புதன், 24 ஜனவரி, 2018

வேண்டுதல் நிறைவேற காமாட்சி அம்மனுக்கு எலுமிச்சை மாலை …


வேண்டுதல் நிறைவேற காமாட்சி அம்மனுக்கு எலுமிச்சை மாலை …




எல்லாத் தீமைகளையும் அழித்து எல்லாத் தடைகளையும் போக்கி நல்வாழ்க்கையைத் தருபவள் காமாட்சியே ஆவாள். வெற்றியை விரும்புவோர் காமாட்சியை விரும்பி வழிபடுவார்கள்.
சிவன், விஷ்ணு, பிரம்மன், யமன், இந்திரன், முதலான தேவர்களின் மகாசக்திகளின் ஒட்டு மொத்த வடிவமாக காமாட்சி விளங்குவதால் அவள் பல ரூபங்களை கொண்டவள்.
அவளை நினைத்தாலும் அவளுடைய மகாமந்திரங்களை ஜபித்தாலும் நமக்கு ஏற்படக்கூடிய மரண பயம், இகலோக பயம், பரலோக பயம், அரவு பயம், சுருதி பயம், வேதனா பயங்கள்உள்ளிட்ட அனைத்து பயங்களும் ஓடி ஒளிகின்றன.ஆடி மாதம் முழுவதும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் காமாட்சியை வழிபடுவது சாலச்சிறந்தது.
ஒருவருடைய ஜாதகத்தில் கிரக தோஷத்தால் திருமணத் தடைகள் ஏற்பட்டிருக்கலாம். இதிலிருந்து நிவர்த்தி பெற காமாட்சிக்கு புடவை சார்த்தி எலுமிச்சம்பழ மாலை, செவ்வரளி மாலை அணிவித்து பசு நெய் அல்லது நல்லெண்ணையால் தன் வயது எண்ணிக்கையுள்ள தீபம் ஏற்றி குங்குமத்தால் அருச்சனை செய்தால் திருமணத் தடைகள் நீங்கும். மகப்பேறு, தொழில், அபிவிருத்தி, கல்வியில் தேர்ச்சி மற்றும் சகல செல்வங்களும் பெருகும்.காமாட்சி அம்மனுக்கு எலுமிச்சை மாலை … க்கான பட முடிவு


அம்பாளுக்கு எலுமிச்சை பழம் மாலை சார்த்தும் போது 18, 27, 54, 108, 1008 எண்ணிக்கை உள்ள எலுமிச்சம் பழ மாலையைச் சாற்றுவதால் நமக்கு உண்டாகும் உக்கிரமமான நோய்கள், வயிற்று உபாதைகள் தணிகின்றன. தீராத துன்பங்கள் நீங்குகின்றன.காமாட்சி மற்றும் துர்க்கை அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படும் சிறப்புடையது எலுமிச்சம்பழம், இதனை குறுக்குவாட்டில் இரண்டாக நறுக்கி சாற்றை பிழிந்துவிட்டு மூடியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி வந்தால் அம்மனின் அருள் எளிதில் கிடைக்கும். கன்னிப்பெண்கள் இவ்வாறு விளக்கேற்றி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
எலுமிச்சம் பழங்களை மாலையாகத் தொடுத்து காமாட்சி அம்மனுக்கு அணியும் வழக்கமும் உள்ளது. இவ்வாறு செய்வதால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும்.எலுமிச்சை ஜீவ கனி மட்டுமல்ல. வெற்றிக் கனியுமாகும். அந்தக் காலத்தில் அரசர்கள் எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் முன்பாக காவல் தெய்வம், எல்லைத் தெய்வம் சம்கார தெய்வங்களை எலுமிச்சை மாலை அணிவித்து, அந்த தெய்வங்கள் முன்பாக நின்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்பிறகு தங்களது படைகளை வழி நடத்திச் செல்வார்கள்.


போரில் வாகை சூடி திரும்பி வந்த பின்பு மீண்டும் எலுமிச்சை மாலை சூடி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது.பில்லி, சூனியம், மாந்திரீகம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கும் காளி அம்மனுக்கு எலுமிச்சை மாலை சூடி வணங்கி வழிபடுவதை திருவக்கரை வக்கிர காளியம்மன், பட்டீஸ்வரம் துர்கையம்மன் உள்ளிட்ட பல முக்கிய ஆலய வழிபாடுகளில் பிராதானமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக