ஹலோ பிரண்ட்ஸ் எல்லோருக்கும் வணக்கம்.இந்த பதிவு என் அன்பு சகோதரி ஒருவர் கேட்டதால் போட்டுள்ளேன்.
சொந்த வீடு வாங்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!
எலி வளை என்றாலும் தனி வளையாக இருக்க வேண்டும் என்பது பழமொழி. சொந்த வீட்டில் வாழ்வதென்பது ஒரு தனி பெருமையும், மகிழ்ச்சியும் கூட. நமக்கென்று சொந்த வீடு இருப்பது எப்போதும் மனநிறைவை அளிக்கும். ஆனால், இப்பொழுது வளர்ந்துவரும் டெக்னாலஜியில் சொந்தவீடு என்பது பலருக்கு எட்டாக்கனியாகத் தான் உள்ளது.
ஒரு சிலர் பணவசதி படைத்தவராக இருந்தாலும், சொந்த வீடு வாங்கும் யோகம் அமையாது. அப்படியே சொந்த மண் வாங்கினாலும், அதைக் கட்டி குடிபோகும் பாக்கியம் எல்லோருக்கும் கிட்டுவதில்லை.
சொந்த வீடு கட்டும் யோகம் அமைய என்ன செய்ய வேண்டும்? ஏதேனும் பரிகாரம் செய்யலாமா? என்று கேட்பவருக்கு நிச்சயம் உள்ளது.
ஜாதகருக்கு சொந்த வீடு கட்டும் யோகம் அவரது ஜாதகத்தில் இருக்க வேண்டும். சொந்தவீடு யோகம் ஜாதகருக்கு இல்லையெனில் என்னதான் முட்டி மோதினாலும் அமைவது கடினம் தான். சொந்தவீடு கட்டி குடிபோனாலும், அது நிலைக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில் இருக்கவேண்டும்.
செவ்வாய் பலம் கூடுவதற்கான சில பரிகாரங்களைப் பார்க்கலாம்....
• ஜாதகருக்கு செவ்வாய் பலமற்று இருந்தால் வீடு அமையும் யோகம் தடைப்படும். அந்தத் தடை நீங்க செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு மலர்களால் அங்காரகனைப் பூஜித்து வர வேண்டும். விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
• நிலம் அமைந்து, வீடு கட்ட தாமதமாகினால், திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை வணங்கி "ஓம் சரவண பவ" எனும் மந்திரத்தை உச்சாடனம் செய்து ஆலயத்திலேயே 6 மணி நேரம் தங்கி, அங்குள்ள கடல் நீரை எடுத்து அதில் மஞ்சள் கலந்து நீங்கள் கட்டுகின்ற நிலத்தைச் சுற்றி தெளிக்க வேண்டும்.
• சிறுவாபுரியில் உள்ள முருகப்பெருமானை ஒன்பது செவ்வாயன்று வணங்கி வர வீடு கட்டும் கனவு நிஜமாகும்.
• சொந்த வீடு யோகம் அமைய பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரலாம்.
• பிச்சைக்காரர்களுக்கு செம்பால் ஆன தட்டு,கிண்ணம் எதுவானாலும் தானம் கொடுத்து வந்தாலும் சொந்தவீடு நிச்சயம் அமையும். இதற்கு கிழமை நேரம் தேவை இல்லை.நமக்கு சொந்த வீடு கிடைக்க வேண்டும் என முருகப்பெருமானை வேண்டி இந்த தானத்தை செய்யலாம்.
• ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்கக் கொடுத்தால் வீடு வாங்கும் கனவு நிறைவேறும்.
வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக பாட வேண்டிய பாடல்
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே
இந்த பாடலின் விளக்கம்
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே
இந்த பாடலின் விளக்கம்
என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!
தினமும் இந்த பாடலை பாடினால் வீடு வாசல் கிடைக்கும் என அபிராமி அந்தாதியில் கூறப்பட்டுள்ளது.
என்னுடைய பதிவை காண வந்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.நான் புதிதாக Tamilnattu samayal என்ற சேனல் ஆரம்பித்துள்ளேன்.குத்து விளக்கிற்கு பொட்டு வைத்து தீபம் ஏற்றுவது எப்படி?Tamilnattu Samayal
Published on Jun 27, 2018அதில் நேற்று குத்து விளக்கிற்கு பொட்டு வைத்து தீபம் ஏற்றும் போது என்ன சொல்ல வேண்டும் என சொல்லி இருக்கிறேன்.உங்கள் ஆதரவை தெரிவிக்கும் படியாக என்னுடைய சேனலை Tamilnattu samayal subscribe பண்ணுங்கள்.
Published on Jun 27, 2018அதில் நேற்று குத்து விளக்கிற்கு பொட்டு வைத்து தீபம் ஏற்றும் போது என்ன சொல்ல வேண்டும் என சொல்லி இருக்கிறேன்.உங்கள் ஆதரவை தெரிவிக்கும் படியாக என்னுடைய சேனலை Tamilnattu samayal subscribe பண்ணுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக