அகல் விளக்கு தீபம் சிறந்தது என்பது ஏன்?
நெய் தீபம்
திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்திபொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்
.மிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இப்படி தூங்கா விளக்கினை நெய்யால் ஏற்றி மேல் சொன்னது போல இந்த மூன்று வேளைகளில் தொடர்ந்து தீபம் ஏற்றி வர நாம் எண்ணிய காரியத்தை நிறைவேற்றுமாம்.
இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்திவாய்ந்தது ஆகும். ஆகவே பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் பல மடங்கு சிறந்தது.
அகல், எண்ணெய், திரி, சுடர் இவையெல்லாம் சேர்ந்ததே விளக்கு. நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் மகாலக்ஷ்மி குடியிருப்பாள்.
எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்கு காரணமும் உண்டு. அதாவது அகல் விளக்கு ஒரு ஏழை ஒருவனால் ஐம்பூதங்களைக் [மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்] கொண்டு செய்யப்படுகிறது.
அவன் களிமண்ணில் நீரை ஊற்றி, சூரிய ஒளியில் காய வைத்து, காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கை செய்கிறான். அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதையே அம்பாள் விரும்புகிறாள்.
இன்னுமொரு காரணம்,
அகல் விளக்கை வாங்குவதால் அந்த ஏழைக் குடும்பமும் பிழைக்கிறது. நம்மை அறியாமல் ஒரு நல்ல செயல்களை செய்கிறோம். இதுவும் புண்ணியக் கணக்கில் போய் சேரும்.
தீப பலன்கள்!
நெய்தீபம் ஏற்றுவது லட்சுமி, குரு, அய்யப்பன், நரசிம்மருக்கு உகந்தது. இதனால் கடன் தீரும்.
நல்லெண்ணை தீபம் சனீஸ்வரர், சரபேஸ்வரருக்கு உகந்தது. நீண்ட ஆயுள் கிடைக்கும்.
இலுப்பை எண்ணை துர்க்கைக்கு உகந்தது. இந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வர எதிரிகளால் ஏற்படும் பயம் விலகும்.
தேங்காய் எண்ணெய் கணபதிக்கு உகந்தது. இதனால் காரிய சித்தி, தேர்வில் வெற்றி உண்டாகும்.
தேங்காய் எண்ணெய் , இலுப்பை எண்ணை, நல்லெண்ணை, விளக்கெண்ணை, நெய் இந்த ஐந்தையும் ஒன்றாகக் கலந்து கோவில்களில் விளக்கேற்றினால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக