளும்,மலைமகளும்,திருமகளும் ஒரு சக்தியாய் ஒன்றுசேர்ந்து ரீங்காரமாகிய ஓங்காரத்திலே உறையும் ஆதிபராசக்தியே அன்னை கருமாரி.
இந்த பிறவியில் ஒரு தாய்க்கு குழந்தையாக பிறக்கிறோம்.அடுத்த பிறவி எங்கே,எங்கு யாருடைய வயிற்றில் பிறப்போம்? என்பது யாருக்கும் தெரியாது.நாம் எடுக்கும் அத்தனை பிறவிக்கும் ஒரே தாய் நம் அன்னை ஆதிபராசக்தி.
ஒரு குழந்தை காணும் முதல் முகம், தாயின் முகம்தான்.அந்ததாய் தன் குழந்தையிடம் அளப்பரிய அன்பு கொண்டிருப்பாள் .எனவே குழந்தைகள், முதலில் அன்னையைத்தான் நாடுவர்.தனக்கு தேவையானவற்றை அன்னையிடம் கூறி,அதன்மூலம் தந்தையிடம் பெறுவதே இயல்பு.அதேபோல், இறைவனின் அருளை நாடுவோர் முதலில் இறைவியை நாடுவர்.அம்மை மனம் கனிந்தால் அப்பனின் அருள் எளிதில் கிடைக்கும்.
அன்னை எண்ணிலா வடிவங்களுடனும், எண்ணிலாப் பெயர்களில் எண்ணிலா திருக்கோவில்களில் ஆட்சி செலுத்தி கொண்டிருக்கிறாள்.ஏழை, பணக்காரர் முதல் படித்தவன்,பாமரன் வரை அவள் அருளைப் பெற ஓடோடி வருகின்றன. குறைகளைத் தீர்க்கும் கற்பகவல்லியாகவும்,நிறைவாழ்வு நல்கும் நித்தியநாயகியாகவும் கருமாரி திகழ்கிறாள்.
சென்னை பூந்தமல்லி அருகே மதுரவாயல் அருகே திருவேற்காடு உள்ளது.வேலமரங்கள் சூழப்பட்டிருந்ததால் வேற்காடு எனப் பெயர் பெற்றது.இங்கு அன்னை பராசக்தியே கருமாரி அம்மனாக அருள்புரிகிறாள்.இத்தலத்தில் மிகப் பெரிய புற்று கோயில் உள்ளது.
திருமண தடை ,திருமண தோஷம்,ராகு-கேது தோஷம்,கால சர்ப்பதோஷம் போன்ற தோஷத்திலிருந்து விடுபட இத்திருத்தலம் அமைகிறது.

திருவேற்காடு கருமாரியம்மன்

கேட்ட வரம் அருளும் திருவேற்காடு கருமாரி அம்மன் துதி.
உருமாறி நாகமாய் வேற்காட்டில் ஒளிர்கின்ற
கருமாரி அன்னையின் காலடி வணங்கினால்
பெருமாரி பொழிந்திடுவாள் பேராற்றல் தந்திடுவாள்
அருள்மாரி வழங்கிடுவாள் அகிலத்தை காத்திடுவாள்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக