குடும்பத்தில் நிம்மதி தரும் குபேர விளக்கு ஏற்றும் முறை
குபேரனின் அருள் கிடைக்க குபேர தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.குபேரன் செல்வத்தின் அதிபதி. வற்றாத செல்வத்தை நமக்கு கொடுக்கக்கூடியவர்.யாருக்கெல்லாம் பணம் என்றும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ அவர்கள் குபேர பூஜை செய்வது நல்லது.அதுமட்டுமல்லாமல் குபேர தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.குபேர தீபம் ஏற்ற சரியான நேரம் குபேரருக்குஉகந்த நேரமான வியாழக்கிழமை சாயந்திரம் 5மணி முதல் 8மணி ஆகும்.இந்த நேரத்தில் நம் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து,பச்சரிசி மாவினால் கோலம் போட்டு அதற்கு செம்மண் பட்டை இட்டு அழகுபடுத்த வேண்டும்.
நிலைப்படிக்கு மஞ்சள் தெளித்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி ,ஒரு பகுதியில் மஞ்சளும் மற்றொரு பகுதியில் குங்குமமும் தடவ வேண்டும்.நிலைப்படிக்கு ஒரு பக்கத்தில் மஞ்சள் தடவிய எலுமிச்சை பழத்தையும் ,மறு பக்கத்தில் குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தையும் இருபுறமும் வைக்கவும்.நிலைப்படிக்கு இருபுறமும் பூ வைக்க வேண்டும். தினமும் எலுமிச்சை பழத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.காய்ந்த பழத்தை கால்மிதி படாத இடமாக பார்த்து போட வேண்டும்.
வீட்டுவாசலில் நின்றபடி நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி வைக்க வேண்டும்.முதலில் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஊற்றி இரு திரிகளை ஒரு திரியாக்கி ஏற்ற வேண்டும்.இவ்வாறு ஏற்றுவதால் நமக்கு குபேரனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பழைய திரியோ அல்லது முதல் நாள் ஏற்றி மிஞ்சிய எண்ணெயையோ பயன் படுத்தக்கூடாது. அதே போல எலுமிச்சை பழத்தையும் தினமும் புதியதாக வைக்க வேண்டியது அவசியம்.
இதை மாதவிடாய் சமயத்தில் மட்டும் செய்ய வேண்டாம்.
மற்ற தினங்களில் தொடர்ந்து செய்யவும்.
இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் துண்பங்கள் கடன் பிரச்சனைகள் அனைத்தம் பனி போல் கரையும்.
விளக்கு காற்றில் அலைந்தால் சற்று வாசலின் உள்புறம் வைக்கலாம். தவறில்லை.
குறிப்பு: இதை வீட்டில் திருமணம் ஆகாத பெண்கள் கூட செய்யலாம்.
குபேரன் நமக்கு தங்குதடையில்லா செல்வத்தை அள்ளிக்கொடுப்பார்.இந்த குபேர தீபத்தை வார வாரம் வியாழக்கிழமைகளில் செய்து வர எல்லா வளங்களும் நமக்கு கிடைக்கும்.நீங்களே மாற்றத்தை காண முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக