மங்கள கௌரி நோன்பு ! - பண்டிகை
ஆடி அமாவாசைக்கு அடுத்து வரும் செவ்வாய் கிழமை மங்கள கௌரி விரதத்தை செய்ய உகந்த நாளாக கருதப்படுகிறது..திருமணம் ஆகாத பெண்கள்,தங்களது வீட்டில் இந்த விரதத்ததை முதலில் மேற்கொள்ள வேண்டும்.திருமணத்திற்கு பிறகு கணவன் வீட்டில் தொடர்ந்து செவ்வாய்கிழமை தோறும் இந்த விரதத்தை மேற்கொண்டு வர வேண்டும்.ஐந்தாவது வார செவ்வாயன்று சுமங்கலிப் பெண்கள் அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய நோன்பு இந்த மங்கள கௌரி நோன்பு.
வீட்டில் அம்மனை அலங்கரித்து, புரோகிதர் மந்திரம் சொல்ல அட்சதை, பூவுடன் பூஜை செய்வார்கள். பூஜை முடிந்து கையில் மஞ்சள் சரடு கட்டிக் கொள்வார்கள். இந்த நோன்பில் முக்கியமானது (இரண்டு புதிய முறங்கள் ), மூடி போட்ட பிளாஸ்டிக் டப்பா கொடுத்தல், பிளாஸ்டிக் டப்பாவில் வெற்றிலை,பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், குங்குமம், பூ, ரவிக்கைத் துணி, காசு, அரிசி, வெல்லம், பருப்புவகைககள், கண்ணாடி வளையல், கண்ணாடி, சீப்பு போன்ற மங்களகரமான பொருள்கள் அனைத்தையும் போட்டு, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்வார்கள்.
பிறகு, பூஜை செய்பவர்கள், சுமங்கலிகளை பலகையில் உட்கார வைத்து இதைக் கொடுத்து சந்தனம், குங்குமம் கொடுத்து பூவும் கொடுப்பார். பின் டப்பாவை புடவை முந்தானையின் இருபுறமும் பிடித்துக்கொண்டு, ( வாங்கும் சுமங்கலியும் முந்தானையால் இருபுறமும் பிடித்துக்கொள்வார்). சுமங்கலி சுமங்கலி இந்த மங்களப் பொருட்களை உனக்குக் கொடுக்கிறேன்... வாங்கிக்கொள்... என்று சொல்லிக் கொடுப்பார். வாங்குபவர் நானும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு உன்னை மனமார ஆசீர்வதிக்கிறேன் என்று சொல்லி அட்சதை போடுவார். வந்திருக்கும் அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்து, பாட்டுப் பாடி மிகக் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.
நீங்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக கொடுக்கிறீர்களோ அந்த அளவுக்கான மகிழ்ச்சி உங்களை உடனே தேடி வரும்.
இந்த விரதம் தங்களுடைய மாங்கல்ய பாக்கியத்திற்காக அதாவது கணவன் நீண்ட காலம் உயிர்வாழ வேண்டும் என அம்மனை நினைத்து விரதம் மேற்கொள்கின்றனர்.
நோன்புக்கு செய்ய வேண்டியவை :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக