ஓணம் பண்டிகை
என் ஆன்மீக தோழிகளுக்கு வணக்கம்.அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.
திருவோணம் என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகை கேரள மக்களின் மிக முக்கிய பண்டிகையாகும்.ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் தொடர்ந்து 10நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.வசந்த காலத்தில் வரும் அறுவடை கால பாரம்பரிய மிக்க பண்டிகையாகவும் இது கொண்டாடப்படுகிறது.
புராணத்தில் ஓணம் பண்டிகை
மகாபலி பிரகலாதனின் பேரன்.பூர்வ ஜென்மத்தில் எலியாக ஒரு சிவன் கோவிலில் ஜெனித்திருந்தான்.அந்த எலி தினமும் கர்ப்ப கிரஹத்தில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் திரியை,விளக்கு அணையாதவாறு தூண்டிக் கொண்டே இருக்கும்.எலியின் புத்தி கூர்மையால் சிந்தை குளிர்ந்த சர்வேஸ்வரன்,தமக்குத் திருப்பணி புரிந்த எலியை மறுபிறவியில் பலியாக பிறக்கப் பேரருள் புரிந்தார்.
கேரள நாட்டை மகாபலி சக்ரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.அவனுடைய ஆட்சியில் மக்கள் அனைவரும் எவ்வித துன்பமும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். அவன் நாடு செல்வச்செழிப்போடு எதற்கும் குறைவில்லாததாக இருந்தது.அவனுடைய வெற்றிகளையும்,மக்களிடம் அவனுக்கிருந்த செல்வாக்கையும் கண்ட தேவர்கள் உள்ளம் கொதித்தனர்.தேவர்களிடம் சண்டை மகாபலிக்கு ,"தன்னால் எதையும் செய்யமுடியும்"என்ற செருக்கு அதிகமானது. தொடர்ந்து வளர விட்டால் தங்களால் அவனை அழிக்க முடியாமல் போய்விடும் என்று தேவர்கள் கருதினர்.ஆதலால் திருமாலிடம் சென்று முறையிட்டனர்.
பொதுவாக, ஒருவனுக்கு செருக்கு குணம் இருந்தால் அது அவனை அழித்து விடும் என்பதற்கு சான்றாக மகாபலி அரசனின் கதை உள்ளது.எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கக்கூடாது.அடக்கத்துடன் இருந்தால் கடவுளின் அன்புக்கு உரியவர்கள் ஆகலாம்.
உடனே,திருமால் அதிதி என்பவருக்கு மகனாக வாமன அவதாரம் எடுத்தார்
.மகாபலி அசுவமேத யாகத்தை நடத்தினான்.அந்த யாகத்திற்கு சென்ற ஸ்ரீமந் நாராயணனின் அவதார புருஷனான வாமனன்,தனக்கு மூன்றடி மண் வேண்டும் என்று கேட்டார்.அந்த யாகத்தில் யார் எதை கேட்டாலும் தருவதாக வாக்களித்தான். அச்சமயத்தை தனக்கு சாதகமாக்கி கொண்ட வாமனன் திரிவிக்கிரமனாக வளர்த்தார்.ஒரு அடியை பூமியிலும்,ஒரு அடியை வானத்திலும் அளந்தார்.மூன்றாவது அடியை எங்கே வைப்பது?என்று திருமால் கேட்க ,தன்னுடைய தலையையே கொடுத்தான் மகாபலி சக்ரவர்த்தி.வாமனர் தலையில் வைத்ததும் அரசன் பாதாளலோகத்திற்குச் சென்று விட்டான்.
பாதாளத்திற்குள் வீழ்த்தப்பட்ட மகாபலி,திருமாலிடம் தான் இறந்த நாளை மக்கள் ஓணம் என்ற பண்டிகையாக கொண்டாட வேண்டும் என்றும்,ஒவ்வொரு வருடமும் அந்நாளில் பூலோகத்தில் வந்து தன்னுடைய மக்களை சந்திக்க வேண்டும்,மக்கள் குதூகலமாக இருப்பதைக் காண வேண்டும் என்றும் வரம் கேட்டான்.திருமாலும் அதற்கு சம்மதித்தார்.

மகாபலியை வரவேற்கும் பூக்கோலம்
மகாபலி சக்கரவர்த்தியின் நினைவு தினமாகவும்,இந்நாளில் அவர் தான் ஆண்ட நாட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது.இதனால்தான் அவரை வரவேற்கும் விதமாக கேரளாவில் ஒவ்வொரு வீட்டிலும் பூக்கோலம் போடப்படுகிறது.தமிழ்நாட்டில் மலையாளிகள் தங்கள் வீடுகளில் இந்த கோலத்தை போடுகிறார்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு முற்றத்தை பகலில் சாணத்தால் மெழுகி,பலவகைப் பூக்களைக் கொண்டு அழகாக கோலமிடுவார்கள்.கோலத்தின் நடுவில் குத்துவிளக்கு ஏற்றப்படும்.அந்த விளக்கை சுற்றி பலவகை காய்கனிகளை அழகாக அடுக்கி வைப்பார்கள்.இந்த கோலம் "அத்தப்பூ கோலம் "என்று அழைக்கப்படுகிறது.
பூக்களின் மேல் திருகாற்கரை அட்டனின் உருவத்தை வைத்து,அதன்முன்பு ஒரு வாழை இலையில் தேங்காய் உடைத்து வைக்க வேண்டும்.தேங்காய் தண்ணீருடன் தும்பைப் பூக்களையும் இட்டு,அதன் அருகில் பழத்தை வைப்பார்கள்.பின்பு தும்பைப் பூவால் அர்ச்சனை செய்வார்கள்.மாலையில் இந்த கோலத்தை சுற்றி பெண்கள் தங்கள் பாரம்பரிய உடையுடன் "திருவாதிரைக் களி"[களி--நடனம்]என்ற நடனத்தை ஆடுவார்கள்.மேலும் இந்த 10நாட்களிலும்,கைக்கொட்டிக் களி,மோகினி ஆட்டம்,கோலாட்டம்,ஓணக் களி போன்ற நடனங்களும் ஆடப்படும்.இந்த நடனங்கள் பார்ப்பவர் உள்ளத்தைக் கவரும்.
மக்களுக்கு மனநிறைவையும்,மகிழ்ச்சியையும் தரும் இந்த தினத்தில் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பலவகையான காய்கனிகளை, உணவு வகைகளை விருந்தினர்களுக்கு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
மக்களுக்கு மனநிறைவையும்,மகிழ்ச்சியையும் தரும் இந்த தினத்தில் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பலவகையான காய்கனிகளை, உணவு வகைகளை விருந்தினர்களுக்கு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
ஓணப்பண்டிகைகளில் ஓணப்பந்து,படகுப் போட்டி போன்றவை வெகு விமரிசனமாக நடத்தப்படுகின்றது.
அன்றைய தினத்தில் திருமால் உறையும் கோயில்களில் பழவகையான பூஜைகளும் நடத்தப்படுகின்றன.
ஓணம் பண்டிகையை சந்தோசமாக எல்லோரும் கொண்டாடுங்கள்.நீங்களும் சந்தோஷமாக இருங்கள்.மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக