விஷ்ணு துர்க்கையும் ,சிவதுர்க்கையும்
அன்பார்ந்த என் ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய காலை வணக்கங்கள்.
நாம் எல்லோரும் சிவன்,விஷ்ணு கோவில்களில் துர்க்கையை சிவதுர்க்கையாகவும்,விஷ்ணு துர்க்கையாகவும் வழிபட்டு வந்திருப்போம்.எனக்குள் இந்த வித்தியாசம் என்ன? என்பதை அறிய என் உள்ளம் ஏங்கியது.அதன் பொருட்டு, எனக்கு தெரிந்த அறிந்தவற்றை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
விஷ்ணு துர்க்கை
நான்கு கரங்களுடன் குறிப்பாக தனது இரண்டு கைகளிலும் சங்கமும் சக்ரமும் ஏந்தி ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாகக் காட்சி தருபவள் விஷ்ணுதுர்க்கை எனப்படுகிறாள்.
சிவதுர்க்கை
பதினெட்டு அல்லது எட்டு அல்லது நான்கு கைகளுடனும் ஒவ்வொரு கைகளிலும் கத்தி சூலம் போன்ற ஆயுதங்களுடனும், அசுரர்களை எதிர்த்து போரிடும் உக்ர ஸ்வரூபமாகக் காட்சிக் கொடுப்பவள் சிவதுர்க்கை எனப்படுகிறாள். சும்பன் நிசும்பன் சக்தபீஜன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்காக தேவர்களின் வேண்டுதலை ஏற்று பூமியில் சிம்ம வாகனத்துடன் தோன்றி காட்சியளிப்பவள் சிவதுர்க்கை எனப்படுகிறாள்.
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் கட்டளைப்படி மதுரா நகரத்தில் தேவகியின் வயிற்றில் தோன்றிய ஏழாவது கர்ப்பத்தை ஆகர்ஷித்து இழுத்துக்கொண்டு போய் நந்தகோகுலத்தில் ரோஹிணி என்பவளின் கர்ப்பத்தில் சேர்த்துவிட்டு தானும் யசோதைக்குப் பெண் குழந்தையாகப் பிறந்து கம்சனுக்கு அறிவுரை சொல்லி ஆகாசத்தில் காட்சி தந்தவள் விஷ்ணு துர்கை எனப்படுகிறாள் என்கிறது ஸ்ரீ பாகவதம். ஆகவே கைகளில் சங்கும் சக்ரமும் இருந்தால் அந்த தெய்வம் விஷ்ணு துர்கை என்றும் சங்கு சக்கரம் இல்லாமல் மற்ற ஆயுதங்களை தாங்கிக் கொண்டிருந்தால் அது சிவ துர்கை என்றும் பொதுவாக புரிந்து கொள்ளலாம்.
நாம் வணங்கும் தெய்வங்களின் வரலாறுகளை அறிந்து வணங்கினால் அது நமக்கு மேலும் கடவுளை வணங்குவது ஆத்மார்த்தமாக இருக்கும்.
என்னுடைய பதிவுகள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.உங்கள் கருத்தையும் பகிர்ந்தால் மேலும் நிறைய பதிவுகள் எழுத ஒரு தூண்டுகோலாக அமையும்.
உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக