சனி, 24 செப்டம்பர், 2016

நவராத்திரி கொலு படி தத்துவம்

நவராத்திரி கொலு படி தத்துவம் 


நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும்.கொலு  என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்."ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலன்களையும் தருவேன்" என்று  அம்பிகையே கூறியிருக்கின்றாள்.நவராத்திரியில் இச்சா சக்தி,ஞான  சக்தி,கிரியா சக்தி என மூன்று சக்திகளின் அருளை பெற நவராத்திரி வழி செய்கிறது. கொலுமேடை 9படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

படிகள் சொல்லும் 3குணங்கள் 

கீழே உள்ள 3படிகளில் அரிசி,பருப்பு,பாத்திரம் தாமச குணத்தை குறிக்கும்.
4,5,6படிகள்  அரசர்,ராணி,மந்திரி ரஜோ குணத்தை காட்டுகிறது.
7,8,9படிகள் தெய்வ உருவங்கள் சத்துவ குணத்தை அடையும் வழியை காட்டுகிறது. 


கொலுப்படி எந்தெந்த பொம்மைகளை எந்த படியில் வைக்கலாம் ?
கீழேயிருந்து மேலாக ஓரறிவில் தொடங்கி உயர்நிலையுள்ள  இறைவன் பொம்மைகள்  வைக்கப்படுகின்றன.

முதலாம் படி ---ஓரறிவு உயிர்களான புல்,செடி,கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் 
இரண்டாம் படி---ஈரறிவு கொண்ட நத்தை,சங்கு போன்ற பொம்மைகள்.
மூன்றாம் படி ----மூன்றறிவு உயிர்களான கரையான்,எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
நான்காம் படி----நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள் .
ஐந்தாம் படி ----ஐந்தறிவு உள்ள மிருகங்கள்,பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்.
ஆறாம் படி----ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும்,சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். 
ஏழாம் படி ----மனித நிலையிலிருந்து உயர் நிலைகளை அடைந்த சித்தர்கள்,ரிஷிகள்,மகரிஷிகள் (ரமணர்,வள்ளலார்)போன்றோரின் பொம்மைகள்.
எட்டாம் படி ---தேவர்கள்,அட்டதிக்பாலர்கள்,நவக்கிரக ஆதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
ஒன்பதாம் படி ----பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதி சக்தி வைக்க வேண்டும்.

ஒன்பதாம் படியில் முதலில் விக்னங்களை தீர்த்து வைக்கும் விநாயக பொம்மையை வைத்தப்பிறகு மற்ற மொம்மைகளை வைக்க வேண்டும் என ஆதிபராசக்தி சொல்லி இருப்பதாக 'தேவி பாகவதம்' சொல்கிறது.அடுத்ததாக ,மூம்மூர்த்திகள்,3 தேவியர்களையும் வைக்கலாம்.லட்சுமிக்கும்,சரஸ்வதிக்கும் இடையே சக்திதேவியை வைக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக தன்  ஆன்மீக சிந்தனைகளை வளர்த்து,இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவது கொலு படியாகும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக