புதன், 21 பிப்ரவரி, 2018

உன்னத மகிமை வாய்ந்த உதி

shirdi sai baba images க்கான பட முடிவு

உன்னத மகிமை வாய்ந்த உதி

தானத்தில் சிறந்தது அன்னதானம். ஷீரடி சாயிபாபாவினுடைய பிரார்த்தனைகளில் அன்னதானமே முக்கியமானது. இதனை விளக்கும் ஒரு சம்பவம், சாய்சத் சரிதத்திலிருந்து: பாபாவின் பக்தரான சந்தோர்கர், தினந்தோறும் அதிதிகளுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் பாபாவிடம் ‘‘நான் தினந்தோறும் காக்கைகளுக்கு உணவு வைத்துவிட்டு அதிதிகளுக்காக காத்திருப்பேன். ஆனால். அவர்கள் வருவதே இல்லை. ஏன் பாபா இவ்வாறு நடக்கிறது’’ என்று சந்தோர்கர் வெகுளித்தனமாகக் கேட்டார். ‘‘நீ ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்?’’ என்று அவரிடம் திரும்பிக் கேட்டார் பாபா. ‘‘நமது சாஸ்திரங்களும், வேதங்களும் இப்படித்தானே பாபா சொல்லி இருக்கிறது, அதைத்தான் நான் கடைபிடிக்கிறேன்’’ என்றார் சந்தோர்கர். ‘‘நானா, சாஸ்திரங்களில் தப்பில்லை, வேதங்களிலும் குறையில்லை. ஆனால். அவற்றின் உண்மையான பொருளை சரியாக நீ புரிந்துகொள்ளாமல் இருக்கிறாய்.

அதனால்தான் அதிதிகளுக்காக தினமும் காத்திருப்பதாக விசனப்பட்டுக் கொள்கிறாய். அதிதி என்பவன் யார்? மனித உருவத்தில் மட்டுமல்லாமல் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் உருவத்தில் இருப்பவைகூட அதிதிகள்தான். நீ உணவளிக்கும்போது அதனை உண்பதற்காக பசியுடன் யார் அல்லது எது வந்தாலும் அது அதிதிதான். நிறைய காக்கைகள் வரும்போது நிறைய அன்னத்தை அவற்றிற்கு வழங்கு. உயிருள்ள எந்த ஜீவன் வேண்டுமானாலும் சாப்பிடட்டும் என்று நினை. அப்படிச் செய்தால் அதிதிகளுக்கு உணவளித்த புண்ணியம் உனக்குக் கிடைக்கும்’’ என்று பாபா விளக்கமளித்தார். மனித ரூப அதிதிகளுக்காகக் காத்திருக்காமல், பசியோடு, உணவுதேடி வரும் எந்த ஜீவனுக்கும் அளிப்பதே அன்னதானம் என்பதைப் புரிந்துகொண்டார் சந்தோர்கர். கால் மேல் காலைப்போட்டு அமரும் பாபாவின் உருவ அமைப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இந்த உருவப்படம் மிகவும் சக்தி வாய்ந்ததாக பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது. தொடர்புடைய படம்

பாபா அவர்கள் தனது வலதுகாலை, இடது முழங்கால் மீது போட்டு தனது இடதுகையை வலதுகால் பாதத்தின் மீது படரவிட்டுள்ளார். திரு.ஹேமாந்த் பந்த் (ஸ்ரீசாய் சத்சரித ஆசிரியர்), பாபாவின் இடதுகை ஆள்காட்டி விரலுக்கும், நடுவிரலுக்கும் நடுவே உள்ள வலதுகால் பெருவிரலை, இரண்டு மரக்கிளைகளுக்கு இடையே உள்ள சூரியனை பார்ப்பதுபோல் தரிசித்து பாபாவின் ஆசிஒளியைப் பெறலாம் எனக் கூறுகிறார். மேலும் ஹேமாந்த் பந்த் அவர்கள், பாபாவின் பாதங்களை நமது கண்ணீரால் கழுவுவதாக மனதளவில் நினைத்தால் இதயம் தூய்மை அடையும் என்றும், அன்பை சந்தனமாக பூசச்சொல்லியும், நமது நம்பிக்கையை பாபாவின் மேலாடையாகவும் கருதச் சொல்கிறார். நமது சிரசை பாபாவின் பாதத்தின் மீது வைத்து வணங்கிய பின்னர், நமது பக்தியை சாமரமாகக் கொண்டு வீசி, பாபாவின் வெப்பத்தை தணிக்கச் சொல்கிறார். தொடர்புடைய படம்
ஒருவர் ஷீரடி சாயிபாபாவின் பரம பக்தர். அவரது மனைவி பிரசவம் ஆன இரண்டு நாட்கள் கழித்து வயிறு உப்பி மூச்சுவிட முடியாமல் கஷ்டப்பட்டார்.

பிரசவம் பார்த்த பெண் மருத்துவர் இவரது மனைவியை வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச்சொல்லச் சொல்லிவிட்டார். இதனைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்துவிட்டனர். பக்தர் ‘‘பாபா தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்றுங்கள்’’ என்று சத்தம் போட்டு பிரார்த்திக்க ஆரம்பித்தார். கூடியிருந்த அனைவரும் அவரை வியப்புடன் பார்த்தார்கள். பக்தர் அவரது மனைவியின் வலது மணிக்கட்டில், ஷீரடி பாபா புனித கயிற்றைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் உதி என்ற சாம்பலைத் தடவினார். (ஷீரடி பாபா ஆலயங்களில் எப்போதும் அணையாது ஓர் அடுப்பு எரிந்துகொண்டிருக்கும். அதிலிருந்து கிடைக்கும் சாம்பலைத்தான் உதி என்கிறார்கள்) சிறிது உதியை மனைவியின் வாயில் இட்டார். அடுத்த ஐந்தாவது நிமிடம், மனைவியின் உப்பிய வயிறு சகஜ நிலைக்கு வந்தது. எல்லோரும் கண்ணீருடன் பாபாவை பிரார்த்தித்தனர். ஷீரடி சாயிநாதர் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைவோரை பாபா கைவிடவே மாட்டார். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு ஒருவர் கற்றுத்தந்த மிகவும் சக்தி வாய்ந்த ஷீரடி சாய் மந்திரம் இதோ. இதை 9 முறை தினசரி பாராயணம் செய்ய, வாழ்வில் அற்புதங்கள் நடப்பதை உணரலாம்.

‘‘ப்ரதமம் சாயி நாதாய துவிதியம் துவாரக மாயினே
திரிதீயகம் தீர்த்த ராஜ சதுர்த்தகம் பக்த வத்சலா
பஞ்சமம் பரமத் மாயா சஷ்டமம் ஷீரடி வாசாய
சப்தமம் சத்குரு நாதாய அஷ்டமம் ஆனந்த நாதாய
நவமம் நிராதம்பராய தசமம் தத்த அவதாராய
ஏதானி தச நாமாணி திரிசண்டியம் யஹா படேன் நேரஹா
சர்வ கஷ்டோ பயமுக்தோ சாயி நாத குரு கிருபா.’’

மேலும் ‘சாய் சத்சரிதத்தின்’ 11 மற்றும் 15வது அத்தியாயங்களை 48 நாட்கள் தினமும் பாராயணம் செய்தால் சூரியனைக் கண்ட பனிபோல கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடுகின்றன என்பது ஷீரடி சாயிபாபா பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

நிறைகுடம் ஏன் வைக்கவேண்டும் !!



நிறைகுடம் ஏன் வைக்கவேண்டும் !!




























சைவத் தமிழ் மக்கள்; தங்கள் கலை, கலாச்சார, சமூக நிகழ்வுகளின் போதும், விசேஷ பண்டிகை கொண்டாட்டங்களின் போதும், சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் நிறை குடம் வைத்து வரவேற்பதும், ஆரத்தி செய்வதும் ஆகம மரபு வழி வந்த வழக்கமாகும்.
சுபநாட்களில் வீட்டு வாசலில் நிறை குடம் வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப்பெற்று இருக்கும்எனவும், இதை மங்களத்தின் அறிகுறியாக இந்துக்கள் போற்றுகின்றார்கள். அத்துடன் நிறைகுடம் வைக்கும் இடத்தில் ஸ்ரீமகா லட்சுமி  வாசம் செய்வாள் (வருகை தருவாள்) என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. 
நிறைகுடம் வைக்கத் தேவையான பொருட்கள் 
1. நிறை குடம் (நீர் நிறைத்த குடம்)
2. சாணம் அல்லது மஞ்சளினால் செய்த பிள்ளையார் அல்லது பிள்ளையார் சிலை.
3. நெல் அல்லது பச்சரிசி
4. தலை வாழையிலை
5. முடித் தேங்காய் - 1 
6. மாவிலை 5 அல்லது 7
7. குத்து விளக்கு 2
8. தேங்காய் எண்ணெய்
9. விளக்குத் திரி
10. விபூதி + கிண்ணம்
11. சந்தனம் + கிண்ணம்
12. குங்குமம் + கிண்ணம்
13. பன்னீர் + செம்பு 
14. பலநிறப் பூக்கள்
15. வாழைப்பழம் - ஒரு சீப்பு
16. தேங்காய் – 1 உடைப்பதற்கு
17. வெற்றிலை 3
18. பாக்கு 3
19. சாம்பிராணி
நிறைகுடம் வைத்தல்

ஒரு மேசையைச் சுத்தம் செய்து, அதன்மீது சுத்தமான விரிப்பொன்றை விரிக்கவும். அதன்பின் அதன்மீது ஒரு தலைவாழை இலையை இலையின் நுனிப்பகுதி வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ அமையுமாறு வைக்கவும். இம் முறை அவ்விடத்திற்கு பொருந்தாவிட்டால், பொதுவாக வரவேற்பு நிகழ்வாக இருந்தால் வருபவர்களுக்கு வலப்பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்கக் கூடியதாக வாழைஇலையை வைக்கவும்.
அதன் மேல் நெல் அல்லது அரிசி பரப்பி அதன்மேல் நீர் நிரப்பிய பித்தளை அல்லது சில்வரினால் ஆன கும்ப குடத்தை வைக்கவும். அதன் இரு பக்கங்களிலும் குத்துவிளக்கு ஒவ்வொன்று வைக்கவும். அதன் பின் ஐந்து மாவிலைகளை குடத்தின் வாயில் வைத்து சுத்தம் செய்து வைத்த முடித்தேங்காயை அதன் மேல் வைக்கவும், அமங்கல கிரியைகளுக்கு கும்பம் வைக்கும் போது மாத்திரம் மூன்று மாவிலைகள் வைப்பார்கள்.
ஒரு தட்டத்தில்(தட்டில்) வாழைப்பழச்சீப்பு ஒன்றும், வெற்றிலைபாக்கு (வெற்றிலை ஒற்றைவிழும் எண்ணில்), தேசிக்காய் ஒன்றும்(வைக்கலாம் அல்லது தவிர்க்கலாம்) கும்பத்தின் இடது பக்கத்தில் வைத்து அதனுள் மஞ்சளினால் செய்த பிள்ளையார் அல்லது சிறிய பிள்ளையார் சிலையையும் வைக்கவும்.
இன்னொரு தட்டத்தில் அல்லது தட்டில் சந்தனம், குங்குமம், பன்னீர்ச்செம்பு, விபூதி வைத்து வலப்பக்கத்தில் வைக்கவும். நிறைகுடத்திற்கு ஒரு மாலையும் போடலாம். அல்லது பூக்களினால் அலங்கரிக்கலாம். குத்து விளக்குகளிற்கும் பூக்கள் வைக்கலாம்.
நிகழ்வு ஆரம்பமாவதற்கு முதல் இரண்டு குத்து விளக்குகளிலும் திரிகளில் ஒவ்வொன்றையோ அல்லது ஐந்தையுமோ கொழுத்தி விடவும். ஒரு தேங்காயை உடைத்து கும்பத்தின் இரு பக்கங்களிலும் வைக்கவும். அத்துடன் தூபம் ஏற்றுதல் வேண்டும். ஒன்று அல்லது மூன்று சாம்பிறாணிக் குச்சிகளைக் கொழுத்தி வாழைப் பழத்தில் குத்தி விடலாம்.
ஆரத்தி எடுத்தல்:

மங்கள காரியங்களுக்கு  ஆரத்தி எடுக்கும் போது சுமங்கலிப் பெண்கள் இருவர் கும்பத்திற்கு முன்னால் நின்று ஆரத்திக்குரியவரை கும்பத்தை பார்த்துக் கொண்டு நிற்கச் செய்து ஆரத்திக்கு உரியவரின் கீழ்ப் பக்கத்தில் ஆராத்தித் தட்டை வலது, இடது பக்கமாக மூன்று முறை ஆட்டி அதன்பின் ஆராத்திக் குரியவரின் வலது பக்கமாக மேலே உயர்த்தி இடது பக்கத்தால் கீழே இறக்கி மீண்டும் கீழே மூன்று முறை ஆட்டி திரும்பவும் இவ்வாறு மூன்று முறை செய்யவும். 
மூன்றாவது சுற்று இறுதியில் ஆராத்தித் தட்டை நடுவே கொண்டு வந்து திரி ஆராத்தியாயின் அவற்றை தட்டில்லுள்ள மஞ்சள்-குஞ்கும கலவையில் அமிழ்த்தி நூர்த்தபின் திரிக் கரியுடன் சேர்ந்த மஞ்சளை-குங்குமத்தை ஆராத்திக் குரியவரின் நெற்றியில் திலகமாக இட்டு திஷ்டி கழிக்க வேண்டும். இதனை ஆராத்தி எடுத்த சுமங்கலிப் பெண்கள் இருவரும் செய்தல் வேண்டும்.
அமங்கல கிரியைகளுக்கு மாத்திரம் உரியவருக்கு இடது பக்கமாக உயர்த்தி ஆரத்தி செய்வார்கள்.
மாவிலை கட்டுதல்:
மங்கள வைபவங்களுக்கு பந்தலில் மாவிலை கட்டும்போது மாவிலையின் முன்பக்கத்திற்கு நூலை/கயிற்றை வைத்து முன்பக்கமாக மாவிலையை மடித்தல் வேண்டும்.
அமங்கல கிரியைகளின் போது மாத்திரம் மாவிலை பின்பக்கமாக மடிக்கப்படுகின்றது. 
பூரண கும்பம்
உலகமும் அதிலுள்ள தாவர சங்கமப் பொருள்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன. மறுபடியும் பிரளய காலத்தில் தண்ணீரிலேயே லயமாகி விடுவதாக வேதம் கூறுகின்றது. ஆகையால் ஆதிகர்த்தாவாகிய இறைவன் நீரின்மூலம் உருவ வழிபாட்டுக்குக் கொண்டுவருவதே பூரண கும்பத்தின் அர்த்தம்.
இப் பூரண கும்பத்தை மனித உடலாக பாவித்து அதில் இறைவனை தியான, ஜப, பிரார்தனையின்மூலம் யாக சாலையில் வைத்து யாகமும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. சக்தி வாய்ந்த ஸ்ரீ ஜாக்ஷரங்கள் கொண்ட மந்திரங்களில் கும்பநீர் சுத்தி செய்யப்பட்டு அதில் தெய்வ ஆவாகனம் செய்யப்படுகின்றது. இந்த நீர் கெடாதிருக்க, கராம்பு, ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம் , குங்குமப்பூ முதலிய திரையங்கள் சேர்க்கப்பட்டுகின்றன. அஷ்டலக்ஷ்மிகளின் கடாட்ஷம் நிறைந்திருக்க மாவிலைவைக்கப்படுகின்றது. தேங்காய், மஞ்சள், குங்குமம், பூ, தர்ப்பை, கூச்சம், ஸ்வர்ணம், அக்ஷதை ஆகிய எட்டு மங்களப் பொருள்களால் கும்பம் அலங்கரிக்கப்படுகின்றது. 
கும்ப தத்துவம்
மங்கள காரியங்களுக்காக வைக்கப்படும் நிறைகுடத்தில் 5 மாவிலைகள் இடம் பெறுகின்றன. இவ் ஐந்து மாவிலைகளும் ஐம்புலன்களையும் நினைவு படுத்துவதாக அமைகின்றன. குடமும் நீரும் நமது உடலை நினைவு படுத்துவதாகும். நிறைகுடமாகிய பூரண கும்பத்தை ஒரு முழுமதியாக ஒப்பிட்டார் கம்பர். எப்படியிருப்பினும் மனித உடல் ஐம்புலன், சிரசு, இவறை அடக்கும் கருவியாக பூரணகும்பம் இடம்பெறுகின்றது. பூரண கும்பம் இல்லாத சடங்குகளே இல்லை என்றே கூறலாம்.

சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்!

சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்!



ந்தோஷிமாதாவின் விரதம் அனைவருக்கும் எளிமையானது பலன் தருவதில் வலிமை மிக்கது. சந்தோஷிமாதா விரதம் அனைவருக்கும் உரியது என்றாலும் பெண்களுக்கு மிகவும் ஏற்றது; சிறந்தது. அந்த விரதத்தை மேற் கொள்ளுவதால் சகல மங்களங்களும் உண்டாகும். சந்தோஷிமாதா விரதத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் தொடங்க வேண்டும். அதுமுதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூஜை செய்துவர வேண்டும். எண்ணம் கைகூடியபின் அந்த வெள்ளியன்று பூஜையைப் பூர்த்தி செய்து விடலாம். இந்த விரதத்திற்கு மஞ்சள்பொடி, குங்குமம், வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், சந்தனம், திரி நூல், நெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய், மாவிலை, பூக்கள் இவற்றை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். சந்தோஷிமாதாவுக்கு மிகவும் உகந்தது வறுத்த கடலையும், வெல்லமுமே ஆகும். அவற்றை அவசியம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
விரதத்தை வீட்டிற்குள்ளேயோ, வெளியேயுள்ள தனியான இடங்களிலோ, கோயில்களிலோ செய்யாலம். எங்கும் செய்தாலும் செய்யுமிடம் மிகவும் அமைதியும், தூய்மையும் உடையதாக இருக்க வேண்டும். மேடை ஒன்றை அமைத்து அதன் மீது சந்தோஷிமாதா படத்தை வைத்துச் சக்திக்குத் தக்கவாறு பூக்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். படத்தின் முன் குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். தீர்த்தம் நிறைந்த செம்பை (கலசம்) வைக்க வேண்டும். அதற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இவைகளால் அலங்காரம் செய்ய வேண்டும். செம்பிற்குள் அவரவர்கள் சக்திக்கேற்ப நாணயம் ஒன்றைப் போட வேண்டும். பின்னர் செம்பின் மீது மாவிலைகளை வைத்து அதன் மீது தேங்காய் ஒன்றை வைக்க வேண்டும். அதற்குச் சந்தனத்தாலும், பூக்களாலும் அலங்காரம் செய்ய வேண்டும். மஞ்சள் பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து மஞ்சளினால் பிள்ளையார் பிடித்துச் கலசத்திற்கு எதிரில் வைத்துக் கொள்ள வேண்டும். கிண்ணம் ஒன்றில் கொஞ்சம் வறுத்த கடலையையும் வெல்லத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கையில் கொஞ்சம் வறுத்த கடலையும், வெல்லமும் எடுத்துக் கொண்டு, எண்ணிய காரியம் நிறைவேற வேண்டும் என்று மனதில் திடமான நம்பிக்கையுடன் சங்கல்பம் செய்து, விக்னேச்சுவர பூஜையையும், சந்தோஷிமாதா பூஜையையும் செய்ய வேண்டும். பிறகு சந்தோஷி மாதாவின் கதையைப் பக்தி சிரத்தையோடு படிக்க வேண்டும். அல்லது பிறரைப் படிக்கச் சொல்லி கேட்க வேண்டும்.
கதை படித்து முடிந்ததும் மாதாவைப் பற்றிய ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு ஆரத்தி எடுக்க வேண்டும். அதன் பின் கலசத்தில் உள்ள நீரைப் பூஜைக்கு வந்தவர்களுக்குத் தீர்த்தமாகக் கொடுத்து வீடு முழுவதும் தெளித்தபின், மீதி உள்ள ஜலத்தைத் துளசிச் செடிக்கு ஊற்ற வேண்டும். நினைத்த காரியம் கை கூடிய பிறகு விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்கின்ற அன்று பூரி, முந்திரிப் பாயசம் வறுத்தகடலை இவற்றை நைவேத்தியம் செய்யவேண்டும். பின் எல்லோருக்கும் பிரசாதங்களைக் கொடுக்க வேண்டும். வீட்டில் மைத்துனர் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் எட்டுப் பேருக்கு உணவு படைக்க வேண்டும். அல்லது வெளியார் குழந்தைகள் எட்டுப் பேருக்கு உணவு படைக்க வேண்டும். இவர்களில் யாருக்கும் கண்டிப்பாகத் தட்சிணை ரொக்கமாகக் கொடுக்கக் கூடாது. விரதம் தொடங்கி விரதம் பூர்த்தியாகிறவரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருப்பவர்கள் புளியோ, புளிப்புப் பதார்த்தங்களோ தயிர், மோர் கண்டிப்பாகக் சாப்பிடக்கூடாது. விரதம் பூர்த்தியாகின்ற அன்று விரதம் இருக்கின்றவர்கள் புளிப்புச் சாப்பிடாமல் இருப்பதோடு மற்றவர்களுக்கும் புளிப்புப் பொருட்களை கண்டிப்பாக கொடுக்கவும் கூடாது. சந்தோஷி மாதா விரதத்தை மேற்கொள்பவர்களுக்கும் அதற்கு உதவுபவர்களுக்கும் எல்லாவிதமான சௌபாக்கியங்களும் உறுதியாக உண்டாகும்.



திங்கள், 19 பிப்ரவரி, 2018

மாசிமகம் தரும் மகத்தான வாழ்வு

மாசிமகம் தரும் மகத்தான வாழ்வு

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருப்பதான சேர்க்கை நடைபெறும். இந்தச் சேர்க்கை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. ஆண்டு தோறும் வருவது மாசிமகம்.

கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. மாசிமகத்தன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி உள்ளிட்ட பன்னிரெண்டு புண்ணிய நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை நீக்கவும் தங்களின் புனிதத் தன்மையை மீட்டெடுக்கவும் ஆதிகும்பேஸ்வரர் கோவில் திருக்குளத்திற்கு மாசிமகத்தன்று வருவதாக ஐதீகம்.
கும்பம் நின்ற இடம்
தொடர்புடைய படம்
பிரளயம் ஏற்பட்டு உலகமே அழியும் காலமும் வந்தது. இந்த நேரத்தில் உயிர்களைக் காக்குமாறு சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். பல புண்ணியத் தலங்களில் இருந்து மண், அமுதம், ஜீவ வித்துக்கள் ஆகியவற்றை ஒரு கும்பத்தில் பாதுகாப்பாக சேகரிக்கச் செய்தார் சிவபெருமான். அக்கும்பத்தில் அதாவது மண் குடத்தில் நான்கு பக்கமும் நான்கு வேதங்களை வைத்து, வில்வத்தால் அர்ச்சித்து உயரமான மேருமலையின் உச்சியில் வைக்கும்படி கூறினார்.
பிரளயம் சூழ்ந்தது. அனைத்து உயிர்களும் அடித்துச் செல்லப்பட்டன. அமுதம் மற்றும் ஜீவ வித்துக்கள் வைக்கப்பட்ட கும்பம், பிரளயத்தில் அடித்து வரப்பட்டு ஒரு இடத்தில் தட்டுப்பட்டு நின்றது. பிரளயம் வடிந்ததும் வேடன் உருவெடுத்து வந்த சிவபெருமான், அம்பெய்து குடத்தை உடைத்து மீண்டும் உயிர்கள் தழைக்கச் செய்தார்.
பிரளயத்தில் அடித்து வரப்பட்ட கும்பம் நின்ற இடமே கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது. உயிர்களைக் காத்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாசிமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

வருண பகவானுக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்பட்டதால், பிரம்ஹத்தி என்ற பூதம் வருணனைக் கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டது. வருணன் சிவனை வேண்ட, மாசி மகத்தன்று அத்துன்பத்தில் இருந்து வருணனை விடுவித்தார் அவர். அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்கள் நீங்கும் என்றும் கூடுதலாக வரமளித்தார் சிவன்.
அம்பிகை தாட்சாயிணியாக அவதரித்த தினம் மாசிமகம் என்று கந்தபுராணம் கூறுகின்றது. கயிலையில் பார்வதியும் சிவனும் அளவளாவிக் கொண்டிருந்தபோது, பரமசிவன் பேரும், குணமும், உருவமும், இல்லாத தேவாதி தேவர்கள் எல்லாம் சக்தியால் அருவுருவமாகவே தெய்வ ஆட்சி செய்கிறோம் என்று கூறினார். அப்போது பார்வதிக்குத் தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்ற எண்ணம் மேலோங்கியது. சிவபெருமானோ தான் இல்லாவிட்டால் எதுவும் இயங்காது என்று கூறித் தனித்திருக்க, உலகம் இயங்காது ஜடமாகியது. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற ஈசனின் இத்திருவிளையாடலைக் கண்ட பார்வதிதேவி சிவனின் சக்தியை அறிகிறார்,
இந்த நேரத்தில் சிவனுக்கு, தான் தட்ச பிரஜாபதிக்கு கொடுத்த வரம் நிறைவேறும் தருணம் இது என்பதை உமைக்குச் சொல்லி, யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவம் இருக்க வேண்டுகிறார். அவ்வாறே தேவியும் செய்கிறார்.
இந்நிலையில் மாசி மகத்தன்று தட்ச பிரஜாபதி தன் மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் நீராடினான். அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைத் தொட்ட உடனேயே அது பெண்ணுருவாக மாறியது. இது சிவனின் வரம் என்பதை அறிந்து, தட்சன் அத்தெய்வப் பெண்ணுக்கு தாட்சாயிணி என்று பெயர் சூட்டினான். தாட்சாணியாக, பார்வதி அவதரித்த தினம் மாசிமகம்.
பெருமாள் வராக அவதாரம் எடுத்து, பாதாளத்தில் இருந்து பூமியை வெளிக்கொணர்ந்த நாளும் மாசி மகம்தான். அதனால் வைணவத் தலங்களிலும் தீர்த்தவாரி நடைபெறும்.
மாசிமக தினத்தன்று கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்திற்கு வருவார்கள். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன.
மாசிமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருக்குளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி, சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது. இந்நாளில் இங்கு வந்து தீர்த்தமாட இயலாதவர்கள், வீட்டில் நீராடும்பொழுது, புண்ணிய நதிகளும், ஏழு கடலும் இந்த நீரில் கலக்கட்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த நன்னாளில் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுதல் பல நன்மைகளைத் தரும். இச்சிறப்பினை புராணக் கதைகள் எடுத்து இயம்புகின்றன.

கல்யாணத்தடை நீக்கும் முருகன் வழிபாடு


கல்யாணத்தடை நீக்கும் முருகன் வழிபாடு 

ப்போதும் இளமையானவனான அழகன் முருகன், பக்தர்களுக்கு அருள்வதில் மிகப் பெரியவன். அந்த ஏரகச் செல்வன் நம்மை ஏறெடுத்துப் பார்த்தால், காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெண்களுக்கு உண்டாகும் தோஷங்கள் அனைத்தும் விலகும். கந்தவேளை வழிபட, அவனைப் போலவே அழகான ஆண் மகவு, பொற்சிலையாய்ப் பிறக்கும். 
திருவடியும் தண்டையும் சிலம்பும் பூடுருவப்
பொருவடி வேலும் கடம்பும் தடம் புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குருவடிவாய் வந்தென் உள்ளம் குளிரக்குதி கொண்டனவே
என்று கந்தரலங்காரப் பாடலில், முருக வழிபாட்டுப் பெருமையைப் போற்றிப் பரவுகிறார் அருணகிரிநாதர்.  
 செந்தமிழ்க் கடவுளின் திருவருளால் அங்காரக தோஷம் நீக்கும் அற்புதமான ஒரு வழிபாட்டை அறிவோம்.

வீட்டிலேயே செய்யும்  வழிபாடு

ஒரு வளர்பிறைச் செவ்வாய்க்கிழமை அன்று துவங்கி, தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள் இந்த பூஜையைச் செய்தல் வேண்டும்.
அதிகாலையில் குளித்து மடியுடுத்திக்கொண்டு, வீட்டு பூஜை அறையில் சுத்தமான மனைப் பலகையில் பச்சரிசி மாவினால் சடாட்சர கோலம் போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வைக்கவேண்டும். கோலத்தில் எழுதப்பட்டுள்ள, 'ஓம் சரவணபவ’ என்ற எழுத்துக்கள் மேல் செவ்வரளி மலர்களை வைக்க வேண்டும். அந்த மனைப் பலகைக்கு இருபுறமும் குத்து விளக்குகளும், முன்பக்கத்தில் கல்யாண கோல முருகன் படமும் வைக்கவேண்டும்.
அன்றைய திதி- வாரம், நட்சத்திரம், யோகம் உள்ளடக்கிய பஞ்சாங்கக் குறிப்புகளைச் சொல்லிக்கொண்டு 'மம, அங்காரக தோஷ நிவர்த்தியர்த்தம் சடாட்சர பூஜாம் கிருத்வா’ என்று சொல்லவேண்டும். அடுத்து,
'ஓம் கார்த்திகேயாய வித்மஹே குக்குட த்வஜாய தீமஹி
தந்தோ சண்முக பிரசோதயாத்’
என்ற சண்முக காயத்ரியை இரண்டு முறையும்,
'ஓம் சக்தி அஸ்தம் விரூபாட்சம் சிகி வாகம் ஷடானனம்
தாருணம் ரிபுரோகக்னம் பாவயே குக்குடத்வஜம்’
என்ற முருகனின் தியானச் சுலோகத்தை மூன்று முறையும் சொல்லவேண்டும். தொடர்ந்து செவ்வரளி, முல்லை மலர்களைக் கலந்து வைத்துக்கொண்டு, கீழ்க்காணும் போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும்.
ஓம் வேலனே போற்றி
ஓம் வரமருள் தேவா போற்றி
ஓம் சக்தி மைந்தனே போற்றி
ஓம் சரவணனே போற்றி
ஓம் தோஷம் அகற்றுவாய் போற்றி
ஓம் மங்களனே போற்றி
ஓம் சிவனார் மகவே போற்றி
ஓம் வள்ளி மனதோய் போற்றி
ஓம் அங்காரக் கடிவே போற்றி
ஓம் குரு குணனே போற்றி
ஓம் மயில்வாகனா போற்றி
ஓம் சேவற்கொடி செவ்வேளே
              போற்றி, போற்றி!
இப்படி மும்முறை கூறி, 'சரவணபவ’ எனும் அட்சரங்களில் ஒவ்வொரு மலராகப் போட வேண்டும்.

பிறகு, வெல்லம் கலந்த தினைமாவு, தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை வைத்துப் படைத்து, முல்லைமலர், செவ்வரளி (அரளி கிடைக்காவிடில் செம்பருத்தி) மலர் கலந்து கைகளில் வைத்துக் கூப்பியபடி...
நாளென் செயும் வினைதானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங் கொடுங்கூற்றென் செயும் குமரேசரிரு
தாளும் சிலம்பும் சலங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
என்று முருகனின் துதி கூறி, சடாட்சர கோலத்தில் மலரிட்டுக் கற்பூர ஆரத்தி செய்து, விபூதி குங்குமம் எடுத்துக்கொண்டு ஆறு முறை திருச்சுற்றுதலும் மூன்று முறை ஆத்ம பிரதட்சிணமும் (தன்னையே சுற்றிவரல்) செய்ய வேண்டும். முல்லை மலர் குருபகவானுக்கு உரிய மலர். குரு பலன் அள்ளித் தரும் திருச்செந்தூர் செந்திலாண்டவனும் இந்த வழிபாட்டில் சேர்வதால், குருபலம் இல்லாததாலும், செவ்வாய் தோஷத்தாலும் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு வருந்துவோருக்கு இந்த வழிபாடு மிகவும் நலம் பயக்கும். வீட்டில் விரைவில் கெட்டிமேளம் கொட்டும்.

ஆருத்ரா தரிசனம் திருவாதிரை திருநாள்

ஆருத்ரா தரிசனம் திருவாதிரை திருநாள் தொடர்புடைய படம்
மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று “திருவாதிரை” திருவிழா “ஆருத்ரா தரிசனம்” திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 
ஆருத்ரா என்ற வடமொழி சொல் தமிழில் “ஆதிரை” என்று அழைக்கப்படுகிறது. அதோடு திரு என்ற அடைமொழி சேர்த்து “திருவாதிரை” என்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். இந்த ஆனந்தத் திருநாளில் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானை சிதம்பரத்திற்குச் சென்று தரிசிப்பது முக்தியைத் தரும்.
சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் “திருவாதிரை”.
 பதஞ்சலி – வியாக்ரபாதர் :-
பாற்கடலில் பள்ளிகொண்ட பரமபதநாதனாம் ஸ்ரீமகாவிஷ்ணு திடீரென்று மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். இதைக் கண்ட ஆதிசேஷன் தங்களது ஆனந்தத்திற்குக் காரணம் என்ன? என்று கேட்க, நாராயணரோ ஆடல்வல்லான் சிவபெருமான் திருவாதிரை நாளன்று நடராஜராக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்கு காரணம் என்றார்.
நாராயணரையே மகிழ்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண ஆதிசேஷனுக்கு ஆவல் அதிகமாகியது. தன்னுடைய ஆசையை பரமபதநாதனிடம் சொல்ல, அவரோ ஆதிசேஷனுக்கு ஆசி அளித்து அனுப்பினார்.
பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார் “ஆதிசேஷன்”. ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் உருக்கொண்டு பூலோகத்தில் தவம் இருந்தார். பல ஆண்டுகளாகத் தவம் செய்து, தவம் நிறைவு பெறும் காலம் வந்தது.
இவ்வாறு தவம் செய்து கொண்டிருக்கையில் பதஞ்சலி முனிவர் முன்பு எம்பிரான் சிவபெருமான் தோன்றி திருக்காட்சி அளித்தார். அவரை நமஸ்காரம் செய்து வணங்கினார் பதஞ்சலி முனிவர். சிவபெருமான் அவரிடம் நீ என்னைத் தவம் செய்த நோக்கம் போலவே, வியாக்ரபாதரும் என்னை நோக்கித் தவம் செய்து காத்துக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் இருவரும் தில்லை வருவீர்களாக!. உங்களுக்கு யாம் திருத்தாண்டவ திருக்காட்சியைக் காட்டி அருளுவோம் என்று கூறிவிட்டு மறைந்தார்.
பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர் இருவரும் சிதம்பரம் – தில்லை நடராஜர் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள்.
இந்த உலகமானது நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்புகளால் ஆனது. அவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது எம்பிரான் சிவபெருமானின் ஆனந்த நடனம் தான்.
இறைவன் அசைவதால் தான் உலகமே அசைகிறது. “நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே” என்பதைப்போல் எம்பிரானின் நடனம் தான் உலகை வாழ்விக்கிறது. நடராஜரின் நடனம் மட்டும் மொத்தம் – 108. இதில் சிவபெருமான் மட்டும் தனித்து ஆடியது – 48.
அங்கு இரண்டு முனிவர்களும் எம்பிரான் சிவபெருமானின் நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். மார்கழி திருவாதிரையான அன்று எம்பிரான் ஆடல்வல்லான் நடராஜரின் தரிசனத்தைக் கண்டால் தீராத நோய்களும், பாவங்களும் விலகும். தில்லையில் சிவபெருமானின் நடனத்தைப் பார்க்க முக்தி கிடைக்கும்.
 சேந்தானார் வரலாறு :-
சேந்தனார் என்பவர் ஒரு விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஒரு ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்காவது உணவளித்துவிட்டு பிறகு  தான் உண்ணுவது சேந்தானாரின் கடமையாக இருந்தது.
சேந்தனாரின் பக்தியை உலகுக்கு உணர்த்த சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.
ஒருநாள் மழைபெய்தது. அதனால் விறகு விற்கமுடியவில்லை. விறகு விற்றால் தான் அரிசி வாங்குவதற்குப் பணம் கிடைக்கும். எனவே, அவரால் அன்று சமையல் சமைக்க முடியவில்லை.
மாறாக அரிசியைப் பொடித்து மாவாக்கி, அதில் களி செய்து சிவனடியார் யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால், யாரும் தென்படவில்லை. மனம் நொந்தவரின் வீட்டில் சிவபெருமான் சிவனடியார் வேடம் பூண்டு சேந்தனாரின் வீட்டிற்குச் சென்றார்.
சேந்தனாரிடம் உண்ண ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டார். அவரோ அகமகிழ்ந்து களியை அவருக்கு அன்போடு அளித்தார். அதை அன்போடு மனமகிழ்ந்து ஏற்றுக் கொண்டார் “சிவபெருமான்”. எஞ்சியிருந்த களியை எனக்கு அடுத்த வேளை உணவிற்குத் தருவாயா? என்று சேந்தனாரிடம் கேட்டு வாங்கிக் கொண்டார் “சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான்”. அன்று இரவில் சிதம்பரத்திலுள்ள அரசனின் கனவில் சிவபெருமான் காட்சி கொடுத்தார். சேந்தனார் என்ற பக்தனின் அன்புக்குக் கட்டுப்பட்டு, தான் சேந்தனார் வீட்டில் களி உண்ட செய்தியைக் கூறினார்.
 சிதம்பரம் :-
மறுநாள் அதிகாலை வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் திருக்கோவிலின் கருவறையைத் திறந்தார்கள். அப்போது எம்பிரானைச் சுற்றி களிச்சிதறல்கள் இருப்பதைக் கண்டார்கள். இது என்ன அதிசயம் என்று வியந்தார்கள்.
உடனே, அரசருக்குச் செய்தியைத் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட அரசன் நேற்றிரவு தான் கண்ட கனவை நினைத்து மகிழ்ந்தான்
அப்போது சிதம்பரத்தில் தேர்த்திருவிழா நடந்து கொண்டிருந்தது. அரசன் உட்பட அனைவரும் அங்கு இருந்தார்கள். சேந்தனாரும் அந்த தேர்த் திருவிழாவிற்கு வந்திருந்தார்.
அரசர் மற்றும் அனைவரும் எம்பிரான் சிவபெருமானைத் தேரில் அமர்த்தி, தேர்வடம் பிடித்தார்கள். தேர் நகரவே இல்லை. மழைக்காரணமாக சேற்றில் சிக்கிய தேர் அசையாமலும் இருந்தது. மன்னன், மக்கள் அனைவரும் மனம் வருந்தினார்கள்.
அப்போது ஓர் அசரீரி கேட்டது. “சேந்தா நீ பல்லாண்டு பாடு” என்று அசரீரி கேட்டது. சேந்தனாரோ ஒன்றுமே அறிந்திடாத யான் எப்படிப் பல்லாண்டு பாடுவேன்? என்று எம்பிரானை வணங்கித் தொழுது நின்றார். எம்பிரானோ யாம் உனக்கு அருள்புரிவோம்! என்று அருள் புரிந்தார்.
அப்போது சேந்தனார் “மன்னுகதில்லை” என்று தொடங்கி “பல்லாண்டு கூறுதுமே” என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் எம்பிரானை வாழ்த்தி வணங்கிப் பாடினார். உடனே, தேர் அசைந்தது.
அரசரும், சிவனடியார்களும் சேந்தனாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள். சேந்தனாரோ “அரசன் அடியவனின் காலில் விழ வேண்டாம்” என்று தயங்கிக் கூற, அரசரோ நடராஜப் பெருமானே தங்களின் வீட்டிற்குக் களி உண்ண வந்தார் என்றார்.
அதைக்கேட்ட சேந்தனார் எம்பிரான் அடியவர்கள் மீது வைத்திருந்த கருணையை எண்ணி, இந்த அடியேனின் வீட்டிற்கும் வந்ததை நினைத்து பரவசமடைந்தார்.
இதன் காரணமாக திருவாதிரை அன்று களி உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அன்றைய தினத்தில் ஆடல்வல்லானின் அனைத்துத் திருத்தலங்களிலும் களி படைக்கப்படுகிறது.
அதனால் தான் “திருவாதிரை அன்று ஒருவாய்க்களி” பழமொழி வந்தது. ஆதிரை முதல்வனுக்கு களி செய்து வணங்கி அவரின் திருவடியை அடைவோமாக!.
 திருவாதிரைக் களி செய்வது எப்படி?
தேவையானவை:
அரிசி – ஒரு கப்
பொடித்த வெல்லம் – ஒன்றரை கப்
தண்ணீர் – இரண்டரை கப்
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு கப்
முந்திரி, ஏலக்காய்த்தூள், நெய் – சிறிதளவு.
செய்முறை :-
அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். அரிசியை ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.
அரிசி ரவையில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஆவியில் வேக வைக்கவும். கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் நீர் சேர்த்து, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.
வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் காய வைத்து வடிகட்டி, கொதிக்கவிடவும். கொதிக்கும் பாகில் அரிசி ரவை, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, கொஞ்சம் நெய் விட்டு கிளறவும். இது வெந்ததும், நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளை தூவிக் கலந்து இறக்கவும்.
இதைத் திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு உபவாசம் இருந்து, களியைப் படைத்துவிட்டுப் பின்பு தான் உண்ண வேண்டும்.
 திருஉத்திரகோசமங்கை :-
முதன் முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்ட தலம் எது தெரியுமா?. “திருஉத்திரகோசமங்கை” இங்கு தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது.
நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் இயற்கையாகவே மென்மையானது. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை கொண்டது. “மத்தளம் முழங்க மரகதம் உடைபடும்” என்ற சொல்லிற்கு ஏற்ப, ஒலி ஒளி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையைப் பாதுகாக்கிறார்கள்.
ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் கலையப்பட்டு அன்று இரவே மீண்டும் சந்தனம் பூசுவது வழக்கமாக இருக்கிறது.

 ஆருத்ரா தரிசனம் அன்று  காலை 32 வகையான அபிஷேகங்கள் செய்யப்படும். 32 வகையான அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை நடைபெறும். அதன் பின் வேறு எங்குமே நடைபெறாத வகையில் சிறப்பாக ஒன்று நடைபெறும்.
அது என்னவெனில்? 32 வகையான அபிஷேகம் செய்ததும் சுவாமிக்கு பசி எடுத்து விடுமாம். இதனால் சுவாமிக்கு முதலில் நைவேத்தியம் சமர்ப்பிக்கிறார்கள். அதன் பின்பு அலங்காரம் நடைபெறும்.
நடராஜர் திருவடிகளே சரணம்!!!.
ஓம் சிவாய நமஹ!!!.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும்  இறைவா போற்றி!.

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

அனுமன் சாலீசாவை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்:

தொடர்புடைய படம் 

அனுமன் சாலீசாவை  உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்:

 பழங்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற அனுமன் பக்தர் கோஸ்வாமி துளசிதாஸ் என்பவர் படைத்த கவிதை உருவாக்கத்தில் மிகவும் உத்தமமானது  இந்த அனுமன் சாலீசா மந்திரம்.இதைப் பாராயணம் செய்வதால் அனுமனின் ஆசீர்வாதம் கிடைத்து அனைத்து விதமான கவலைகளும்  நீங்கிவிடும்.சனி தேவனால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமன் சாலீசாவைப்  பாராயணம் செய்ய வேண்டும்.

அனுமன் சாலீசா குறிப்பிட்ட நேரம் மற்றும் குறிப்பிட்ட முறையில் உச்சரிக்க வேண்டும். இதனை இரவு நேரங்களிலும் மற்றும் அதிகாலையிலும் படிக்கலாம்.அனுமன் சாலீசாவை இரவில் படித்தால் இரவில் ஏற்படும்  அனைத்து பயங்களும் போகும்.முக்கியமாக சனியினுடைய தாக்கத்தால் மிகுந்த இன்னல்களுக்கு ஆளானவர்கள் சனிக்கிழமை இரவுகளில் அனுமன் சாலீசாவை 8 முறை உச்சரிக்க வேண்டும்.அற்புதமான இந்த அனுமன் சாலீசாவை  ஒரு முறை உச்சரித்தால் “ஓம்” எனும் மந்திரத்தை 108 முறை உச்சரித்ததற்கு சமமாகும்.
அனுமன் சாலீசாவை  உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்:
  • அதிகாலையில் எழுந்து குளித்தவுடன் அனுமன் சாலீசாவை உச்சரிப்பதன்  மூலம் உங்களது நாள் நன்றாக அமையும்.
  • அனுமன் சாலீசாவை தொடர்ந்து உச்சரித்து வந்தால் ஆன்மீக  உணர்வை கொடுக்கும்.
  • இதன் அர்த்தம் புரிந்து பாராயணம் செய்யும் போது மனோ தைரியத்தைக் கொடுக்கும்.
  • அனுமன் சாலீசாவை நோயுற்ற நபர் தினமும்  உச்சரிக்கும் போது நோயற்ற வாழ்வைப் பெறுவர்.
  • இந்த மந்திரம் வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்சனைகளைக் கூட தீர்த்து வைக்கும்.சகல ஐஸ்வர்யங்களும் தரும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.
  • அனுமன் சாலீசா நெடுந்தூரப் பயணத்தின் போது உச்சரித்தால்   விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் பயணம் வெற்றிகரமாக  அமையும்.
  • புதுமணத் தம்பதிகள் அனுமன் சாலீசாவை ஒரு நாளைக்கு  100 முறைக்கு மேல் உச்சரித்தால் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான திருமண வாழ்க்கையைப் பெற்று வாழ்வார்கள்.
  • குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தேகத்தையும், நீண்ட ஆயுளையும் அனுமன் சாலீசா தரும்.
  • அனுமன் சாலீசா தொடர்ந்து பாராயணம் செய்வதால் மாணவர்கள் தங்கள் தேர்வுகளை சிறப்பாக எழுதி நல்ல மதிப்பெண்களை பெற  முடியும்.
  • அனுமன் சாலீசா மந்திரம் நாம் செய்த பாவங்களைப் போக்கி பல கோடி புண்ணியத்தை தரும்.
  • இரவு நேரத்தில் உச்சரித்தால் உங்கள் வாழ்க்கையிலிருந்து பேய் பயம் போகும். மனதில் தைரியம் பிறக்கும்.
  • சனி தேவனால் பாதிக்கப் பட்டவர்கள் அனுமான் சாலீசாவை விடியற் காலையில் குளித்த பிறகும், இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் முன்பும் எட்டு முறை பாராயணம் செய்தால் அவர்களுக்கு சனி பகவானின் அருள் கிடைத்து அனைத்து நன்மைகளும் நடக்கும்.
  • ஒரு காரியத்தில் வெற்றி பெற அல்லது அனுகூலம் கிடைக்க  மூலா நட்சத்திர நாளன்று அனுமன் சாலீசாவை 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
  • இதைத் தொடர்ந்து பாராயணம் செய்யும் பட்சத்தில் உடலின்  காயங்கள் மற்றும் நோய் பிணிகள் வேகமாக குணமாகும்.
  •  அனுமன் சாலீசாவை தினமும்  உளமார  உச்சரித்தால் உங்கள்      வீட்டில் நல்லுணர்வு பிரதிபலிக்கும் மற்றும் ஆன்மீக சிந்தனை  மேலோங்கி இருக்கும்
  • இவ்வாறு இந்த உன்னதமான மந்திரமாகிய அனுமான் சாலீசாவை தினமும் பாராயணம் செய்தால் வாழ்வில் அனைத்து செல்வங்களும், அஷ்ட ஐஸ்வர்யங்களும்,காரிய அனுகூலங்களும் கிடைக்கும் .
  • இரவு நேரத்தில் உச்சரித்தால் உங்கள் வாழ்க்கையிலிருந்து பேய் பயம் போகும். மனதில் தைரியம் பிறக்கும்.
  • சனி தேவனால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமன் சாலீசாவை விடியற் காலையில் குளித்த பிறகும்,
  • இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் முன்பும் எட்டு முறை பாராயணம் செய்தால் அவர்களுக்கு 
  • சனி பகவானின் அருள் கிடைத்து அனைத்து நன்மைகளும் நடக்கும்.
  • ஒரு காரியத்தில் வெற்றி பெற அல்லது அனுகூலம் கிடைக்க  மூலம்  நட்சத்திர நாளன்று அனுமன் சாலீசாவை 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
  • இதைத் தொடர்ந்து பாராயணம் செய்யும் பட்சத்தில் உடலின்  காயங்கள் மற்றும் நோய் பிணிகள் வேகமாக குணமாகும்.
  •  அனுமான் சாலீசாவை தினமும்  உளமார  உச்சரித்தால் உங்கள்   வீட்டில் நல்லுணர்வு பிரதிபலிக்கும் மற்றும் ஆன்மீக சிந்தனை  மேலோங்கி இருக்கும்.
  • இவ்வாறு இந்த உன்னதமான மந்திரமாகிய அனுமன் சாலீசாவை தினமும் பாராயணம் செய்தால் வாழ்வில் அனைத்து செல்வங்களும், அஷ்ட ஐஸ்வர்யங்களும்,காரிய அனுகூலங்களும் கிடைக்கும் .

கல்வி செல்வத்தை பெருக்க உதவும் சரஸ்வதி மந்திரம்!!


saraswati images க்கான பட முடிவு

ஆன்மீக நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.எல்லோருக்கும் நல்ல விஷயங்களை பகிர வேண்டும்
 என்பதே என் நோக்கம்.மனித பிறவி மிகவும் மகத்தானது.அது நமக்கெல்லாம் கிடைத்தது 

கடவுளின் கருணை எனலாம்.

இந்த பிறவியில் எந்த அளவு
கடவுளை வணங்குகிறனோ அது நமக்கு வரவிருக்கும் தீவினைகளை அகற்றி நல்வினையை
கொடுக்கும்.ஆதலால் எப்பொழுதெல்லாம் நமக்கு நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம்
இறைவனின் நாமங்களை உச்சரியுங்கள்.
இந்த பதிவில் நம் அன்பு செல்வங்களுக்கு படிப்புத்திறன் வளர சொல்லப்படும் 108போற்றிகளை
எழுதியுள்ளேன்.படித்து பயன் பெறுக!
 

கல்வி செல்வத்தை பெருக்க உதவும் சரஸ்வதி மந்திரம்!!


கல்வியை  வழங்கும் தாயாக சரஸ்வதியை நாம் அனைவரும் வணங்குகிறோம். சரஸ்வதியை உங்கள் குழந்தைகளோ அல்லது நீங்களோ வணங்கும் போது இந்த மந்திரத்தை சொல்லி வணங்கினால் குறையாத கல்வி செல்வம் கிடைக்கும்.
  1. ஓம் அறிவுருவே போற்றி
  2. ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி
  3. ஓம் அன்பின் வடிவே போற்றி
  4. ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி
  5. ஓம் அறிவுக்கடலே போற்றி
  6. ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
  7. ஓம் அன்ன வாகினியே போற்றி
  8. ஓம் அகில லோக குருவே போற்றி
  9. ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி
  10. ஓம் ஆசான் ஆனவளே போற்றி
  11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
  12. ஓம் ஆதாரசக்தியே போற்றி
  13. ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி
  14. ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
  15. ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி
  16. ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி
  17. ஓம் உண்மைப் பொருளே போற்றி
  18. ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி
  19. ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி
  20. ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி
  21. ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி
  22. ஓம் ஓங்கார வடிவினளே போற்றி
  23. ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
  24. ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி
  25. ஓம் கலை ஞானச் செல்வியே போற்றி
  26. ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி
  27. ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி
  28. ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
  29. ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி
  30. ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி
  31. ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி
  32. ஓம் குணக் குன்றானவளே போற்றி
  33. ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
  34. ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி
  35. ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி
  36. ஓம் சாந்த சொரூபினியே போற்றி
  37. ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி
  38. ஓம் சாரதாம்பிகையே போற்றி
  39. ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
  40. ஓம் சித்தியளிப்பவளே போற்றி
  41. ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி
  42. ஓம் சுத்தஞான வடிவே போற்றி
  43. ஓம் ஞானக்கடலானாய் போற்றி
  44. ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி
  45. ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
  46. ஓம் ஞானேஸ்வரியே போற்றி
  47. ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி
  48. ஓம் ஞான ஆசிரியையே போற்றி
  49. ஓம் ஞானத்தின் காவலே போற்றி
  50. ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
  51. ஓம் தகைமை தருபவளே போற்றி
  52. ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி
  53. ஓம் தாயான தயாபரியே போற்றி
  54. ஓம் தண்ணருள் தருவாய் போற்றி
  55. ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி
  56. ஓம் நவமி தேவதையே போற்றி
  57. ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
  58. ஓம் நன்னெறி தருபவளே போற்றி
  59. ஓம் நலம் அளிப்பவளே போற்றி
  60. ஓம் நாவிற்கு அரசியே போற்றி
  61. ஓம் நல்லவர்களின் மனமே போற்றி
  62. ஓம் நா நயம் அருள்வாய்போற்றி
  63. ஓம் நான்மறை நாயகியே போற்றி
  64. ஓம் நாவில் உறைபவளே போற்றி
  65. ஓம் நாதத்தின் தலைவியே போற்றி
  66. ஓம் நாத வெள்ளமானாய் போற்றி
  67. ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி
  68. ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி
  69. ஓம் நித்தம் வளர்பவளே போற்றி
  70. ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி
  71. ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி
  72. ஓம் பண்ணின் இசையே போற்றி
  73. ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி
  74. ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி
  75. ஓம் பிரணவ சொரூபமே போற்றி
  76. ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி
  77. ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி
  78. ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி
  79. ஓம் பூரண வடிவானவளே போற்றி
  80. ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி
  81. ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி
  82. ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி
  83. ஓம் மங்கல வடிவானவளே போற்றி
  84. ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி
  85. ஓம் மாயையை அழிப்பவளே போற்றி
  86. ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி
  87. ஓம் முற்றறிந்த அறிவே போற்றி
  88. ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
  89. ஓம் மூல மந்திர வடிவினளே போற்றி
  90. ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி
  91. ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
  92. ஓம் மேதையாக்குபவளே போற்றி
  93. ஓம் மேன்மை தருபவளே போற்றி
  94. ஓம் யாகத்தின் பலனே போற்றி
  95. ஓம் யோகத்தின் பயனே போற்றி
  96. ஓம் வழித்துணை வருவாய் போற்றி
  97. ஓம் வரம் அருள்பவளே போற்றி
  98. ஓம் வாணி சரஸ்வதியே போற்றி
  99. ஓம் வாக்கின் நாயகியே போற்றி
  100. ஓம் வித்தக வடிவினளே போற்றி
  101. ஓம் வித்யா லட்சுமியே போற்றி 
  102. ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி
  103. ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி
  104. ஓம் வெண்தாமரையினாளே போற்றி
  105. ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
  106. ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி
  107. ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
  108. ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி 
நன்றி வணக்கம்  

உங்கள் தோழி ஈஸ்வரி சரவணன்.
உங்கள் கருத்துகளை  எனக்கு எழுதினால் அது எனக்கு இன்னும் மேலும் மேலும் எழுத தூண்டுகோலாய் அமையும்.