ஓம் சாய் ராம் அன்பு தோழிகளுக்கு என் அன்பு வணக்கங்கள்.குருவாகிய நம் ஷீரடி சாய்பாபாவிற்கு 9வார விரதம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.இது தவிர திவ்ய பூஜை,சத்சரிதம் பாராயணம்,7நாள் விரதம், 11மட்டைத் தேங்காய் பிராத்தனை என எத்தனையோ விரதங்கள் இருக்கின்றனர்..மக்கள் அவற்றை கடைபிடித்து பலனையும் அடைகின்றன.பாபாவிடம் முழு நம்பிக்கையும்,பொறுமையும் வைத்து வணங்கினால் நிச்சயம் நாம் கேட்கும் நியாயமான கோரிக்கைகள் நினைவேறும்.நாம் வைக்கும் கோரிக்கைகள் எப்போதும் நியாயமானதாக இருக்க வேண்டும்.பிறரை துன்புறுத்தும் காரியமான கோரிக்கையாக இருக்க கூடாது.
இந்த விரதங்களில் துனி விரதமும் ஒன்று.
துனி விரத பூஜை
நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம். பூஜையறையை துடைத்து கோலம் போட்டு மஞ்சள் துணியை பலகையில் விரித்து பாபா படத்தை அதன்மீது வைத்து ஊதுவத்தி ஏற்றி, ஒரு மட்டைத் தேங்காயை வைத்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அவர் முன் வைக்க வேண்டும். ‘புக்கே’ எனும் (தேங்காய் துருவல், அவல், சர்க்கரை) கலந்த இனிப்பை நிவேதிக்க வேண்டும். 9 வாரம் இந்த பூஜையை தொடர்ந்து செய்யவேண்டும். முதல் வாரம் மட்டைத் தேங்காயை துனியில்
(அணையா நெருப்பு)போடவேண்டும். அந்த ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவை தவிர்த்தல் நலம். 9ம் வாரம் மஞ்சள் நிற இனிப்பைத் தயாரித்து எளியோர்க்கு விநியோகம் செய்யவேண்டும்.
மேற்காணும் வழிபாட்டு முறைகளில் அவரவர் விருப்பப்படி முடிந்த பூஜையினை செய்து சகல வளங்களும் பெறலாம். நாம் தினமும் பார்த்து அதன்படி திட்டமிட உதவும் காலண்டர் வேறு; பாபா வைத்திருக்கும் காலண்டர் வேறு. நம் பிரார்த்தனைகள் நம் காலண்டர்படி இன்ன தேதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்காமல் அவர் மீது நம்பிக்கை வைத்து செயலாற்ற வேண்டும். ஏனென்றால் நமக்கு எதை எப்போது தரவேண்டும் என்பதை அவர் தன் காலண்டர்படி தீர்மானித்து அப்படித்தான் நமக்கு அருள்வார்.
சாய் பிராத்தனை இருளகற்றி நம் வாழ்வில் ஒளியேற்றும் . ஜெய் சாய்ராம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக