வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடுவது ஏன்?





மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடுவது ஏன்? 


ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி, வில்வம், ருத்ராட்சம், வேம்பு, அரசு ஆகிய மரங்கள் எங்கிருந்தாலும் அதை தெய்வாம்சமாகக் கருதி வழிபடுகின்றன.ஆலமரத்தை சுற்றுவதால் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை உண்டாகும் பாக்கியம் கிட்டும்.
மரங்களுள் நான் அரச மரமாக இருக்கிறேன் என்று கண்ணன் கீதையிலே சொல்கிறார். அரச மரத்தை சிவ சொரூபமாகவும், வேப்பமரத்தை சக்தி சொரூபமாகவும் போற்றுகிறோம். அதனால் தான் அரசும் வேம்பும் ஒரே இடத்தில் ஒன்றோடொன்று இணைந்து வளர்ந்திருக்கும் இடத்தை சிவ சக்தி உறையும் இடமாகக் கருதி வணங்கி வழிபடுகிறோம். மகமாயி மாரியம்மனுக்கு வேப்பிலைக்காரி என்றே பெயர்.
அம்மை நோயைத் தீர்க்கும் தெய்வம் மகமாயி. அவள் பெயரால்தான் அந்த நோயை அம்மை என்று குறிப்பிடுகிறோம். அம்மை நோய்க்கு இன்று வரை ஆங்கில மருத்துவத்தில் கூட மருந்து இல்லை. அம்மை வருமுன்னே தடுக்கக்கூடிய அம்மை நோய்த் தடுப்பு ஊசி (மருந்து) தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நோய் வந்த பின் காப்பது அவள் அருள் ஒன்றே! அதனால் அம்மை நோய் கண்டவரது வீட்டில் வேப்பிலைக் கொத்து சொருகி வைப்பதும், அம்மை நோய் குணமாகி தலைக்கு ஊத்துதல் என்னும் பெயரில் நோயாளியைக் குளிப்பாட்டும்போது, அந்த நீரில் வேப்பிலையை ஊறப் போட்டு அந்த நீரால் குளிப்பாட்டுவதே இன்றும் வழக்கத்திலுள்ளது.
இயற்கை அன்னையை வணங்கியே தங்கள் ஆன்மிக  சித்தாந்தத்தைத் தொடங்கிய பண்டைய பாரதமக்கள், இயற்கையின் முதல் அம்சமான மரங்களை வழிபடத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை. இன்றும் நாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் தேங்காய், பழம், வெற்றிலை- பாக்கு மற்றும் இறைவனுக்கு அணிவிக்கும் சந்தனம், ஜவ்வாது உட்பட எல்லாமும் மரங்களின் கொடை.வில்வ மரம்- அதிர்ஷ்டங்கள் கூடி வரும்
மனிதன் உயிர் வாழப் பிராண வாயு தேவை. மரங்கள் காற்றிலுள்ள கரியமிலவாயுவை (கார்பன் டை ஆக்ஸைடை) உட்கொண்டு, பிராண வாயுவை (ஆக்ஸிஜனை) வெளியிட்டு, மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் உயிர்த் துடிப்பைத் தொடர்ந்து நடத்துகின்றன.அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் மரத்தை தெய்வமாக வழிபட காரணமானது. 
தல விருட்சத் தத்துவம்!
உயிர் வாழ உணவுக்கும், உயிர் ஆபத்தான நோய்களிலிருந்து மனிதனைக் காக்கும் மருந்துக்கும் மரங்களே துணை செய்கின்றன. கைம்மாறு கருதாத சேவை. உப்பு நீரைப் பெற்றுக் கொண்டு இனிமையான இளநீரைத் தரும் மேன்மை . 
மனிதன் நாகரிக வளர்ச்சி பெறத் தொடங்கியதும் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்ள மரங்களை வெட்ட நேர்ந்தது; பின்னர் எரிபொருளுக்கும் அதுவே தேவையாயிற்று. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக