கிராமங்களில் பொங்கல் அன்று காலையில் பார்ப்பவர்கள் எல்லாம் முதலில் ”””பால் பொங்கிருச்சா””” என்று தான் கேட்பார்கள் அதற்கு மற்றவர்கள் ”””பால் பொங்கிருச்சு”””என்று சொல்லிவிட்டு உங்களுக்கு என்று திருப்பி கேட்பார்கள். இது மிகவும் சுவையான அனுபவம். சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல் , பலகாய் குழம்பு என்று இம் மூன்றையும் செய்து கடவுளுக்கு படைத்து குடும்பத்துடன் சந்தோஷமாக உண்பார்கள். அந்தநாளில் இருக்கும் இன்பம் அந்த ஆண்டு முழுவதும் இருக்கும் என்பது நம்மிக்கை.
சக்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – 1/2 கிலோ
- பாசிப்பருப்பு – 200 கிராம்
- வெல்லம் – 1 கிலோ
- பால் – 1/2 லிட்டர்
- நெய் – 100 கிராம்
- முந்திரி – 100
- சுக்கு – சிறிது
- ஏலக்காய் – 10
- தேங்காய் – 1
முதலில் செய்யவேண்டியவை:
- அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
- பாசிப்பருப்பை ஒரு வடச்சட்டியில் (வாணலியில்) போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும்.
- முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
- தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும்.
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்.
- அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- அதன் பிறகு ஏலக்காய், சுக்கு பவுடரையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால் மிகவும் சுவையான சக்கரைப் பொங்கல் தயார்.
சிறிய குடும்பமாக இருந்தால் 1டம்ளர் அரிசிக்கு 1/4டம்ளர் பாசி பருப்பு போட்டு 4டம்ளர் தண்ணீரும் ,1டம்ளர் பாலும் சேர்த்து குக்கரில் வைத்தால் சரியாக இருக்கும்.ஒன்றரை டம்ளர் வெல்லம் சேர்க்கவும்.மீது பொருட்கள் உங்கள் விருப்பப்படி சேர்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக