சனி, 27 ஜனவரி, 2018

குறைவில்லா வாழ்வு தரும் தைப்பூச திருநாள்.!

குறைவில்லா வாழ்வு தரும் தைப்பூச திருநாள்.!


தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அத்தனை மகத்துவம் நிறைந்தஇந்த தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் அமையும் தைப்பூச திருநாள்முருகப்பெருமானின் பேரருள் கிடைக்க 
வழிவகுக்கிறது. தைப்பூசம் அன்றுமுருகப்பெருமானை கண் குளிர தரிசித்தால், பால் பொங்குவது போல்,இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும். முருகப் பெருமான்நிகழ்த்திய அற்புதங்கள் பல்லாயிரம். அதில் ஒன்றாக, இதே தைப்பூசம்திருநாளில்  வாய் பேச முடியாத குழந்தையை பேச வைத்த முருகப்பெருமானின் அற்புத சம்பவம் ஒன்றை தெரிந்துக்கொள்வோம்.




பேசாத வாய் பேசியது

சோமசுந்தரப் படையாச்சி- சுப்பம்மா என்ற தம்பதியினருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.இந்திரனை போல் அழகாக குழந்தை திகழ்ந்ததால் இந்திரன் என பெயர் சூட்டினர். வசீகரத்தை தந்தஇறைவன், வாய் திறந்து பேசும் பாக்கியத்தை அந்த குழந்தைக்கு தரவில்லை. மற்ற பிள்ளைகள் நன்றாகபேசும்போது, தன் மகன் இந்திரன் பேச முடியாமல் அவதிபடுகிறானே, அவன் நம்மை அம்மா- அப்பா என்று அழைக்க மாட்டானா? அவன் எதிர்காலம் என்ன ஆகும்? என்று வருந்தினார்கள் இந்திரனின்  பெற்றோர்.

காலமும்  நேரமும் கூடி வந்தால் வராத சொந்தங்களும் வரும், கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். அவ்வாறே சிறுவன் இந்திரனுக்கும் விடிவு காலம் வந்தது.

குக ஸ்ரீ. அருணாசல அரனடிகள். இவர் சிறந்த வரகவி. இவரை பற்றி கேள்விப்பட்ட இந்திரனின்பெற்றோர், மகனை அழைத்துக்கொண்டு அரனடிகளை சந்தித்து, தங்கள் மகனின் குறையை பற்றிசொன்னார்கள்.

கவலைவேண்டாம். முருகப்பெருமானின் கருணை உங்கள் மகனுக்கு இருக்கிறது. நிச்சயம் உங்கள்மகன் பேசுவான். தைப்பூசம் அன்று உங்கள் மகனை பால் காவடி எடுக்கச்சொல்லுங்கள். பால், 
வயிற்றை குளிர்விப்பதுபோல், முருகப்பெருமானையும் குளிர்விக்கும். அத்துடன் முருகப்பெருமானின் பெயரில் பத்துபதிகம் எழுதித் தருகிறேன். அந்த பதிகங்களை முருகனின் சன்னதியில் நீங்கள் பாடுங்கள்.  பிறகு என்அப்பன் முருகன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான்.” என்று கூறி பத்துப் பதிகங்களை எழுதி, இந்திரனின் பெற்றோரிடம் கொடுத்து, குழந்தையை ஆசீர்வதித்தார் சுவாமிகள்.



என்றைக்கு தைப்பூசம் வரும்? நம் குழந்தை அன்றைக்கு சுவாமிகள் சொன்னது போல் பேச வேண்டும். குழந்தை பேசுவதை கேட்க வேண்டும்.” என்று ஆவலாக காத்திருந்தனர்.

இவர்கள் எதிர்பார்த்த தைப்பூச திருநாள் வந்தது.

முருகப் பெருமான் இந்திரனை பால்குடம் எடுக்க செய்தார்கள். பால்குடம் எடுத்த பிறகு, சிறுவன்
இந்திரனை அழைத்துகொண்டு, முருகன் சந்நதியில் நின்று சோமசுந்தரப் படையாச்சியும் 
அவருடையமனைவி சுப்பம்மாவும் அரனடிகள் எழுதிகொடுத்த பத்து பதிகங்களை நம்பிக்கையுடன் பாடினார்கள்.


அப்போது, அந்த அற்புதத்தை நிகழ்த்தி காட்டினான் கந்தன். ஸ்ரீ அருணாசல அரனடிகள் சொன்னதுபோல் பத்தாவது பதிகத்தை மனம் உருகி பாடி முடித்தவுடன், அதுவரையில் பேசமுடியாமல் அவதிபட்டசிறுவன் இந்திரன் முருகப்பெருமானின் அருளால், “அம்மா  அப்பா என்று தன் தாய்-தந்தையை பார்த்துஅழைத்தான்  பேசினான்.

இப்படிபட்ட அற்புதங்களை சர்வசாதாரணமாக முருகப்பெருமான் நிகழ்த்துவார். நம்பியவர்களை காக்கும்கண்கண்ட தெய்வம் கந்தன். கந்தன் இருக்க குறை ஏது?

தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு பால்குடம் அல்லது காவடி எடுத்து முருகப்பெருமானைவணங்குவோம்  நலன்கள் யாவும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

வேல் உண்டு வினை இல்லை.மயில் உண்டு பயம் இல்லை.
குகன் உண்டு குறை இல்லை.

கந்தனுக்கு அரோகரா. முருகனுக்கு அரோகரா. 
வேலனுக்கு அரோகரா.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக