அஷ்டமா சித்திகள் ( எட்டுவகை சக்திகள் )
அட்டமா சித்தி என்றால் என்ன?அட்டமா சித்தி எட்டு வகையான அபுர்வ சக்திகளை சித்தர்கள் தங்களது தவ வலிமையாலும் இறைவனின் அருளாலும் பெறப் பட்டதே அட்டமா சித்தி எனப்படும்.
ஆஞ்சநேயர் " ராம நாமத்தை" அடிக்கடி ஜபித்து வந்ததால் அஷ்டமா சித்திகள் எனப்படும் எட்டுவகை சக்திகளை பெற்றார்,
எட்டு வகையான சித்திகளின் பெயர்கள் வருமாறு:
அணிமா:
பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.ப்ரிங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.
மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டிஉலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.
லஹிமா:கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்ததுலஹிமா ஆகும்.
கரிமா:இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.
பிராத்தி:எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்"என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்குதிசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக