1) வீட்டில் கோலமிடுவது சிறப்பு. அபார்ட்மென்ட் எனில் சமையல் மேடை, பூஜை அறையிலாவது கோலமிடவேண்டும். அரிசி மாவினால் கோலம் போடுவதே உத்தமம்.
2) வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம், பூக்கள், பழங்கள், தாம்பூலம் கொடுப்பது விசேஷம். இதனால், வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருகும். தாம்பூலம் கொடுக்கும்போது தட்சணையாக ஒரு ரூபாயாவது வைத்துக் கொடுக்கவேண்டும். தாம்பூலம் பெறும் சுமங்கலிகளை லட்சுமியாகவே பாவிக்கவேண்டும்.
3) சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பசுக்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, ஒரு சில நிமிடங்களாவது அவற்றின் மகிமை குறித்து தியானித்து வணங்க வேண்டும்.
4 )வீட்டை சுற்றிலும் விருட்சங்கள் இருப்பது சர்வ மங்கலங்களையும் அளிக்கும். நோய்களும் அணுகாது. மரம் வளர்க்க வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டு வாயிலில் துளசிச் செடி வளர்த்து வணங்கலாம். சிறு தொட்டிகளில் வளரும் சிறு தாவரங்களை வளர்க்கலாம். இதனால், பிராண சக்தி அதிகரிக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.
5) வீட்டு வாசலில் கருட கிழங்கு (நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) கட்டித் தொங்கவிட்டால், தீய சக்திகள் வீட்டிற்குள் வராது. அதேபோல், மாவிலைத் தோரணங்கள், துளசிச் செடி ஆகியனவும் தீய சக்திகள் நம் வீட்டுக்குள் வருவதைத் தடுக்கும் வல்லமை பெற்றவை.
6) அன்னபூரணியை அரிசியில் வைப்போம் இல்லையா, அந்த அரிசியை மாற்றும்போது, மொத்தமாக அரிசி வைக்கும் பாத்திரத்தில் மாற்றிவிடுவது நல்லது. பெரும்பாலும் வளர்பிறை, குளிகை காலங்களில் செய்வது நல்லது.
7) திருமாங்கல்யத்தை மிகவும் நைந்து பழசாகும் வரை வைத்திருக்காமல், ஓரளவு நன்றாக இருக்கும்போதே மாற்றிவிடுவது நல்லது. அசந்தர்ப்பமாக மாற்ற வேண்டிய நெருக்கடியைத் தவிர்க்கவே இந்த யோசனை. பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி விளக்கேற்றி வைத்து, திருமாங்கல்யம் மாற்றலாம். காலையில் செய்வதே சிறப்பு!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக