பெண்கள் தாலிக்கயிறை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை
பெண்கள் அணியக்கூடிய மாங்கல்யம் மிகச் சிறப்புடையது.மாங்கல்யம் ஹோமம் வளர்த்து பல மந்திரங்கள் ஜெபித்த பின்னரே மாங்கல்யம் ஒரு பெண்ணின் கழுத்தில் ஏறுகிறது.
பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாற்றலாம்.பழைய கயிறு கழுத்தில் இருந்து கொண்டு புது கயிறை மாற்ற வேண்டும்.புது கயிறு மாற்றிய உடன் பழைய அழுக்கு கயிறை எடுத்து விடலாம்.
இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. புது மஞ்சள் கயிறு மாற்றியபின் மாங்கல்யத்திற்கு குங்குமம் இட வேண்டும். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.கோவிலில் செய்ய முடியாதவர்கள் வீட்டில் பூஜை அறையில் செய்யலாம்.
மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது., ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது.
இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம். அழுக்கு தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.தினமும் குளிக்கும் போது தாலிக்கு மஞ்சள் பூச வேண்டும்.இவ்வாறு செய்வதால் அந்த பெண் வீட்டில் அனைத்து செல்வங்களும் நிறைந்து இருக்கும் என சாஸ்திரங்கள் சொல்கிறது.
மாங்கல்யத்திலும்,மாங்கல்ய கயிறிலும் அதிகமாக அழுக்கு சேராமல் பார்த்து கொள்வது பெண்களின் முக்கிய கடமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக