வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள்





கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள்Image result for pillaiyar  coconutImage result for pillaiyar  coconut



நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும். காத்து கருப்பை விரட்டும் கருப்புநிறம்  வீட்டில் கருப்பு மீன், கருப்பு நாய், கருப்ப மாடு போன்றவற்றில் ஒன்றை தங்கள் வசதிக்கேற்ப வளர்த்து, தங்கள் கையாலேயே உணவு கொடுத்து வளர்த்து வந்தால், காத்து கருப்பு எனும் துஷ்ட சக்திகள் நம்முடைய உடலில் தோஷங்களாக நுழைவதை தடுத்திடும். பரிகாரமாக கருப்பு ஜீவ ராசிகளை சில நாட்களோ அல்லது சில மாதங்களோ வளர்த்து, அந்த ஜீவராசிகளை யாருக்காவது தானமாக கொடுத்தால் நம்முடை தோஷம் போகும் என்கிறது சாஸ்திரம். 
அதனால்தான் சில கிராமத்தில் கருப்பு ஆடு, கருப்பு கோழியை வளர்த்து கோவிலுக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. 
கண்திருஷ்டியை விரட்டும் கண்ணாடி   house entrance mirrors க்கான பட முடிவு
 சாப்பிடும் போது எங்கோ யாரோ நினைத்தால் புரை ஏறும். அதேபோல் யாரே நம்மை திட்டினாலும் நாக்கை கடித்து கொள்வொம். அதுபோல்தான் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும். வீட்டுக்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது. 
அமாவாசை, தீபாவளி நோன்பு  போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து வழிப்படுவோம். காரணம் நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குலதெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது. அச்சமயங்களில் அவர்களை வழிப்படும்போது அவர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி, தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வணங்குகிறார்கள் என்று மகிழ்வார்கள். இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். கண்ணாடி வைக்காமல் வணங்கினால் என்னத்தான் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது சாஸ்திரம். 
 அதுபோல,வெளியில் இருந்து  வீட்டுக்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால், அவர்களால் உண்டாகும் கண்திருஷ்டி அந்த இல்லத்தை பாதிக்காது. 

உப்பு தண்ணீரின் மகிமை   Related image
சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது கண்திருஷ்டி . நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும். மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகும்.  அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும். 
Related image
























இதற்கு பரிகாரம் கடல் தண்ணீர். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும். எப்படி தணணீர் வானத்திற்கு  சென்று மழையாக திரும்பி வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து நம்முடைய உடலில் உள்ள சப்த  சக்கரங்களை பலப்படுத்தும்.. 
அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் செண்ட்  போன்ற நறுமண பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும். 
அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பாக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும். கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பாக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும். ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது“ என்றார் ஸ்ரீராம பிரபு.
செப்பு காசின் மகிமை   குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண்திருஷ்டியும் அண்டாது. சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது. இப்படி செய்வதினால் சக்திதேவியின் ஆசியால்  இன்னும் அந்த செம்பு காசுக்கு சக்தி கூடுமே தவிர குறையாது. 
செங்கல்லின் மகிமை  Related image
குழந்தைகள் அடிக்கடி கீழே விழுந்துக் கொண்டே இருந்தால், செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும். 
தண்ணீருக்கும் சக்தி   
யாராவது உங்கள் இல்லத்திற்கு வந்தால் காபி கொடுக்கும் முன் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் காபி அருந்தவில்லை என்றாலும் தண்ணீராவது குடிக்க கொடுத்த பிறகே அவர்களை வழியனுப்ப வேண்டும். இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.


Related imageபன்னீருக்கு இருக்கும் சக்தி   வெறும் தண்ணீருக்கும் இருக்கிறது“ என்றார் சூதவா முனிவர். மரணத்திற்கு பின்னர் மேல் லோகத்திற்கு செல்லும் போது நாம் பூமியில் வாழ்ந்த காலங்களில் சில பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்களுக்கு  தண்டனை நிச்சயம் உண்டு. ஆகவே இறைவனுக்கு வெறும் தண்ணீரில் அபிஷேகம் செய்தாலே ஆடி தள்ளுபடி போல, செய்த பாவங்களுக்கு தண்டனை குறையும் என்கிறது சிவபுராணம். நாம் செய்த பாவங்களை இறைவன் பார்த்து கொண்டே இருக்கிறாரா? என்றால் நிச்சயமாக பார்க்கிறார். கோவில் திருவிழாவில் தீ மிதிப்பார்கள். அந்த தீ மிதிக்கும் முன் ஒரு நிமிடமாவது மழை தூறல் வரும். இதை பலர் அனுபவத்தில் பார்த்து இருப்பார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் இறைவன் பார்த்து கொண்டேதான் இருக்கிறார்.
திருஷ்டியை போக்கும் “மை”   
சில பெண்களின் முகத்தை பார்த்து யாராவது, “எவ்வளவு அழகாக இருக்கிறாள்” என்று கூறினாலே அது கண்திருஷ்டியாக மாறும். முகத்திற்குதான் அதிக கண்ணடிப்படும். அதனாலேயே சிலருக்கு முகப்பரு, கரும்புள்ளி போன்றவை அதிகம் முகத்தில் உருவாகும். அதற்கு பல கிரிமை முகத்தில் தடவியும், மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் நீங்கவில்லை என்றால் அதற்கு எளிய வழி, வேப்பமரத்திற்கு அவர்கள் கையால் தண்ணீர் ஊற்றி  மஞ்சள்,  குங்குமத்தை  செவ்வாய்வெள்ளி தோறும் வைத்து பூஜித்தால், அவர்களுக்குள் இருக்கும் கண்திருஷ்டியை அந்த வேப்பமரம் போக்கும். ஏன் என்றால் வேப்பமரம் முத்துமாரியம்மனாகவும், ரேணுகாதேவியாகவும் போற்றப்படுகிறது. அத்துடன், உங்கள் கண்களுக்கு தினமும் மை வைத்து வந்தாலும் கண்திருஷ்டி அண்டாது.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக