வெள்ளி, 22 ஜூன், 2018

பூஜையறை யோசனைகள்

kuthu vilakku cleaning க்கான பட முடிவு


























அன்பார்ந்த ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்.என்னுடைய இணையத்தளத்தை பெரும்பாலானவர்கள் பார்த்துக் கொண்டு வருவது மிகவும் சந்தோசத்தை தருகிறது.மிக்க நன்றி.இப்பொழுது நான் புதிதாக Tamilnattu samayalஎன்ற  youtube சேனலை ஆரம்பித்துள்ளேன்.இதுக்கு கொடுத்த வரவேற்பை அதற்கும் கொடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.என்னுடைய சேனலை subscribe செய்து உங்க comment ஐ மறக்காமல் தெரிவியுங்கள்.நல்ல நல்ல ஆன்மீக விஷயங்கள்,சமையல்கள் உங்களுடன் share பண்ண உள்ளேன்.

பூஜையறை யோசனைகள

. சட்டமில்லாத, லேமினேஷன் செய்த படங்களில் ஒரு ரப்பர் பேண்டை பட்த்தின் மேலிருந்து 1” கீழே போட்டு வைத்தால் பூ வைக்க, மாலை போட வசதியாக இருக்கும்.kuthu vilakku cleaning க்கான பட முடிவு


2. சுவாமியறையில் பயன்படுத்தும் பித்தளை விளக்குகளை எண்ணெய் போகத் துடைத்துவிட்டு, சிறிது மண்ணெண்ணையும், விபூதியும் சேர்த்து ஒரு வெள்ளைத் துணியால் நன்கு அழுந்தத் துடைத்தால் விளக்குகள் புதியதுபோல் மின்னும். தண்ணீர் விட்டு அலம்ப வேண்டியதில்லை.
lakshmi poojai seivathu eppadi க்கான பட முடிவு

 21 தாமரைப் பூக்களை அரிசிமாவால் போட்டு, அதன் மேல் சந்தன, குங்கும பொட்டு வைத்து ஸ்ரீகனகதாரா சுலோகம் ஒவ்வொன்றுக்கும் பூஜிக்கவும். கோலம் போடும் போதும், சந்தனம், குங்குமம் வைக்கும்போதும் கீழ்க்கண்ட சுலோகம் சொல்லவும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை!
ஸர்வாகர்ஷண தேவ்யாயை!
ஸர்வ தாரித்ர்ய நிவாரண்யை!
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா!

இவ்வாறு ஸ்ரீமகாலக்ஷ்மியை பூஜித்தால் செல்வம் பெருகும்.
தொடர்புடைய படம்



தினமும் தெய்வங்களுக்கு பூ சார்த்தும்போது விநாயகப் பெருமானுக்கே முதலில் பூ போட வேண்டும்.




பூஜை முடிந்து நைவேத்யம் ஆனபின், நைவேத்யங்களை அவ்விடத்திலிருந்து அகற்றிய பின்னரே கற்பூர தீபாராதனை செய்ய வேண்டும்.

மணியின் நாக்கு, சங்கின் அடிப்புறம் இவை பூமியில் படக்கூடாது என்பதால் மணியை தட்டிலும், சங்கை அதற்கான பீடத்திலும் வைக்க வேண்டும்.
karpaga virutcham leaf க்கான பட முடிவு


நந்தியாவட்டை இலை சிவனுக்கும், கொய்யா இலை விநாயகருக்கும் ஏற்றது. வில்வம், வன்னி இலைகள் சிவன், கணபதி, ஆறுமுகப் பெருமான் ஆகியோருக்கும், துளசி மஹாவிஷ்ணு, ஐயப்பனுக்கும் ஏற்றது. ஆமணக்கு இலை, பனை ஓலை இவற்றில் வைத்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்தல் ஆகாது.






பூஜைக்குரிய சில பொருட்கள் கிடைக்காவிட்டால் அவற்றுக்குப் பதிலாக உபயோகிக்கப்படும் மாற்றுப் பொருட்கள் – தயிருக்குப் பதிலாக பால், தேனுக்குப் பதிலாக வெல்லம், பசு நெய்க்குப் பதிலாக தயிர் அல்லது பால், வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம் முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அட்சதை.
தொடர்புடைய படம்



விசேஷ பூஜை நாட்களில் மாவினால், கோலம் போட்டு காவி இடுவதை விட, இழைக் கோலம் போடுவது விசேஷம். 


கடவுள் விக்ரகம், சாலிக்ராமம், யந்திரம் இவற்றிற்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை கால்படும் இடங்களிலோ, சாக்கடைகளிலோ கொட்டக் கூடாது. வீட்டில் செடி கொடிகள் இருந்தால் அவற்றில் விடலாம். 
தொடர்புடைய படம்

அர்ச்சனைக்கு உதிரிப் பூக்களையே உபயோகிக்க வேண்டும். தொடுத்த பூவால் அர்ச்சித்தல் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக