செல்வமும் புகழும் பெற ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம்,108 போற்றி
செல்வமும் புகழும் பெற ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம் சொல்லி வழிபடுங்கள். எவ்வளவு மோசமான தரித்திரனும் புவனேஸ்வரியை வழிபட செல்வமும் உயர்வும் பெறுவான் என்பது ஐதீகம்.
இந்து சம்பிரதாயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அன்னை மிக உயர்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறாள். இவளை வழிபட கல்வி, செல்வம், வீரம் என யாவும் கிட்டும். எவ்வளவு மோசமான தரித்திரனும் புவனேஸ்வரியை வழிபட செல்வமும் உயர்வும் பெறுவான் என்று சிவபிரானும் கூறுகிறார்.
மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வர்யை நமஹ||
- இந்த மந்திர ஜெபத்தை முதன் முதலில் பௌர்ணமி அன்று தொடங்கவும். மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் பட்டுத்துணி உடுத்தி மஞ்சள் துண்டு விரித்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.
நெய் விளக்கேற்றி விளக்கில் ஸ்ரீ மாதா புவனேஸ்வரியை ஆவாஹனம் செய்து, வாழையிலையில் பச்சரிசி பரப்பி அதில் புவனேஸ்வரி யந்திரம் வைத்து அந்த யந்திரத்தை குங்குமம், ரோஜா இதழ்கள் மற்றும் அக்ஷதையால் அர்ச்சித்து 3000 தடவை மந்திரம் சொல்ல வேண்டும். இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய மந்திரம் சித்தியாகும். பின்னர் அந்த யந்திரத்தையும் ஜப மாலையையும் ஆற்றில் விட்டு விட வேண்டும்.
பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்கு இனிப்பு பண்டம், பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து பூஜையை நிறைவு செய்க.
இந்த ஜெப முறை விரைவான நிறைவான நல்வாழ்வு தரும் என்று சொல்லப்படுகிறது.
ஸ்ரீ புவனேஸ்வரி 108 போற்றி சொல்லி அம்பாளை வழிபடலாம்
ஓம் புவனேஸ்வரி தேவி போற்றி, OM BUVANESWARI DEVI POTRI
ஓம் புவனங்களெலாம் போற்றி, OM BUVANENGALELAAM POTRI
ஓம் கருணைக் கடலே போற்றி, OM KARUNAIK KADALE(Y) POTRI
ஓம் கைலைக் கற்பகமே போற்றி, OM KAILAIK KARPAGAME(Y) POTRI
ஓம் பரமனின் பாதி போற்றி, OM PARAMANIN PAADHI POTRI
ஓம் பரிசுத்த ஒளியே போற்றி, OM PARISUTHTHA OLIYEH POTRI
ஓம் வடிவிலுமையவள் போற்றி, OM VADIVILUMAIYAVAL POTRI
ஓம் அடியாரைப் போற்றி, OM ADIYAARAIP POTRI
ஓம் உற்றவளாமென்று போற்றி, OM UTRAVALAAMENDRU POTRI
ஓம் பெற்றவளாமென்று போற்றி, OM PETRAVALAAMENDRU POTRI
ஓம் கற்றவளாமென்று போற்றி, OM KATTRAVALAAMENDRU POTRI
ஓம் சுற்றத்தவளென்று போற்றி, OM SUTTRATHTHAVALENDRU POTRI
ஓம் கூடவருபவள் போற்றி, OM KOODAVARUBAVAL POTRI
ஓம் நன்கு துணையவள் போற்றி, OM NANGU THUNAIYAVAL POTRI
ஓம் உறவு கொண்டாடி போற்றி, OM URAVU KONDAADI POTRI
ஓம் உடையவள் போற்றி, OM UDAIYAVAL POTRI
ஓம் பேணித்திரிபவள் போற்றி, OM PE(Y)NITHTHIRIBAVAL POTRI
ஓம் பிணியும் தீர்ப்பவள் போற்றி, OM PINIYUM THEERPPAVAL POTRI
ஓம் கண்ணினும் கண்ணே போற்றி, OM KANNINUM KANNE(Y) POTRI
ஓம் எண்ணத்து நிறைவே போற்றி, OM ENNATHTHU NIRAIVE(Y) POTRI
ஓம் வண்ணத்தினுருவே போற்றி, OM VANNATHTHINURUVE(Y) POTRI
ஓம் திண்ணமே வருவாள் போற்றி, OM THINNAMAY VARUVAAL POTRI
ஓம் என்னெலாமவளே போற்றி, OM ENNELAAMAVALE(Y) POTRI
ஓம் புண்யமே போற்றி, OM PUNYAME(Y) POTRI
ஓம் எளிமையில் நிலைவாய் போற்றி, OM ELIMAIYIL NILAIVAAI POTRI
ஓம் முழுமையில் நிறைவாய் போற்றி, OM MUZHUMAIYIL NIRAIVAAI POTRI
ஓம் பழமையில் பலதாய் போற்றி, OM PAZHAMAIYIL PALADHAAI POTRI
ஓம் கிழமையில் பலனாய் போற்றி, OM KIZHAMAIYIL PALANAAI POTRI
ஓம் விழியதில்திறனாய் போற்றி, OM VIZHIYADHILTHIRANAAI POTRI
ஓம் தொழுவதிலுயிராய் போற்றி, OM THOZHUVADHILUYIRAAI POTRI
ஓம் பொழிவதில் மொழியாய் போற்றி, OM POZHIVADHIL MOZHIYAAI POTRI
ஓம் அழிவிளால் போற்றி, OM AZHIVILAAL POTRI
ஓம் தொண்டுசெயக் கண்டாய் போற்றி, OM THONDUSEYAK KANDAAI POTRI
ஓம் ஆண்டுமாட்கொண்டாய் போற்றி, OM AANDUMAATKONDAAI POTRI
ஓம் செண்டினில் வண்டாய் போற்றி, OM SENDINIL VANDAAI POTRI
ஓம் உண்டுண்டு கண்டாய் போற்றி, OM UNDUNDU KANDAAI POTRI
ஓம் தொண்டரின் பெயராய் போற்றி, OM THONDARIN PEYARAAI POTRI
ஓம் தொண்டரின் தொண்டராய் போற்றி, OM THONDARIN THONDARAAI POTRI
ஓம் எண்டிசையெல்லாம் போற்றி, OM ENDISAIYELLAAM POTRI
ஓம் ஆண்டனள் போற்றி, OM AANDANAL POTRI
ஓம் வேதத்தின் பொருளே போற்றி, OM VE(Y)DHATHTHIN PORULAY POTRI
ஓம் நாதத்தின் எல்லையே போற்றி, OM NAADHATHTHIN ELLAIYEH POTRI
ஓம் கீதத்தினுருவே போற்றி, OM GEETHATHTHINURUVAY POTRI
ஓம் பூதலத்துயிரே போற்றி, OM BHOOTHALATHTHUYIRE(Y) POTRI
ஓம் பாதமே நிதியாய் போற்றி, OM PAADHAME(Y) NIDHIYAAI POTRI
ஓம் சாதனை தந்தாய் போற்றி, OM SAADHANAI THANDHAAI POTRI
ஓம் சோதனை களைவாய் போற்றி, OM SOHDHANAI KALAIVAAI POTRI
ஓம் மாதவம் போற்றி, OM MAATHAVAM POTRI
ஓம் காலையின் கதிரே போற்றி, OM KAALAIYIN KADHIRAY POTRI
ஓம் மாலையின் காக்ஷி போற்றி, OM MAALAIYIN KAAKSHI POTRI
ஓம் சிலையதன் வடிவே போற்றி, OM SILAIYADHAN VADIVE(Y) POTRI
ஓம் கலையருள் மருவே போற்றி, OM KALAIYARUL MARUVE(Y) POTRI
ஓம் முல்லைக்கலுருவே போற்றி, OM MULLAIKKALURUVE(Y) POTRI
ஓம் மலையாள பகவதி போற்றி, OM MALAIYAALA BHAGAVADHI POTRI
ஓம் தொல்லைக்கு மருந்தே போற்றி, OM THOLLAIKKU MARUNDHE(Y) POTRI
ஓம் கலைவாணி போற்றி, OM KALAIVAANI POTRI
ஓம் அணிவகுத்தனைவர் போற்றி, OM ANIVAGUTHTHANAIVAR POTRI
ஓம் அணுகுமடியார்கள் போற்றி, OM ANUGUMADIYAARGAL POTRI
ஓம் பிணியதை நீக்கு போற்றி, OM PINIYADHAI NEEKKU POTRI
ஓம் துணைவியாய் நின்று போற்றி, OM THUNAIVIYAAI NINDRU POTRI
ஓம் மணிமந்திரமொலி போற்றி, OM MANIMANDHIRAMOLI POTRI
ஓம் கணமே நினைந்து போற்றி, OM GANAME(Y) NINAINDHU POTRI
ஓம் எண்ணமெல்லாம் நன்று போற்றி, OM ENNAMELLAAM NANDRU POTRI
ஓம் கனியவள் போற்றி, OM KANIYAVAL POTRI
ஓம் வெண்பாலில் மகிழ்ந்து போற்றி, OM VENPAALIL MAGIZHNDHU POTRI
ஓம் எம்பாலிரங்கி போற்றி, OM EMPAALIRANGI POTRI
ஓம் அன்பினைப் பெருக்கி போற்றி, OM ANBINAIP PERUKKI POTRI
ஓம் பண்பொடு நின்றாய் போற்றி, OM PANBHODU NINDRAAI POTRI
ஓம் இன்பமும் தந்தாய் போற்றி, OM INBAMUM THANDHAAI POTRI
ஓம் துன்பமும் களைந்தாய் போற்றி, OM THUNBAMUM KALAINDHDHAAI POTRI
ஓம் என்னகத்தொளியாய் போற்றி, OM ENNAGATHTHOLIYAAI POTRI
ஓம் காண்பவள் போற்றி, OM KAANBAVAL POTRI
ஓம் அருவிபோல் வந்தாய் போற்றி, OM ARUVIPHOL VANDHAAI POTRI
ஓம் அருளாகி நின்றாய் போற்றி, OM ARULAAGI NINDRAAI POTRI
ஓம் அருளதைச் சுரந்தாய் போற்றி, OM ARULADHAI SURANDHAAAI POTRI
ஓம் அறிவுரை மொழிந்தாய் போற்றி, OM ARIVURAI MOZHINDHDHAAI POTRI
ஓம் திருவருள் பெறவே போற்றி, OM THIRUVARUL PERAVE(Y) POTRI
ஓம் உறைவிடம் தந்தாய் போற்றி, OM URAIVIDAM THANDHAAI POTRI
ஓம் உருவிடத்துணையாய் போற்றி, OM URUVIDATHTHUNAIYAAI POTRI
ஓம் மருவினள் போற்றி, OM MARUVINAL POTRI
ஓம் கருமுதல் நாள் போற்றி, OM KARUMUDHAL NAAL POTRI
ஓம் உருகிடத்துவங்கி போற்றி, OM URUGITATHTHUVANDI POTRI
ஓம் திருமுகம் காணப் போற்றி, OM THIRUMUGAM KAANAP POTRI
ஓம் அருகினிலமர்ந்தாய் போற்றி, OM ARUGINILAMARNDHDHAAI POTRI
ஓம் இறுதியாய்ப் பாதம் போற்றி, OM IRUDHIYAAIP PAADHAM POTRI
ஓம் முறுகவே பிடித்தேன் போற்றி, OM MURUGAVE(Y) PIDITHTHE(Y)N POTRI
ஓம் குருவருள் தரவே போற்றி, OM GURUVARUL THARAVE(Y) POTRI
ஓம் வருகிறாய் போற்றி, OM VARUGIRAAI POTRI
ஓம் கள்ளமேயில்லா போற்றி, OM KALLAME(Y)YILLAA POTRI
ஓம் உள்ளமும்தந்தாய் போற்றி, OM ULLAMUM THANDHAAI POTRI
ஓம் வெள்ளமாமிசையும் போற்றி, OM VELLAMAAMISAIYUM POTRI
ஓம் அள்ளியே தந்தாய் போற்றி, OM ALLIIYEH THANDHAAI POTRI
ஓம் பிள்ளைத் தமிழே போற்றி, OM PILLAITH THAMIZHEH POTRI
ஓம் தெள்ளமுதுமானாய் போற்றி, OM THELLAMUDHUMAANAAI POTRI
ஓம் துள்ளியே வந்தாய் போற்றி, OM THULLIYEH VANDHAAI POTRI
ஓம் புள்ளினங்கள் போற்றி, OM PULLINANGAL POTRI
ஓம் நாயினும் கடையேன் போற்றி, OM NAAYINUM KADAIYEHN POTRI
ஓம் நாயனின்னடிமை போற்றி, OM NAAYANINNADIMAI POTRI
ஓம் சேயனவறிந்து போற்றி, OM SE(Y)YANAVARINDHU POTRI
ஓம் தாயெனத் திகழ்ந்து போற்றி, OM THAAYENATH THIGAZHNDHU POTRI
ஓம் ஆசையும் கொண்டு போற்றி, OM AASAIYUM KONDU POTRI
ஓம் நேசமும் கலந்து போற்றி, OM NE(Y)SAMUM KALANDHU POTRI
ஓம் பாசமும் வைத்து போற்றி, OM PAASAMUM VAITHTHU POTRI
ஓம் பூசையும் செய்து போற்றி, OM POOSAIYUM SEIDHU POTRI
ஓம் கயிலையின்எழிலே போற்றி, OM KAIYILAIYINYEZHILEH POTRI
ஓம் மைலையினழகே போற்றி, OM MAYILAIYINAZHAGAY POTRI
ஓம் கோயிலின் திருவே போற்றி, OM KOYILIN THIRUVAY POTRI
ஓம் தாயவள் போற்றி. OM THAAYAVAL POTRI.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக