அன்பார்ந்த ஆன்மீகத் தோழிகளே என்னுடைய இனிய நமஸ்காரங்கள்.
எனக்கு தெரிந்த,அறிந்த விஷயங்களை என் போன்ற சக அன்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த பதிவை போடுகிறேன்.என் பதிவுகள் மிகவும் பனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஒரு குடும்பத்தின் தலைவி மகிழ்ச்சியாக இருந்தால்தான், அவள் கணவன்,குழந்தைகள்,மாமன் மாமியார் சந்தோஷமாக இருக்க முடியும்.அந்த மகிழ்ச்சி அம்பாளை வழிபடுவதிலேதான் கிடைக்கும்.ஆகையால் குடும்பத்தலைவி அம்பாளின் அருளை அறிந்து, தன் வீட்டை சுத்தமாக வைத்து கொண்டு ,தினமும் பூஜைகள் செய்து வருவது அந்த வீட்டிற்கு சகல செளபாக்கியத்தையும் கொடுக்கும்.அதன் அடிப்படையில்தான் இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள்
✡ சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது. இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது.
✡ பெண்கள் கையில் வளையல் அணியாமலும், தலையை விரித்துப் போட்டும் விளக்கேற்றக் கூடாது.
✡ வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போதும் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் போது எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.
✡ தன் கணவன் உத்தரவின் பேரில் தானதர்மம் மற்றும் விரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
✡ பெண்கள் பூசணிக்காயை உடைக்கக் கூடாது. அரிவாளாலோ, கத்தியினாலாவது முழுக்காயை உடைக்கலாகாது.
✡ கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக் கூடாது. உடைக்கும் அதிர்ச்சி நுண்ணலைகள் மூலம் கர்ப்பத்தைத் தாக்கும்.
✡ இரவில் வீட்டைப் பெருக்கலாகாது. பெருக்கினாலும் குப்பையை தெருவில் கொட்டக் கூடாது. பகலில் குப்பையை வீட்டினுள் ஓரிடத்தில் குவித்து வைக்கலாகாது. அப்படி மூலையில் குவித்து வைத்தால் நல்ல நாளில் எல்லோருடனும் கலந்து இருக்க முடியாமல் விலக்கிவிடும்.
✡ அதிகாலையில் எழுந்து சாணம் தெளித்து கோலம் போட வேண்டும். வேலைக்காரர்களை வைத்து கோலமிடக் கூடாது. அந்த வீட்டின் பெண்ணே இந்த வேலையை செய்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.
✡ உணவுக்கு இலை போடும் முன் இலைக்குக் கீழே பசும் சாணி அல்லது வெறும் ஜலத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.
✡ கையால் அன்னத்தையோ காய்கறிகளையோ பரிமாறக் கூடாது.
✡ எந்தப் பொருளையும் இல்லை என்று கூறாமல் அந்தப் பொருள் வேண்டும். இந்தப் பொருள் வேண்டும், வாங்கி வாருங்கள் என்றே கூற வேண்டும்.
✡ எந்தக் குறையையும் எண்ணிக் கண்ணீர் விடக்கூடாது, அழுத வீட்டில் செல்வம் நிற்காது.
✡ பிரதோஷ காலத்தில் அதாவது மாலை 6 மணியளவில் பெண்கள் வீட்டில் படுத்திருக்கக் கூடாது.
✡ அம்மி, உரல் மீது அமரக் கூடாது. வீட்டு வாசற்படியை மிதிக்கக் கூடாது.
✡ கஷ்டம் வரும்போது அசப்தங்களைக் கூறக்கூடாது.
✡ அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.
✡ மாலை நேரங்களில் தீபம் ஏற்றி நமஸ்கரிக்கும் பெண்மணிக்கு ஆசிகூறத் தேவர்கள் இல்லங்களுக்கு வருகின்றார்கள். எனவே தீபம் வைக்கும் நேரத்தில் பெண்கள் வேறு இடங்களுக்குச் செல்லக் கூடாது.
இதன்படி நடந்து நம் குடும்பத்தில் சந்தோஷமும் ,நிம்மதியும் நிலைக்க செய்வோமாக
நன்றி வணக்கம்
உங்கள் தோழி ஈஸ்வரி சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக