செவ்வாய், 6 செப்டம்பர், 2016

சரஸ்வதிக்கு கொண்டைக்கடலையும் ,தெட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும்

சரஸ்வதிக்கு கொண்டைக்கடலையும் ,தெட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும் போடுவது ஏன்?

சரஸ்வதி,தெட்சிணா மூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை,ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர்.மனத்தூய்மை,சாந்தம்,மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை,ஜடா மகுடம்,சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம்.

சரஸ்வதியை  ஞான சரஸ்வதி,ஆகம சுந்தரி,கலைமகள் என்று பலவாறு கூறுகிறோம்.அன்னவாகனத்துடன் உள்ள சரஸ்வதியை அம்சவல்லி என்பர்.
அன்னம் அப்பழுக்கற்ற வெண்மை நிறமுடையது.அதுபோல்,ஒருவர் கற்கின்ற கல்வியும் மாசு மரு வற்றதாக இருக்க வேண்டும் என்பதையும்,படித்தவர்கள் வெள்ளை மனத்தினராக இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது.அவளது வெள்ளை ஆடையும்,அமர்ந்திருக்கும் வெள்ளைத் தாமரையும் இதையே உணர்த்துகின்றன.  

சரஸ்வதிக்கு  கொண்டைக்கடலை நிவேதியமாக வைக்கப்படுகிறது.கொண்டைக்கடலை உயிர் காக்கும் சத்துக்களைத் கொண்டது.ஒருவரது ஜாதகத்தில் குருபலம் இல்லையென்றால்,அவரது உயிருக்கு பாதகம் வரலாம்.குரு பார்த்தால் கோடி நன்மை.எனவே,குரு பார்வை வேண்டி நவக்கிரங்களில் குருவுக்கும்,குருவின் அம்சமான தெட்சிணா மூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.

மனித வாழ்வின் உயிர் நாடி கல்வி.அந்த கல்வியில் சிறந்து விளங்க,சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை[சுண்டல்]நைவேத்தியம் செய்கிறோம்.  


ஒட்டக்கூத்தர் கலைமகளின் பக்தராக விளங்கினார்.நாமகள் அருளால் பாடும் திறம் பெற எண்ணினார்.இதற்காக ஹரிநாதேஸ்வரம் என்னும் கூத்தனூரில் ஓடும் அரசலாற்றில் நீராடி கலைவாணியின் திருவடிகளை சிந்தித்து தியானத்தில் ஆழ்ந்தார்.கலைவாணி அவர்முன் தோன்றி,தன் வாயிலிருந்து தாம்பூலத்தை [வெற்றிலை] கூத்தருக்கு கொடுத்தாள்.அப்போதிலிருந்து பேரறிவும்,ஞானமும் பெற்றார் ஒட்டக்கூத்தர்.

கூத்தனாருக்கு கலைமகள் காட்சி கொடுத்து அருளிய திருத்தலம் என்பதால் கூத்தனூர் என்ற பெயர் ஏற்பட்டது.

கல்விக்கோயில்

சிவபெருமானை அலட்சியப்படுத்தும் விதமாக தட்சன் ஒரு யாகம் நடத்தினான்.சிவன்,தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார்.அவர்,யாகத்தை அழித்தவுடன்,யாகத்தை முன்னின்று நடத்திய பிரம்மதேவனையும் தண்டித்தார்.மேலும்,அவரது மனைவியாக கலைமகளின் மூக்கினையும் அறுத்தார்.பயந்து நின்ற அவள் தன் கணவன் பிரம்மனுடன் சீர்காழிக்குச் சென்று சிவனை வழிபட்டாள்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள  கூத்தனூர் கோவிலில் சரஸ்வதியை   வணங்கி  வந்தால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம்.இவ்வூரில் அவதரித்த சம்பந்தருக்கு,இத்தலத்தில்தான் அம்பிகை தாயாக இருந்து பால் புகட்டினாள்.




 




  


  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக