கோவில்படியை தாண்டி செல்வது ஏன்?
நாடி செல்கின்றனர்.தெய்வங்களும் அவர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்து அருளுகின்றனர்.இவ்வாறு கோவிலுக்கு செல்லும்முன் நுழைவாயில் குறுக்காக ஒரு படிக்கட்டு இருக்கும்.அதை சிலர் தாண்டியும்,சிலர் அதன்மேல் ஏறியும் செல்வர். அந்த படிக்கட்டை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.
முதலில் கோவிலுக்குள் நுழையும் போது எப்படி செல்லவேண்டும்? என்பதைப் பார்ப்போம்.
ஒரு கோவிலுக்குள் நுழையும் முன், முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும்.கால்,கைகளை கழுவியபின்,சிறு துளி தண்ணீர் எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும்.இவ்வாறு நம் உடலையும் ,மனதையும் சுத்தப்படுத்தி கொண்டு, முதலில் கோபுரத்தில் உள்ள கலசத்தை பார்த்து வணங்க வேண்டும்.பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்கள் அனுமதியை வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும்.
சிவன்கோவில் துவாரபாலகர்கள்
சிவன் கோவிலில் துவாரபாலகர்களாக இருப்பவர்கள் சண்டன்,பிரசண்டன் ஆவர்.இவர்கள் இருவரும் வீராதி வீரர்கள்.
பெருமாள் கோவில் துவாரபாலகர்கள்
ஐயனும்,விஜயனும் பெருமாள் கோவிலில் துவாரபாலகர்கள் ஆவர்.இவர்கள் வைகுண்டத்தில் சனத்குமாரர்களின் சாபத்தினால் மூன்று பிறவிகளில் அசுரர்களாக இருந்து பின்னர் திருமாலுக்கு சேவை செய்யவே வந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது .இவர்கள் கரங்களில் சங்கு சக்கரமும்,கதாயுதமும் ஏந்தி காட் சி தருகின்றன.
கோவில் நுழை வாயில் படியை தாண்டும்போது,"நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள்,எதிர்மறை எண்ணங்கள்,கெட்ட செயல்கள்,கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு விட்டு உள்ளே செல்கிறேன்.இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசீர்வாதமும்,நேர்மறை வினைகளுமே[நல்ல] எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா " என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்டவேண்டும்.
அந்த படியின்மேல் நின்று விட்டு கடந்தால், நாம் அவற்றைகூடவே, கோவிலுக்கு உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம்.
கோவில் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும்,நாதஸ்வரத்தாலும்,கெட்டி மேளசத்தத்தாலும் ,பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும்,முழுவதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும் இடமாகும்.எனவேதான், நாம் கோவிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று,வாழ்வில் மனநிம்மதியுடன் ,உயர்வுடனும் வாழ வேண்டும்.
கோவிலுக்கு செல்லும்போது வெறும் கையுடன் செல்லக்கூடாது.ஒரு அகல் தீபத்தை ஏற்றி ,சுவாமியை வணங்க வேண்டும்.
என்றென்றும் இறைவன்,இறைவி அருள் அனைவருக்கும் கிடைக்க நான் வேண்டுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக