நவராத்திரியின் ஒன்பது சக்தி எவை தெரியுமா?
நவராத்திரி என்ற வார்த்தையிலேயே நவ என்ற ஒன்பது இலக்கைக் கொண்டு வருகிறது. ஒன்பது நாளும் எதைக் கொண்டாடுகிறோம் பிறப்பின் பெருமையை, படைப்பின் பெருமையை! மரம், செடி முதல் ஊர்வன, பறப்பன முதற்கொண்டு விலங்குகள், மனிதர்கள், மகான்கள், அவதாரங்கள், மும்மூர்த்தி, முத்தேவிகள் என படைப்பின் அத்தனை அம்சங்களையும் கொண்டாடுகிறோம். அத்தனையுமாய் விரிந்து அன்னையானவள் சக்தி தேவியாய் கொலுவிருக்கிறாள் என்பதை! இதை ஒன்பது நாட்கள் கொண்டாடுகிறார்கள்.
பொதுவாக நவராத்திரி என்றால் கொலு வைப்பது, நைவேத்யம் செய்வது, சுற்றி உள்ள சுற்றத்தார், உறவினர், நண்பர்கள் எல்லோரையும் அழைப்பது (யதா சக்தி) பின் எது இயலுமோ அதைத் தாம்பூலமாக தருவது போன்றவை மட்டுமே நமக்குத் தெரியும். இவைகளால் என்ன நன்மை, எதற்குச் செய்ய வேண்டும் என்று யாரும் யோசிப்பதில்லை. நம் முன்னோர்கள் எல்லோரும் செய்வதால் நாமும் அதைச் செய்கிறோம். அப்படியே கடைபிடிக்கிறோம். பித்ரு பக்ஷத்தில் மனபாரத்தை (சுய மற்றும் வம்சாவழி பாபத்தை) ஆத்ம வழிபாடு மூலம் பாரத்தை இறக்கிவிட்டு உடல், மனம் சுத்தியாகி ,பின் அம்பிகை வழிபாட்டின் மூலம் உடலுக்குச் சக்தி சேர்க்கவே ஒன்பது நாள் வழிபாடாக அமைக்கப்பட்டது.
ஒன்பது சக்திகள்
1. பர்வத ராஜ புத்ரி - அம்பிகையின் பிறப்பு (குண்டலினி செயல்பட ஆரம்பிக்கிறது)
2. பிரம்மசாரிணி - சிவனை மணக்க அம்பிகை மேற்கொண்ட தவம் (சுவாதிஷ்டானம்) (இங்கு துவைதம் அத்வைதமாக மாறும். ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர-சக்தியாக தவம் இருப்பது.)
3. சந்திரகண்டா - மணிபூரக சக்ராதான் செயல்புரியும். மனம் புனிதத்தன்மை அடையும்.
4. கூஷ்மாண்டா - அனாஹத சக்கரத்தைப் பிரதிபலிக்கச் செய்யும். தைரியம் மேலிடும். நோய் நொடிகளிலிருந்து தேகம் காக்கப்படும்.
5. ஸ்கந்த மாதா - விசுக்தி சக்கரத்தை தியானிக்கச் செய்யும். தெய்வத்தை, தெய்வ நிலையை அடைய மார்க்கம் கிட்டும். ஒரு வித அமைதி பிறக்கும்.
6. காத்யாயணி - ஆக்ஞா சக்கிரத்தை எண்ணி தவம் செய்ய வேண்டும். இறைவனை உணர, அடைய மேற்கொள்ளும் தியான முறை.
7. காலராத்ரி - சகஸ்ரார சக்ரத்தினை மனதில் இருத்தி செய்யும் தியான நிலை. இத்தடத்திலிருந்து செய்யும் வழிபாடு, தவத்தினால் எல்லா சித்திகளையும் அடையலாம். பற்றுதல்கள் விலகும்.
8. மகா கவுரி - நவராத்ரியில் அஷ்டமி அன்று மேற்கொள்ளப்படும் வழிபாட்டு தினம். காளி அவதார நாள். முன் ஜென்ம வாசனை அறுபடும் நாள்.
9. சித்திராத்ரி - நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று எட்டு சித்திகளையும் பெறுவதாக சித்திராத்ரி என பெயர் பெற்ற இத்தேவியின் தினமாகக் கொண்டாடப்படுவது.
இவ்வாறாக உடலிலுள்ள சக்கரங்களை சித்தி செய்து பெறுவதற்கும், இறை வழிபாட்டில் அமைதி, மேன்மை அடையவும் உலகை வெல்லவும் அன்னையின் நவராத்திரி வழிபாடு கொண்டாடப்படுகிறது.
மஹிஷ ரூபம் என்பது எருமைத் தலையுடன் ராட்சசனாக எங்கிருந்தோ வருவதல்ல. கோபம், த்வேஷம், விஷம், ஏமாற்றுதல், பொய் பேசுதல், அடுத்தவர்களை நோகடிப்பது போன்ற நம்முள் உள்ள ராட்சசர்களை வதம் செய்வதே இந்த நவராத்திரியின் அடிப்படை நோக்கம். இந்த வழிபாட்டின் மூலம் நம்முள் ஏற்படுத்திக் கொண்ட சக்தி, ஆத்ம பலத்தினைக் கொண்டு நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு நிம்மதியான முறையில் அன்புடன் கடமை உணர்வுடன் சேவை செய்வதற்கே. மேலும் நம்மைச் சுற்றிஉள்ள சூழ்நிலையை சந்தோஷமாக மாற்றி நம் ஆன்மிக பலத்தை மெருகேற்றுவதற்காக கொண்டாடப்படுவதே நவராத்திரி வைபவம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக