காஞ்சி காமாட்சி
அகிலம் முழுவதும் அருளாட்சி செய்யும் நாயகி ,கருணை பொங்கும் திருவிழி பார்வையினால்,தன்னை நாடி வந்து துதிக்கும் அடியார் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள் அன்னை காமாட்சி .
காம என்றால் அன்பு,கருணை என்றும்,அட்ச என்றால் கண் என்றும் பொருள்படும்.எனவே காமாட்சி கருணையும்,அன்பும் நிறைந்த கண்களையுடைவள் என்பது பொருள்.அன்னை காமாட்சி கலைமகளையும்,திருமகளையும்[சரஸ்வதி,லக்ஷ்மி]தன் இரு கண்களாக கொண்டவள்.அவள் உட்காந்திருக்கும் வடிவமே பத்மாசன வடிவம்.தேவி இருகால்களையும் உட்கார்ந்து இருக்கும் வடிவமே சிறப்பானது..நாம் கேட்கும் நியாயமான கோரிக்கைகளை உடனே கொடுக்கக்கூடியவள்
அம்பாள்.
அன்னை காமாட்சி எழுந்தருளிய திருத்தலம் காஞ்சிபுரம்.இது பெரும் சிறப்பு வாய்ந்த தலமாகும்.51சக்தி பீடங்களுள் "காமகோடி பீடம்"என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகுக்கிறது. தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடம் இது.ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை காஞ்சிபுரம் காமாட்சி கோவிலில் பிரதிஷ்டை செய்தார். இத்தகைய பெருமைகளை தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்ச்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல் மிக்க வரலாறாக விரிகின்றது.
முன்னொரு காலத்தில், பந்தகாரசன் என்ற அசுரன் வாழ்ந்து வந்தான்.அவன் கடும் தவமிருந்து பிரம்ம தேவனிடம் அரிய பல வரங்களை பெற்றிருந்தான்.அந்த வரத்தினால் கிடைத்த சக்தியாலும்,ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றி தேவர்களுக்கும்,முனிவர்களுக்கும் துன்பம் கொடுத்து வந்தான்.பந்தகாசுரன் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வந்ததால்,அதிலிருந்து விடுபட வேண்டி தங்கள் துன்பங்களை சிவபெருமானிடம் முறையிட்டனர்.
பிரம்மாவின் வரங்களை பெற்ற பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான்,"பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்கு உள்ளது"என்று கூறி,அவர்களை பராசக்தியிடம் அனுப்பி வைத்தார்.அச்சமயம்,அன்னை பராசக்தி,காமகோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில்,கிளி வடிவம் கொண்டு,ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானை குறித்து தவம் செய்து கொண்டிருத்தார்.தேவர்களும்,முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்திற்கு வந்து,அவளை வழிபட்டு தங்கள் துயரங்களை கூறினார்கள்.அவர்களின் துன்பத்தை கண்டு மனம் இரங்கிய அன்னை,பந்தகாசுரனைக் கொன்று,அவர்களின் துயரத்தை தீர்ப்பதாக உறுதியளித்தாள்.அத்தருணம்,பந்தகாசுரனின் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து,அவனை கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை,பதினெட்டு கரங்களில்,பதினெட்டு வகையான ஆயுதங்கள் தாங்கிய பைரவ ரூபிணியாக உக்கிர உருவம் கொண்டாள்.
பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும்,மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து,அவனது தலை அறுத்து,ஒரு கையில் தூக்கி பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள் .உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையை கண்டா தேவர்களும்,முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி விழுந்தனர்.அவர்களின் பயத்தை போக்க விரும்பிய அன்னை,உடனே,அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில் புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்கு காட்சியளித்தாள்.
அத்தரிசனம் கண்டு,மகிழிச்சி பெருக்கில் திளைத்த தேவர்களும்,முனிவர்களும் அவளை பலவாறு போற்றி புகழ்ந்து மகிழ்ந்தனர்.அப்போது அன்னை அவர்களை பார்த்து,அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டுமாறும்,பந்தகாசுரனை அந்த பள்ளத்தில் இட்டு, புதைத்த இடத்தில் வெற்றித்தூண் ஒன்றை நிறுவுமாறும் கூறினாள்.
அன்னையின் கட்டளைப்படி, தேவர்கள் அந்த இடத்தில் பள்ளம் தோண்டியபோது,'மல்லகன்' என்ற கொடிய அரக்கன் அங்கே மறைந்திருப்பதை கண்டார்கள்.அந்த அரக்கனை அளித்து தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்கள்.தேவர்கள் கோரிக்கைகளை ஏற்று,மகாவிஷ்ணு மல்லகனுடன் போரிட்டார்.ஆனால்,மல்லகனின் உடலிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு துளி ரத்தமும் ஒரு அரக்கனாக உருமாறி போர் புரிந்தது.இவ்வாறு அங்கே மாபெரும் அரக்கர் படையொன்று உருவாகி, மஹாவிஷ்ணுவிடம் கடுமையாக போர் புரிந்தது. இதை சமாளிக்க முடியாத மகாவிஷ்ணு சிவபொருமானின் உதவியை நாடினார்.
சிவபெருமான் போர்க்கோலத்தில் ருத்ரமூர்த்தியாக அங்கே வந்தார்.அவர் இரண்டு பூதங்களை உருவாக்கி,மல்லகனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத்துளிகள் எல்லாவற்றையும் பூமியில் விழாதபடி குடிக்கும்படி கட்டளையிட்டார்.பூதங்கள் அப்படியே செய்தனர்.
இவ்வாறு மேலும் அரக்கர்கள் தோன்றாமல் தடுத்தும்,மகா விஷ்ணு தம் சக்கராயுதத்தால் அந்த அரக்கனை அழித்தார்.அதன்பின்,அன்னை கட்டளைப்படி,பந்தகாசுரன் புதைத்த இடத்திற்கு அருகில்,24தூண்களை நிறுவி,காயத்ரி மண்டபம் அமைத்து,அந்த மண்டபத்தினுள்ளே,அழகிய பீடம் அமைத்து,அன்னையின் உருவம் ஒன்றைச் செய்து வைத்து வணங்கினார்கள்.பின்னர் கதவை மூடிவிட்டு வெளியில் இருந்து அன்னையை துதித்து கொண்டிருந்தார்கள்.
மறுநாள்,அதிகாலை சூரிய உதய வேளையில்,முகுந்த் பயபகதியுடன் அந்த கதவை திறந்தார்கள்.என்ன ஆச்சரியம்?அங்கே அவர்கள் கண்ட அற்புதமான காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்து,மகிழ்ந்து நின்றார்கள்.அவர்கள் நிறுவியசிலை உருவத்திற்கு பதிலாக,அன்னை காமாட்சி தேவி அழகிய திருக்கோலத்தில் காட்சியளித்தாள்.
அந்த நாள்,ஸ்வயம்பு மனுவந்திரத்தில்,கிருத யுகத்தில்,ஸ்ரீமுக வருஷம் பங்குனிமாதம் கிருஷ்ணபட்சத்தில்,பிரதமை திதியும்,பூரநட்சத்திரமும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை ஆகும்.எல்லையில்லா கருணை வடிவம் கொண்ட ராஜராஜேஸ்வரியாக காமாட்சி காட்சியளித்தாள்.அந்த காயத்ரி மண்டபத்தின் நடுவில் அன்னை தென்கிழக்காக,4கரங்களிலும் பாசம்,அங்குசம்,மலர் அம்பு,கரும்புவில் முதலிய ஆயுதங்களை ஏந்தி ,பத்மாசன கோலத்தில் காட்சியளிக்கிறாள்.
அன்னை அழகையும்,கருணையையும் கண்டு பக்தி பரசவமாகி,அளவில்லா மகிழ்ச்சியில் இருந்த
தேவர்களும்,முனிவர்களாலும் அன்னையை நோக்கி,அங்கேயே அமர்ந்து,உலகம் வாழ அருள்புரியுமாறு வேண்டிக் கொண்டனர்.அவர்களின் பிராத்தனைக்கிணங்கி,காமாட்சி அன்னையும் 24 தூண்கள் கொண்ட அந்த காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அழகிய பீடத்தில் அமர்ந்து அருளாசி செய்கின்றாள்.
அன்னை காமாட்சி இத்திருக்கோவில் ஸ்தூலம்,சூட்சமம்,காரணம் எனும் மூவகை வடிவிலும் அமர்ந்து அருள் புரிகிறாள்.
ஸ்தூல வடிவம் ---காமகோடி காமாட்சி
சக்தியாக இருக்கும் அன்னை காமாட்சியை வணங்கி ,எல்லா வளங்களும் பெறுவோமாக !

சூட்சம வடிவம்---அஞ்சன காமாட்சி
காரண வடிவம்----காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம்
காமாட்சி அன்னையின் வேறு பெயர்கள்
மகாதேவி,திரிபுர சுந்தரி,ராஜராஜேஸ்வரி,காமேஸ்வரி,லலிதா,ஸ்ரீ சக்கர நாயகி
காஞ்சி திருத்தலத்தில் எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அன்னையே மூலவர் அம்மாளாக விளங்குகின்றாள்.இந்த அம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்குவது விசேஷம்.சகல நலன்களும் உண்டாகும்.பிரிந்திருந்த கணவன்,மனைவியை ஒன்று சேர்ப்பது காஞ்சி காமாட்சியின் சிறப்பு.அம்மன் முன் ஸ்ரீசக்கரம் பிரதோஷ்டம் செய்திருக்கிறார் ஆதிசங்கரர்.ஸ்ரீ என்றால் லக்ஷ்மி என்று பொருள்.இதை வணங்குவதால் நமக்கு கொடுக்கவேண்டிய பணம் நம்மை வந்து சேரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக