ஐப்பசி மாத பௌர்ணமியை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் |
அன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் சொல்லப்படுகிறது . தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் என்பது நாம் அறிந்ததே . உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது மிகவும் இன்றியமையாததொன்று . அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறைவன் விலகியே நிற்பன் என்று வேதசாஸ்திரம் கூறுகிறது . அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே இன்றும் பல கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னமானது பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது .
தட்சன் என்பவனுக்கு 27 பெண் பிள்ளைகள் உண்டு . அவர்கள் அனைவரையும் சந்திரன் மணம் முடித்துக் கொண்டான். ஆனால் அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அவன் அதிக காதலுடன் இருந்ததாக புராண கதைகள் சொல்கின்றது . இதுபற்றி மற்ற பெண்கள் தன் தந்தையிடம் புகார் செய்ய . திரு மணம் செய்து கொடுக்கும்போது, அனைத்து பெண்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியிருந்த வார்த்தை சந்திரன் மீறிவிட்டதாக தட்சன் கருதுகிறான் , எனவே தட்சன் சந்திரனுக்கு சாபம் கொடுக்கின்றான் . இதனால் சந்திரன் கலை இழந்து தேயத் தொடங்குகிறார் . அதன்பிறகு சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகிறது
சந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபடுகிறார்கள்
சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது அறிவியல் ரீதியாகவும் உலகில் நிரூபிக்கப்பட்டது . அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கிறோம் என்பதை
நாம் அறியவேண்டும்
சந்திரனின் சாபம் தீர்ந்ததற்காகவா நாம், ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம். அது மட்டுமே காரணம் அல்ல.. இந்த நிகழ்வுக்கு ஆன்மிக ரீதியான அறிவார்ந்த தத்துவம் ஒன்று குறிப்பிடப்படுகிறது வேத புத்தகங்களில்
சிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி என்பதை அறிக இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.
இந்தத் தகவலைச் சொன்ன திரு மூலருக்கும் கூட ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது நாம் யாவரும் அறியவேண்டிய ஒன்றாகும்.. அதனால்தான் போலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம். ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம். அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தமாக இருக்கிறது. இதுபற்றி கந்தபுராணத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது
அன்றைய தினம் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் காட்டுவார்கள் . தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படுகிறது . இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.
ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான- தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் இதில் இருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம் .-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக