புதன், 28 செப்டம்பர், 2016

நவராத்திரியில் அம்பாள் பிரசாதங்கள்

நவராத்திரியில் அம்பாள் பிரசாதங்கள்


  நவராத்திரியில் அம்பாளுக்கு 9நாட்களும்  நைவேத்யம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

முதல் நாள் காலை வெண்பொங்கல் படைப்பதால் வறுமை நீங்கி வளம் பெருகும்.ஆயுள் விருத்தி உண்டாகும்.மாலை அந்தந்த கிழமைக்குரிய நவதானியங்கள் சுண்டல் செய்து,நம் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு   வெற்றிலை,பாக்கு தாம்பூலம் கொடுத்தல் வேண்டும்.சனிக்கிழமை இந்த வருடம் முதல்நாளாக இருப்பதால் சனி பகவானுக்கு உரிய கருப்பு கொண்டைக் கடலையை அம்பாளுக்கு பிரசாதமாக வைக்கலாம்.

2ம் நாள் காலை  பிரசாதம் புளியோதரை . ஞாயிற்றுக் கிழமை என்பதால் சூரியபகவானுக்கு உரிய கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு பொருளை பிரசாதமாக படைக்கலாம்.

3ம் நாள் காலை சர்க்கரை பொங்கலும் ,மாலை  சந்திர பகவானுக்கு உரிய அரிசி கலந்த தேன்குழல்,தட்டை முதலியவற்றை தாம்பூலத்துடன் கொடுக்க வேண்டும்.தானிய விருத்தியும்,வாழ்வும் சிறக்கும்.

4ம் நாள் காலை பலவிதக் காய்களும்,பருப்பும் கலந்த கதம்ப சாதம் செய்து வழிபடுவதால் பகை விலகும்.எதிர்ப்புகள் அகலும்.இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும்.மாலை செய்வாய் கிழமை என்பதால் அங்காரகனுக்கு,துர்க்கைக்கு உகந்த சிவப்பு காராமணி சுண்டல் செய்து வழிபட வேண்டும்.

5ம் நாள் காலையில் தயிர் சாதம் .இதன்மூலம் விரும்பிய செல்வம் பெறலாம்.மாலையில் புதன் பகவானுக்கு உரிய நைவேத்யம் பாசி பருப்பு சுண்டல் ஆகும்.

6ம்  நாள் தேங்காய் சாதம்.கவலைகள் நீங்கி தனம் பெருகும்.எதிர்ப்புகள் விலகும்.மாலை வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள். கொண்டைக் கடலை சுண்டல்.

7ம் நாள் எலுமிச்சை சாதம்.கல்வி வளர்ச்சி,ஞான விருத்தி உண்டாகும்.மாலை வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு அரிசியுடன் வெல்லம்,தேங்காய் சேர்த்து அரிசி புட்டு செய்து அம்பாளை வழிபடலாம்.

8ம் நாள் காலையில் பாசி பருப்பு,கடலை பருப்பு சேர்ந்த பருப்பு பாயாசம்,வடையுடன் படைத்தால் கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம்.மாலை நவதானிய சுண்டல் .

9ம் நாள் காலை சர்க்கரை பொங்கல் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசாலை நிவேதனம் செய்யலாம்.குழந்தை வரம் பெறலாம்.மாலை கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்  செய்து வழிபட வேண்டும்.    
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக