வெள்ளி, 23 செப்டம்பர், 2016

நவராத்திரி பூஜையும்,சொல்ல வேண்டிய மந்திரங்களும்

நவராத்திரி பூஜையும்,சொல்ல வேண்டிய மந்திரங்களும் navaratri poojai க்கான பட முடிவு


நவராத்திரி 9நாட்களிலும் ஒவ்வொரு அம்பிகையை ஒவ்வொரு விதமான மந்திரங்கள் சொல்லி பூஜிக்க வேண்டும். முதல் 3நாள் துர்காவிற்கும்,அடுத்த 3நாள் லக்ஷ்மிக்கும் ,கடைசி 3நாட்கள் சரஸ்வதிக்கும் உரிய நாட்கள் ஆகும்.



முதல் நாள்--- மகா கணபதி பூஜையுடன் தொடங்கி ,கலசபூஜை செய்து கலச ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம்.மஹிஷாஸுரமர்த்தினி மந்திரம் பாராயணம் செய்யலாம்.

2ம்நாள்---இச்சாசக்தியான துர்க்கையை துர்கா அஷ்டோத்திரம்,ஸ்ரீ லலிதா திரிசதி ,ஸ்ரீ காமாட்சி மந்திரம் பாராயணம் செய்து வழிபட வேண்டும்.

3ம்நாள்---துர்கா அஷ்டோத்திரம்,ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா நவரத்தின மாலா பாராயணம் செய்தல் வேண்டும்.

4ம்நாள்----ஸ்ரீ மகாலக்ஷ்மியை தியானம் செய்து,லக்ஷ்மி அஷ்டோத்திரம் படித்து ,பூஜை செய்வது நல்லது.ஸ்ரீ கனகதாரா மந்திரம்,ஸ்ரீ அன்ன பூரணாஷ்டகம் ,அஷ்டலக்ஷ்மி மந்திரம் சொல்ல வேண்டும்.

எல்லா நாட்களிலுமே பூஜை முடிவில் "ஸ்ரீ துர்கா லக்ஷ்மி சரஸ்வதீப்யோநம :"என்று கூறி மலர்களுடன்,குங்குமம்,அட்சதை ஆகியவற்றை அம்மாளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

 5ம்நாள்----லக்ஷ்மி அஷ்டோத்திரம்,ஸ்ரீ கனகதாரா மந்திரம்,ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் பாராயணம்,ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்வது நன்மை பயக்கும்.

6ம் நாள்---லக்ஷ்மி அஷ்டோத்திரம்,மகாலக்ஷ்மி ஸஹஸ்ரநாம பூஜை செய்தல் வேண்டும்.

7ம் நாள்----சரஸ்வதி அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்து ,ஸ்ரீசாரதா புஜங்க மந்திரம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா படிக்க வேண்டும்.

8ம்நாள்----சரஸ்வதி நாமாவளி,ஸ்ரீ பவானி புஜங்கள் ,சரஸ்வதிக்கு உரிய பாடல்கள்,மந்திரங்கள் சொல்லுதல் நன்று. இன்று தேவி நரசிம்மி வடிவில் சினம் தனிந்த கோலத்தில் காட்சி தருகிறாள். 

9ம் நாள் ---சாமுண்டி மாதா  அம்பு,அங்குசம் தரித்த   ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியாக இன்று தோன்றுகிறாள்.சரஸ்வதி அஸ்டோத்திரம்,ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் சிறந்த பலன் தரும்.

10ம் நாள்---வெற்றியை குறிக்கும் விஜயதசமி நாளாகும்.வெற்றி திருமகளாக தேவியை  அலங்கரிக்க,நவநிதியும் பெற்று நீடுழி வாழலாம் என்பது ஐதீகம்.

நவராத்திரி 9நாட்கள் என்கிற கணக்கில் சில சமயம் குறைவு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் எவ்வெவ் தேவியருக்கு  எத்தனை நாட்கள் என்ற பிரச்சனை எழுவதுண்டு.இந்த ஆண்டு 10நாட்கள் [1.10.2016 முதல்10.10.2016 வரை]வருகின்றன. 11வது  நாள் செவ்வாய் கிழமை விஜயதசமி .

முதல் மூன்று நாட்கள் ஸ்ரீதுர்கா தேவியையும்,இந்த வருடம்  நான்கு நாட்கள் லக்ஷ்மி தேவியையும்,அடுத்த 3நாட்கள் சரஸ்வதியையும் பூஜித்து வழிபடவேண்டும்.


சரஸ்வதி தேவியை மூல நட்சத்திரத்தன்று ஆவாஹனம் செய்து வழிபடத் தொடங்கி திருவோண நட்சத்திரம் உத்வாசனம் செய்ய வேண்டும்.அதனால் சரஸ்வதிக்குரிய நாட்களை உசித்தப்பாடி துர்க்கை,லக்ஷ்மி உரிய நாட்களை பிரித்து கொள்ளலாம்.

கன்னிகா பூஜை 

நவராத்திரி ஒவ்வொரு  நாளிலும் அன்னை பராசக்தியை ஒவ்வொரு ரூபத்திலும் ஆராதனை செய்ய வேண்டும்.7அல்லது 10வயதிற்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை நம் இல்லத்திற்கு அழைத்து, அவர்களை அன்னை பாலா திரிபுரசுந்தரியாக பாவித்து நல்விருந்தளித்து,புத்தாடை,வளையல் , சீப்பு,கண்ணாடி,  தேங்காய்,பழம்,வெற்றிலை பாக்கு முதலியவற்றை தாம்பூலமாக கொடுக்க வேண்டும்.

தினமும் கொடுக்க இயலாதவர்கள் கடைசிநாளில் 9கன்னிகைகளுக்கும் ஒருசேர விருந்தளித்து ஆடை,அணிகலன்கள் அளிக்கலாம்.இந்த உபசாரங்களை தேவி பராசக்தி அன்புடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வை தருவாள்.

அம்பிகையை நவராத்திரி  காலங்களில் வணங்கி, அவள் அருளை பெறுவோமாக !


  















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக