நவராத்திரி காலத்தில் இல்லத்தில் தினமும் - -என்னென்ன வழிபாடுகளை மேற்கொள்ளலாம்?
இந்த நவராத்திரி புண்ய காலத்தில் தினமும் -
துர்கா ஸுக்தம், ஸ்ரீ ஸுக்தம், மேதா ஸுக்தம் படியுங்கள், கேளுங்கள்.
துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி அஷ்டோத்ரங்கள் சொல்லி அர்ச்சனை செய்யுங்கள். பஞ்சமுக குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதனையே அம்பாளாக பாவித்து அர்ச்சனை வழிபாடுகளைச் செய்யுங்கள். வழிபடுவோருக்கு (பூஜைகளை நியமத்துடன் செய்பவர்களுக்கு) குடும்ப உறுப்பினர்கள் தக்க வகையில் உதவுங்கள். வீட்டிற்கு வரும் யாரும் தண்ணீராவது அருந்தாமல் வெளியில் செல்லக் கூடாது. இல்லத்திற்கு வரும் முன்பின் அறிந்தவர், அறியாதவர் என யாரையும் விட்டுக் கொடுக்காமல் அதிதிக்கு விருந்தோம்பல் செய்யுங்கள்.
பெண்களுக்குத் தாம்பூலம் அளியுங்கள். தாம்பூலமாக அளிக்கும் பரிசுப் பொருட்கள் இயன்றவரை பொதுவில் எவரும் பயன்படுத்தும் வகையில் இருக்கட்டும்.
தினமும் காலை மாலை இரு வேளையும் தூப தீபம், அர்ச்சனை, நிவேதன வழிபாடுகள் செய்யுங்கள். நேரமில்லையே... என நினைக்காமல் ஒரு ஐந்து நிமிடம் வழிபாட்டிற்கு ஒதுக்குங்கள். ஏனெனில் முன்னரே சொன்னது போல், நம்மைச் சுற்றியுள்ள வெளியில் தெய்வீக எனர்ஜி முழுமையாக நிறைந்திருக்கும் காலமிது. அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.
பெண்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அம்பாளாகவே எண்ணி வழிபடுங்கள். பாலா, கன்யா, சுமங்கலி, கணவனை இழந்தோர் என எல்லோரையும் சம பாவனையுடன் பாருங்கள். அவரவர்கள் மனம் நோகாதபடிக்கு பக்குவமாக விருந்தளியுங்கள். வீட்டில் வேலை செய்யும் பணியாட்கள் உட்பட யாரையும் விட்டுக் கொடுக்காமல் எல்லோருக்கும் அம்பாளின் பிரசாதம் போய் சேரட்டும். அஷ்டமி தினத்தன்று தேவி மஹாத்மியம் அல்லது சப்தஸ்லோகி பாராயணம் செய்யுங்கள். துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி காயத்ரி மந்திரங்கள் ஜபிக்கலாம்.
ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம், நவரத்ன மாலா, நவாவர்ண கீர்த்தனை (முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடியது) போன்றவற்றைக் கேளுங்கள். நவாவர்ண பூஜை முழுவதும் இந்த கீர்த்தனை வடிவில் உள்ளது. (இதனைக் கவனித்துக் கேட்பதும், தினமும் பாடுவதும், நவா வர்ண பூஜை செய்த பலனைத் தரும்). ஸ்ரீசக்கரத்தை தீபத்துடன் வைத்து அபிஷேகம் போன்றவற்றை சக்கரத்திற்கு செய்து அர்ச்சனையினை தீபத்துடன் சேர்த்துச் செய்யலாம். ஸ்ரீசக்ரம் வீட்டில் இருப்பதே சுபம் தான். அதனை ப்ராண பிரதிஷ்டை போன்றது செய்யாமலும் புனிதமாகக் கருதி வீட்டில், வண்டியில், அலுவலகத்தில், சட்டைப்பையில் என வைத்திருக்கலாம். அன்னையின் ஸ்வரூபமாக ஸ்ரீசக்ரம் கருதப்படுவதால் அன்னையை மனதார நினைத்தாலே உடனே அருள்தருபவள் என்பதால் அவள் விசேஷ ஆராதனைகளை எதிர்ப்பார்ப்பவள் அல்ல. அப்படிப்பட்ட நினைத்த நேரத்தில் கோட்டையாக வந்து காக்கும் அன்னையை முறையே வழிபட்டுப் பூரண பலன் பெறுவது மானிடர்களாகிய நம் கடமையாக எண்ணிச் செய்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக