புதன், 20 ஜூன், 2018

வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை


வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை





















அன்பார்ந்த தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்.பூஜை ,விரதங்கள் பெரும்பாலும் பெண்கள் வீட்டில் செய்கிறார்கள்.அவர்கள் தங்களுக்காக இதை செய்வது இல்லை.அவரவர் குடும்பம் நன்றாக இருக்கவும் மட்டுமே செய்கிறார்கள்.குடும்பத்தலைவி தன் கணவன்,குழந்தைகள்,மாமன்,மாமி,தன் பிறந்தகம் வீட்டு உறவினர்கள் அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் விரதம் இருந்துவழிபடுகின்றாள்.இவ்வாறு வழிபடும் அவள் பூஜையில் பயன்படுத்தப்படும் பொருட்களின்  பெயர்களை அறிந்து செய்வதால் இன்னும் சிறப்பாக இருக்கும்.அதைத்தான் இந்த பதிவில் போட்டு உள்ளேன். 
வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை

1. கதலீபலம் – வாழைப்பழம்
2. பீஜாபூரபலம் – கொய்யாப்பழம்
3. வேத்ர பலம் – பெரப்பம் பழம்
4. பதரி பலம் – எலந்தைப் பழம்
5. கர்ஜுர பலம் – பேரிச்சம் பழம்
6. ஜம்பூ பலம் – நாவல் பழம்
7. கபித்த பலம் – விளாம் பழம்
8. த்ராஷா பலம் – திராøக்ஷ பழம்
9. சூ பழம் – மாம்பழம்
10. மாதுஸங்கபழம் – மாதுளம் பழம்
11. நாரங்கபலம் – நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி
12. பனஸ பலம் – பலாப் பழம்
13. உர்வாருகம் – வெள்ளரிக்காய்
14. ஜம்பீர பலம் – எலுமிச்சம் பழம்
15. இக்ஷúகண்டம் – கரும்பு
16. சணகம் – கடலை
17. ப்ருதுகம் – அவல்
18. ஸர்க்கரா – சர்க்கரை
19. ததி – தயிர்
20. குடோபஹாரம் – வெல்லம்
21. ஆப்பிள் – காஷ்மீர பலம்
22. அமிருதம் – தீர்த்தம்
23. நாரிகேளம் – தேங்காய்
24. ஸால்யன்னம் – சம்பா அன்னம்
25. குளா பூபம் – அதிரசம், அப்பம்
26. தத்யன்னம் – தயிர் சாதம்
27. திந்திரியன்னம் – புளியோதரை
28. ஸர்கரான்னம் – சர்க்கரை பொங்கல்
29. மாஷா பூபம் – வடை
30. ரஸகண்டம் – கற்கண்டு
31. மோதகம் – கொழுக்கட்டை
32. திலான்னம் – எள்ளு சாதம்
33. ஆஜ்யோபகாரம் – நெய்
34. லட்டூகம் – லட்டு
35. சித்ரான்னம் – பலவகை கலந்த சாதம்
36. நாரிகேளகண்டத்வயம் – இரண்டாக உடைத்த தேங்காய்
37. க்ருதகுள பாயஸம் – வெல்லம் போட்ட பாயஸம்
38. கோக்ஷீரம் – பசும் பால்
ருதுக்கள்
சித்திரை, வைகாசி – வஸந்த ருது
ஆனி, ஆடி – க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி – வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை – சரத் ருது
மார்கழி, தை – ஹேமந்த ருது
மாசி, பங்குனி – சிசிர ருது
கிழமைகளைச் சொல்லும் முறை
ஞாயிறு – பானு வாஸர
திங்கள் – இந்து வாஸர
செவ்வாய் – பவும வாஸர
புதன் – சவும்ய வாஸர
வியாழன் – குரு வாஸர
வெள்ளி – ப்ருகு வாஸர
சனி – ஸ்திர வாஸர
பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் 

சொல்ல வேண்டிய முறை
சித்திரை – மேஷ மாஸே
வைகாசி – ரிஷப மாஸே
ஆனி – மிதுன மாஸே
ஆடி – கடக மாஸே
ஆவணி – ஸிம்ம மாஸே
புரட்டாசி – கன்யா மாஸே
ஐப்பசி – துலா மாஸே
கார்த்திகை – வ்ருச்சிக மாஸே
மார்கழி – தனுர் மாஸே
தை – மகர மாஸே
மாசி – கும்ப மாஸே
பங்குனி – மீன மாஸே.

நான் அறிந்த நல்ல விஷயங்களை சக தோழிகளும் தெரிந்து பயன் பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.

என் இணைய தளத்தை காண  வந்த கண்களுக்கு நன்றிகள் பல .உங்கள் கருத்தை எனக்கு தெரிவித்தால் அது என்னை மேலும் எழுத ஊக்குவித்ததாக அமையும்.ஸ்ரீ லலிதாம்பிகை க்கான பட முடிவு

அவள்தான் வணங்கி இந்த பதிவை முடிக்கின்றேன்.
ஓம் ஸ்ரீலலிதாம்பிகையே போற்றி 

உங்கள் ஆன்மீக தோழி ஈஸ்வரி சரவணன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக