வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெற வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள்
செடிகள் வளர்ப்பது, மனதுக்குப் புத்துணர்ச்சி தரக்கூடிய விஷயம் தான். அதிலும் சில செடிகள் நமக்கு பாசிடிவ் எனர்ஜியைத் தருகின்றன. சில செடிகளில் இருந்து வருகிற வாசனை வீடு முழுக்க நிறைந்திருக்கும்.
அந்த வாசனை, மாலை நேரங்களில் நம்முடைய மனதுக்கு ஏகாந்த சுகத்தைத் தரும். அப்படி என்னென்ன வகையான செடிகளை வீட்டில் வளர்க்கலாம்?
வாடாமல்லி
வாடாமல்லி மலரில் வாசனை எதுவும் இருப்பதில்லை தான். ஆனால், அந்த செடி எப்போதும் வாடுவதில்லை. அதுபோலவே வீட்டிலும் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் வாடாமல்லி வாசனை இல்லாத மலரென்பதால், நாம் வீடுகளில் அதை வளர்ப்பதில்லை.
மல்லிகை
மல்லிகையின் மனம் எப்போதும் மணம் பரப்பி, மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். காதலை உச்சநிலைக்குத் தூண்டிவிடக்கூடிய ஆற்றல் மல்லிகைக்கு உண்டு என்பதால், அது நம்முடைய மனதை இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.
துளசி
துளசியை வேறு எந்த தாவரத்துடனும் ஒப்பிட முடியாது. துளசியிலிருந்து வெளிவருகிற வாசனை பெண்களின் கருப்பையை வளமாக வைத்திருக்க உதவுகிறது. துளசியின் இலை முதல் வேர் வரைக்கும் மருத்துவ குணங்களை உடையது. அதனாலேயே துளசியை நாம் புனிதமான தாவரமாகக் கருதுகிறோம்.
மூங்கில்
மூங்கிலும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், மூங்கிலை நாம் காடுகளில் வளரக்கூடிய தாவரமாகக் கருதுகிறோம். மூங்கில் வளைந்து செழித்தோங்கும் தாவரம் என்பதால், வீட்டில் செல்வம் பெருகும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக